» »ஆகாயத்திலிருந்து விழும் அற்புத நீர்வீழ்ச்சி - யாரும் அறியாத ரகசிய அருவி!

ஆகாயத்திலிருந்து விழும் அற்புத நீர்வீழ்ச்சி - யாரும் அறியாத ரகசிய அருவி!

Posted By: Sabarish

பாறைகளின் முகடுகளின் வழியாக கொட்டும் அருவியில் நீராட விரும்பாத உள்ளங்கள் இங்கு எவரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். மன அமைதிக்கும், புத்துணர்ச்சிக்கும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வு நீர்வீழ்ச்சியாகத்தான் இருக்கும்.

தமிழகத்தில் குற்றாலம், ஒக்கேனக்கல், சுருளி அருவி, திற்பரப்பு அருவி, குரங்கு அருவி, கும்பக்கரை அருவின்னு பல புகழ்பெற்ற அருவிகள் இருந்தாலும், இன்னும் ஏராளமான அருவிகள் சுற்றுலா பயணிகளின் பார்வையில் இருந்து சற்று தள்ளித்தான் இருக்கு. இந்த அருவிகள் மற்றதைப் போல இல்லாமல் சில வரலாற்றுச் சிறப்புமிக்க தனித்துவம் பெற்றதாகவும் இருக்கிறது.. அப்படியொரு அருவிக்குதான் இன்று நாம சுற்றுலா போக போகிறோம். மற்ற அருவிகளைப்போலல்லாமல் இதன் பெயருக்கு தனிச் சிறப்புண்டு. ஆகாயத்திலிருந்து விழும் அற்புத அருவி இது.

கிழக்கே ஒரே கல்லிலான மலையின் உச்சியில் வரலாற்றைச் சுமந்து நிற்கும் மலைக் கோட்டை, உயர்ந்து நிற்கும் நாமகிரி மலை, பன்னாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலான கோழிப்பண்ணைகள்... ஆமாங்க, இந்த அத்தனை சிறப்புகளும் உள்ள ஒரு பகுதி நாமக்கல் மாவட்டம் தான். இங்க உள்ள ஒரு நீர்வீழ்ச்சிதான் பல மூலிகைத்துவம் கொண்டாக இருக்குதுன்னா பாருங்களேன்.

எப்படிச் செல்வது

எப்படிச் செல்வது

சென்னையில் இருந்து நாமக்கல்லுக்குச் சுற்றுலா செல்ல நீங்க திட்டமிட்டா செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் வழியா கள்ளக்குறிச்சி சென்று அங்க இருந்து சுமார் 2 மணி நேரம் பயணித்து நாமக்கல்லுல உள்ள இந்த இடத்திற்கு போறது சிறந்த தேர்வா இருக்கும்.

சென்னையில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாமக்கல்லுக்கு செல்லும் வழியில் மேலும் பல சுற்றுலாத் தலங்களை காண விரும்புனீங்கன்னா இதை இரண்டு நாள் பயணமாக திட்டமிடுவது சிறந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்னைக்கு மிக அருகில் உள்ள நகரம் செங்கல்பட்டு. பழமையான விஜயநகர கோட்டை, கொளவாய் ஏரியில் படகுசவாரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உங்களின் இந்தப் பயணத்தை மேலும் உற்சாகமூட்டும் வகையில் அமையும்.

