» »தேனபிஷேகம் செய்யும் போது மட்டும் லிங்கத்தில் தோன்றும் அம்மன்..!

தேனபிஷேகம் செய்யும் போது மட்டும் லிங்கத்தில் தோன்றும் அம்மன்..!

Written By:

நம் பகுதியில், நம்மைச் சுற்றியுள்ள ஊரில் அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் குறித்து நாம் ஏதேனும் ஒரு வழியில் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் உள்ளது. கண் திறந்த பெருமாள், பால் குடிக்கும் அம்மன், வியர்க்கும் முருகன், பால் வடியும் சிலை என பல நிகழ்வுகளை நினைவுகூரலாம். அந்த வகையில், விழுப்புரம் அருகே ஓர் ஊரில் சிவலிங்கத்திற்கு தேனில் அபிஷேகம் செய்யும் போது மட்டும் கையில் கிளியுடன் அம்மன் தோன்றும் அதிசயம் அரங்கேறுகிறது. வாங்க இத்தகைய சிவ தலம் எங்கே உள்ளது ? என்ன சிறப்பு என்று, எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விழுப்புரம் மாவட்டம், கூத்தனூர் அடுத்தள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில். விழுப்புரத்தில் இருந்து சுமார் 74 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்திருத்தலத்திற்கு அரசூர், திருனவலூர், செங்குறிச்சி, இளவனசூர், தியாகதுர்கம் வழியாகப் பயணிக்க வேண்டும். அல்லது, மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் வழியாக சுமார் 62 கிலோ மீட்டர் பயணித்தாலும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை அடையலாம்.

Pinakapani vishwabarath

சிறப்பு

சிறப்பு


தேவர்களின் தலைவரான இந்திரன் அன்றாடம் ரிஷிவந்தியம் இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். ஆனால், அத்தலத்தில் இருந்த பார்வதிக்கும் அம்மனை அவர் வழிபடவில்லை. ஒரு நாள் கோபமடைந்த அம்மன், இந்திரனின் பால் குடத்தை மறைத்துவிட்டார். பால் குடத்தை காணாததால் மனமுடைந்த இந்திரன் கோவில் பலிபீடத்தில் தலையை மோதி உயிர்விட முயற்சித்த போது ஈசன் இந்திரன் முன் தோன்றி இனி பார்வதிக்கும் பாலாபிஷேகம் செய்யக் கூறினார். மேலும், இவ்வாறு அபிஷேகம் செய்யும் போது எனது உருவத்துடன் இணைந்து பார்வதியும் தோன்றும் எனக் கூறி சிவன் மறைந்தார். அன்று முதல் இன்று வரை தேனபிஷேக பூஜை செய்யும் தருணத்தில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஆண் பாதி, பெண் பாதியான தோற்றத்தில் கையில் கிளியுடன் அம்மனும், சிவனும் தோற்றமளிக்கின்றனர்.

G V Balasubramanian

திருவிழா

திருவிழா


சிவபெருமானுக்கு உகந்த நாளான சிவராத்திரி சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது. ஆனி மாத பிரம்மோற்சவத்தன்று சுமார் 10 நாட்கள் விழா எழுப்பப்படுகிறது. கார்த்திகைத் திங்கள் கிழமையில் மூலவருக்கு 108 சங்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யப்படுகிறது.

BishkekRocks

நடை திறப்பு

நடை திறப்பு


அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Aleksandr Zykov

வழிபாடு

வழிபாடு


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்தில் உள்ள சுயம்பு லிங்கத்திற்குப் பாலாபிஷேகம் செய்வதன் மூலம் விரைவில் குழந்தைப்பேரு அடைவதாகப் பக்தர்கள் இடையே கருத்துள்ளது. மேலும், சரிவர பேச்சு வராதவர்கள் சிவனுக்கு தேனில் அபிஷேகம் செய்து அத்தேனை பிரசாதமாக பெற்று சாப்பிட்டால் பேச்சு குறைபாடுகள் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.

wikimedia

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அர்த்தநாரீஸ்வரருக்கும், அம்பாளுக்கும் புது வஸ்திரம் படைத்து, அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Parvathisri

புராணக் கதை

புராணக் கதை


இப்பகுதியை ஆட்சி செய்து வந்த விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது கிடைத்த லிங்கமே இத்தலத்தில் உள்ள சுயம்பு லிங்கம். இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்தக் கோவில் துவாபரயுகத்தில் தோன்றியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில், ராமர், அகத்தியர், குக நமச்சிவாயர் உள்ளிட்டோரும் வந்து வழிபட்டதற்கான சான்றுகள் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது.

Arunankapilan

கோவில் வரலாறு

கோவில் வரலாறு


சிவனுக்கும், பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடைபெற்றுக் கொண்ருந்த போது தென் திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதைச் சமன் செய்ய அகத்தியரைத் தென் திசை நோக்கிச் செல்ல சிவன் பரிந்துரைத்தார். சிவனின் சொல்படி அகத்தியர் தென்னகத்தில் பல பகுதிகளில் தங்கி சிவ பெருமானுக்குப் பூஜைகள் செய்தார். அவ்வாறு ஒரு பகுதியில் அகத்தியர் பூஜையில் ஈடுபட்டிருந்த போது சிவன் திருமணக்காட்சி தந்தார். இக்காட்சியினை பிற மக்களும் கண்டு பிரார்த்திக்க வேண்டும் என அகத்தியர் வேண்டவே, எனக்கு அபிஷேகம் செய்து வழிபடும் போது நானும், பார்வதியும் இணைந்து அருள்பாலிப்போம் என சிவன் கூறினார். அதனாலேயே இன்றும் லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்கையில் இருவரும் இணைந்து தோன்றுவதாக கூறப்படுகிறது. ரிஷ்கள் பலர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் இப்பகுதி ரிஷிவந்தியம் என பெயர் பெற்றுள்ளது.

Richard Mortel

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தை எளிதில் அடையலாம். கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுர்கம் வழியாக சுமார் 22 கிலோ மீட்டர் பயணித்தாலும், திருக்கோவிலூரில் இருந்து சுமார் 23.6 கிலோ மீட்டர் பயணித்தாலும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவிலை அடையலாம். விழுப்புரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் இத்தலத்திற்குச் செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்