Search
  • Follow NativePlanet
Share
» »அவினாசி - அத்திக்கடவு : என்ன இருக்கு தெரியுமா ?

அவினாசி - அத்திக்கடவு : என்ன இருக்கு தெரியுமா ?

தமிழகத்தில், குறிப்பாக கோவை, ஈரோடு, பெருந்துறை வட்டாரங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளித்துக்கொண்டிருக்கும் ஒரு திட்டம், மேலாண்மை அவினாசி - அத்திக்கடவு திட்டம். அப்படி என்னதான் இந்த திட்டம், ஏன் இத்தனை வருடங்களாக இதற்கான போராட்டம், மக்களின் கோரிக்கை என்றெல்லாம் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கபோவதில்லை. ஆனால், இத்திட்டத்தின் ஒரு அங்கத்தையும், அவினாசி முதல் அத்திக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அப்படி என்னதான் இருக்கு என்பதையும் கண்டறிய ஒரு பயணம் போலாம் வாங்க.

அத்திக்கடவு - அவினாசி

அத்திக்கடவு - அவினாசி

அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி மற்றும் புளியம்பட்டி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முப்பத்தி ஒன்று ஏரிகள், நாற்பது ஊராட்சி ஒன்றியக் குளங்களை நிறப்பக்கூடிய திட்டமாகும்.

coimbatore.nic.in

எதற்காக ?

எதற்காக ?

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள குளம், நீரோடை மட்டுமின்றி ஏனைய 538 நீர் நிலைகள் அத்திக்கடவு மூலம் பெறப்படும் நீரினால் நிறப்பப்படும். இதன் மூலம், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும். கோயம்புத்தூர் போன்ற வளர்ந்த நகரில் இருந்து இப்படியொரு நீர் சேமிப்புத் திட்டமா என வியப்பாக உள்ளதா ?. ஆம். கோயம்புத்தூரை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் மூலமே இது சாத்தியமாகிறது.

coimbatore.nic.in

அவினாசி டூ அத்திக்கடவு ஓர் பயணம்

அவினாசி டூ அத்திக்கடவு ஓர் பயணம்

சமீப நாட்களாக அதிகம் பேசப்பட்டு வரும் இந்த அவினாசி முதல் அத்திக்கடவு வரை என்ன இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா ? வார இறுதி நாள் விடுமுறை நாட்களை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் செலவிட விரும்பினா இந்த இடங்களுக்கெல்லாம் போய் பாருங்க. மலையின் அழகில் மயங்கிபோய்டுவீங்க.

அவினாசி

அவினாசி

கோயம்புத்தூரிலிருந்து ஈரோட்டிற்கு செல்லும் வழியில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவிநாசிக்கே அடையாளமாக நின்று பெருமை சேர்ப்பது அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில். பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 15 ஆவது நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது. இத்தலத்தின் மூலவர் அவிநாசியப்பர். அம்பாளின் கோவில் அவினாசியப்பருக்கு வலது புறம் உள்ளது பொதுவாக மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும்.

Cnu

என்எச் 544

என்எச் 544

அவினாசியில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயம்புத்தூரை அடைய தேசிய நெடுஞ்சாலை 544-யில் பயணிக்க வேண்டும். கோயம்புத்தூரின் முதுகெலும்பாக இருப்பது இச்சாலை என்றால் மிகையாகாது. இருபுறங்களிலும் பிரசிதிபெற்ற கல்லூரிகள், தொழிற்சாலைகள், ஆங்காங்கே பசுமையாக காணப்படும் விவசாய நிலம் என ஒரு மணி நேர பயணம் சட்டென முடிந்துவிடும்.