இந்த பயணத்தை ஓர் ஆன்மீக பயணமாகவும் அனுபவிக்க நீங்க விரும்புகிறீர்கள் என்றால் செங்கல்பட்டின் சுற்றுவட்டாரத்தில் காஞ்சி காமகோடிப் பீடம், கந்த கோட்டம் சுப்பிரமணியசாமி கோவில், கைலாசநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், கடற்கரைக் கோவில், குகைக் கோவில்ன்னு ஏராளமான ஆன்மீகத் திருத்தலங்கள் உள்ளன.

satpoorani

மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர்

செங்கல்பட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல்மருவத்தூர். அங்கு அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்ற கோவில் என்பது அனைவரும் அரிந்த ஒன்றே. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி என்றும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் தொன்நம்பிக்கை இன்றும் உள்ளது. இதனாலேயே இந்தக் கோவிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர். நெடுந்தூரப் பயணத்தில் கொஞ்சம் மன அமைதியைத் தேட விரும்புகிறீர்கள் என்றால் குடும்பத்துடன் இங்குச் சென்று வழிபட்டுவிட்டு நாமக்கல்லை நோக்கிப் பயணிக்கலாம்.

Sakthi

விழுப்புரம்

விழுப்புரம்

மேல்மருவத்தூரில் இருந்து திண்டிவனத்தைக் கடந்து அடுத்த 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விழுப்புரம் மாவட்டம். இந்த மாவட்டமே தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டமாகவும் உள்ளது. மேலும், இங்கு திருக்கோயிலூர், சிங்கவரம் ஒற்றைக் கற்கோவில், செஞ்சிக்கோட்டை, சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், உற்சாகமூட்டும் மரக்காணம் கடற்கரை என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. சுற்றுலாவை வலுப்படுத்தும் வகையிலான இந்த தலங்களுக்கும் போய் பார்த்துட்டுதான் வாங்களேன்.

Planmade

கள்ளக்குறிச்சி- நாமக்கல்

கள்ளக்குறிச்சி- நாமக்கல்


விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வழியாக 150 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது நீங்க செல்ல வேண்டிய நாமக்கல். இந்த 150 கிலோ மீட்டர் தூரத்தையும் பயணத்திலேயே கழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைங்க. அதுக்கும் காத்திருக்கிறது உங்களுக்கான பிரமிப்பூட்டும் ஒரு சில சுற்றுலாப் பகுதிகள்.

மலைகளும், மர வாசனைகளும் விரும்பும் நபராக நீங்கள் இருந்தால் காங்கிரீட் காடுகளில் இருந்து மன ஓய்வைத் தேடிச் செல்லும் இந்த பயணத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உங்களுக்கான வெள்ளி மலை.

கள்ளக்குறிச்சிக்கு மிக அருகில் உள்ள இந்த வெள்ளி மலையில் கோமுகி அணை, வளைந்து நேளிந்த மலைப் பாதை, பெரியார் நீர்வீழ்ச்சி, கரியலூர் ஏரி படகு சவாரி என தனி பட்டியலே இடலாம். இதை அனுபவிக்கவே ஒரு நாளை கூடுதலாக நீங்க ஒதுக்க வேண்டும்.

வந்து சேந்துட்டிங்களா

வந்து சேந்துட்டிங்களா


சென்னையில் இருந்து நீண்ட தூர பயணத்திற்குப் பின்பு இப்ப நீங்க வந்திருக்கக்கூடிய இடம்தாங்க நாமக்கல் மாவட்டம். கள்ளக்குறிச்சியில இருந்து 130 கிலோ மீட்டரைக் கடந்துள்ள இந்த நாமக்கல்லில் தான் மூலிகை வாசனையோடு புராணக்கதைகள் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. புராணகாலத்தில் இந்த அருவி ஆகாயத்திலிருந்து உருவாகியதாம். வடக்கே எப்படி கங்கை பாய்கிறதோ அதைப்போல தெற்கே நீர் வேண்டுமென முனிவர்கள் தவம் செய்து கேட்டதாகவும், அதற்காக சிவபெருமான் ஆகாயத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சியைப் பாய்ச்சதாகவும் தொன்னம்பிக்கை கதைகள் பல இருக்கின்றன. இவை தவிர்த்து இந்த அருவியில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அற்புத அதிசயங்கள் பல இருக்கின்றன.

