Search
  • Follow NativePlanet
Share
» »அதிரப்பள்ளி என்னும் அழகிய அருவிகளின் நகரம்

அதிரப்பள்ளி என்னும் அழகிய அருவிகளின் நகரம்

உலகநாயகன் கமலஹாசனின் திரை வாழ்க்கையில் திருப்புனையாக அமைந்த படம் என்றால் அது 'புன்னகை மன்னன்' தான். அந்த படத்தில் கமலஹாசனும் நாயகி ரேகாவும் ஒரு அருவியின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக இருக்கும். அந்த காட்சி தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

அதிரப்பள்ளி என்னும் அழகிய அருவிகளின் நகரம்

Photo: NIHAL JABIN

அந்த காட்சி எடுக்கப்பட்ட அதிரப்பள்ளி அருவி இன்றும் புன்னகை மன்னன் அருவி என்றே அழைக்கப்படுகிறது. திருச்சூரில் அமைந்திருக்கும் அதிரப்பள்ளியில் புன்னகை மன்னன் அருவியை தவிர மேலும் சில அழகான அருவிகள் உண்டு. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முகுந்தபுரம் தாலுக்காவில் அமைந்திருக்கிறது பசுமை நிறைந்த அதிரப்பள்ளி என்னும் ஊர். இங்கு கேரளத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை வளம் செழித்திருக்கிறது. வெள்ளி போன்று பாய்ந்தோடும் நீருடைய அருவிகள் இங்கே நமக்காகவே இருக்கின்றன.

அதிரப்பள்ளி அருவி:

அதிரப்பள்ளி என்னும் அழகிய அருவிகளின் நகரம்

Photo: sash jose

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் சாலக்குடி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது இந்த அதிரப்பள்ளி அருவி. 'இந்தியாவின் நயாகரா' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் அளவிற்கு பிரமாண்டமாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த அருவியின் மேல் சென்று பார்த்தால் அருவியை சுற்றியிருக்கும் பகுதிகளின் பசுமையை கண் குளிர காணலாம். அருவிகளை புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்களுக்கு இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது.

வழச்சல் அருவி:

அதிரப்பள்ளி என்னும் அழகிய அருவிகளின் நகரம்

Photo: Thangaraj Kumaravel

அதிரப்பள்ளி மலைக்கடுகளின் உள்ளே சோலையாறு பகுதியில் பாய்கிறது இந்த வழச்சல் அருவி. இந்த அருவி அமைந்திருக்கும் பகுதி செழிப்பான வன உயிரினங்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த வனப்பகுதியில் மட்டும் புலிகள், மான்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்ட வன விலங்குகள் வாழ்கின்றனவாம். மிகவும் செழிப்பான விவசாய நிலங்கள் உள்ள இந்த பகுதி இந்தியாவில் பல வகை பறவைகள் பாதுகாப்பாக வாழும் காடுகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்த பகுதியினுள் போக வனத்துறையிடம் முன் அனுமதியும், நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டியதும் அவசியம்.

சார்பா அருவி:

அதிரப்பள்ளி என்னும் அழகிய அருவிகளின் நகரம்

Photo: Neon

மேலே சொன்ன அருவிகளை போன்று இந்த அருவி பிரமாண்டமானதோ, மிக செழிப்பான பகுதியிலோ அமைந்திருக்கவில்லை என்றாலும் பருவ மலை காலங்களில் இங்கு ஆர்ப்பரித்து நீர் பெரும் ஆரவாரத்துடன் கொட்டுவதை பார்க்க ஆச்சரியமாக இருக்கும். மேலும் மேலே சொன்ன அருவிகளை போல வனத்தினுள் இல்லாமல் ரோட்டின் அருகிலேயே இருக்கிறது. மேலும் இயக்குனர் மணி ரத்தினத்தின் படங்களான குரு, உயிரே, இருவர் போன்ற படங்களில் இந்த அருவி காட்டப்பட்டுள்ளது.

அதிரப்பள்ளியை எப்படி அடைவது?:

விமானம் மூலம் எனில் அதிரப்பல்லியில் இருந்து 55 கி.மீ தொலைவில் கொச்சி சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது.

ரயில் மூலமெனில் திரிச்சூர் அல்லது கொச்சி ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து சராசரியாக 70 கி.மீ தொலைவில் இருக்கும் அதிரப்பள்ளியை பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் மூலம் அடையலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+