Ask27

கோயம்புத்தூர் - அத்திக்கடவு

கோயம்புத்தூர் - அத்திக்கடவு

கோயம்புத்தூரின் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கிறீர்கள் என்றால் சின்னதடாகம், ஆனைகட்டி, சோலையூர் வழியாக 53 கிலோ மீட்டர் தூரத்தில் அத்திக்கடவை அடையலாம். அல்லது, குருடம்பாளையம், கூடலூர், பிலிச்சி, காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு வழியாக 56 கிலோ மீட்டர் தூரம் பயணித்தும் இப்பகுதியை அடையலாம். இதில், ஆனைகட்டி சாலை வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவ்வப்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த வெளியேரும் காட்டு யானைகளை காண முடியும். இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறீர்கள் என்றால் சற்று கவணமாக செல்லவும்.

coimbatore.nic.in

அத்திக்கடவு

அத்திக்கடவு

தமிழக- கேரள எல்லையான முள்ளி வனப்பகுதி அருகே உள்ளது அத்திக்கடவு நீர்தேக்கம். அட்டப்பாடி, அமராம்பலம் மலையின் சோலைவனக் காடுகள் மூலம் உருவாகும் நீர்ஓடைகள் ஒன்றினைந்து தாவளம், புதூர், கோத்தகரா, எலச்சிவேழி வழியாக பெரிய ஆறாக உருவாகி பில்லூர் அத்திக்கடவில் கூடுகின்றது. அடர் வனப்பகுதியில் எளிதில் மக்கள் சென்றுவர முடியாதவாரு கட்டமைக்கப்பட்டுள்ள பில்லூர் அணை சுற்றுலாப் பயணிகளை கவருவதில் வல்லமை பெற்றது. குறிப்பாக, இப்பகுதியில் காணப்படும் கிரேட் இந்தியன் ஹார்ன்பில், மலபார் பைடு ஹார்ன்பில் பறவை இனம் உலகிலேயே மிகவும் பிரசிதிபெற்றது. இந்தியாவில், பில்லூர், பரளிக்காடு பகுதியில் மட்டுமே இது அதிகளவில் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Lip Kee Yap

பரளிக்காடு

பரளிக்காடு

பரளிக்காடு பெரிதும் மனிதர்களால் பயன்படுத்தப்படாத கோயம்புத்தூரில் பிரசிதிபெற்ற இடமாகும். இது பில்லூர் அணைக்கு சற்று முன்பாக மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒரு சிறிய கிராமத்தை ஒட்டி அமைந்துள்ளது. யாரும் அதிகமாக சென்றுவராத ஓர் மலைக்காடு என்பதே இதன் தனிச் சிறப்பு. நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ இப்பகுதிக்கு செல்வதாக இருந்தால் முன்கூட்டியே வனத்துறையினரிடம் அனுமதி பெருவது கட்டாயம்.

Cj.samson

காரமடை - பரளிக்காடு

காரமடை - பரளிக்காடு

காரமடையிலிருந்து பரளிக்காடு செல்ல புகழ்பெற்ற காரமடை கோவிலைத் தாண்டி முதல் இடது பக்க சாலையில் பயணிக்க வேண்டும். அந்த சாலையில் பயணிக்க பரிணாம வளர்ச்சி போல நகரம் தேய்ந்து தேய்ந்து முழுக்கிராமங்களை காண முடியும். புஜங்கனூர் என்னும் ஊரைத்தாண்டினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை இரண்டு பக்கமாக பிரியும். இதில், ஒருபக்க சாலை தோலம்பாளையம் செல்லும. இன்னொரு பக்கம் போனால்தான் பரளிக்காடு சென்றடைய முடியும்.

Ssriram mt

பரிசல் பயணம்

பரிசல் பயணம்

பில்லூர் அணைக்கு நேர் பின்புறமாக மலைவாசி மக்களின் கிராமம் உள்ளது. இக்கிராமத்தினரின் உதவியுடன் பரிசல் பயணம் போகவும், மதிய உணவு, அதற்குபிறகு ட்ரெக்கிங் என ஒரு நபருக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மலைகிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மதிய உணவை செய்து கொடுக்கிறார்கள். நம்மிடம் முன்னரே வசூலிக்கும் பணத்தில் இவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வனத்துறையினர் மூலம் வழங்கப்படுகின்றது. அடர் வனப்பகுதியில், மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய உணவுகளை ருசிக்க யாருதான் தவர விடுவார்கள்.

Nellai S S Mani

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more