Dilli2040

கொல்லிமலை

கொல்லிமலை

நாமக்கல்லின் மையத்தில் இருந்து ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தொலைவில் வானுயர்ந்த மரங்களுடனும், சித்தர்களின் குகைகளுடனும் பசுமை விரித்துக் காணப்படுகிறது இந்த கொல்லிமலை. வருடந்தோறும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இங்கே சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமே இருந்தாலும் இங்குள்ள காட்டேஜ்களில் எப்போதும் தங்கும் வசதி கிடைத்துக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்புன்னுதான் சொல்லவேண்டும்.

Karthickbala

அப்படி என்னதாங்க இங்க இருக்கு

அப்படி என்னதாங்க இங்க இருக்கு


கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரு சிறிய பகுதிதான் இந்த கொல்லி மலை. 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து, விரிந்த அடர்ந்த மூலிகை காடுகள் தாங்க இந்த கொல்லிமலைக்கே அடையாலம். சீக்குப்பாறை, அரசு மூலிகைப் பண்ணை, தற்கொலை முனை, அறப்பளிஸ்வரர் ஆலயம், கொல்லிப்பாவை கோயில், அய்யாறு அருவி, சித்தர்கள் குகை என மலைத்தொடர் முழுக்க காண வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

Karthickbala

 மர்மம் நிறைந்த மலைத்தொடர்

மர்மம் நிறைந்த மலைத்தொடர்

கூடுவிட்டு கூடு பாயும் சித்தர்கள் இன்னும் வாழ்ந்துவருவதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்றுதான் கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி இந்த மலைப்பகுதியை ஆட்சிசெய்ததாக வரலாற்று ஆவணங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமில்லாமல் உலகத்தரம்வாய்ந்த மூலிகை பூமியாகவும் இது கண்டறியப்படுகிறது.

சித்தர்களின் ரகசியக் குகைகள்

சித்தர்களின் ரகசியக் குகைகள்

கொல்லிமலையில் ஏறத்தாழ 18 சித்தர்கள் தவம் செய்துள்ளனர் என்பதற்கு அடையாளமாகக் கோரக்கர் குகை, கோரக்கர் யாக குண்டம், பாம்பாட்டிச் சித்தர் குகை, ஔவையார் குகை போன்ற பல சித்தர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளன. தற்போதும் கூட கோரக்கர் குண்டத்தில் காடை சம்பா, கருப்பு குருவை அரிசி கொண்டு பொங்கல் வைத்து கரும்பு, வெல்லம் வைத்து வழிபட்டுவிட்டு பின் இதன் அருகில் உள்ள கூட்டாற்றுப் பகுதியில் தங்கினால் அன்று இரவு சித்தர்கள் ஜோதி ரூபத்தில் காட்சியளிப்பதாக நம்பிக்கை உண்டு.

 மூலிகைத்தன்மை கொண்ட நீர்வீழ்ச்சிகள்

மூலிகைத்தன்மை கொண்ட நீர்வீழ்ச்சிகள்


கொல்லிமலைத்தொடர் முழுக்க சுற்றிப்பார்க்கவும், வழிபடவும் ஏராளமான இடங்கள் இருந்தாலும் அவற்றில் பெரிதும் ஈர்ப்பது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சினிபால்ஸ், மாசிலா அருவி, நம்மருவிகள். இந்த அருவிகளிலேயே தனிச்சிறப்பு பெற்றுள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.

Docku

 ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

பாறைகளின் முகட்டின் வழியே 300 அடி உயரத்தில் இருந்து விழும் அய்யாறு நதிதான் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. மலைக்காடுகளின் நடுவே அறப்பலீஸ்வரர் கோவிலின் அருகாமையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் படிகள் நீர்வீழ்ச்சியின் முடிவு வரை செல்கிறது. அருவியின் அடிப்பகுதியில் இருந்து காணும்போது ஆகாயத்தில் இருந்து விழுவதுபோலவே இது காட்சியளிக்கிறது.

கொல்லிமலைக் காடுகளின் வழியே உருவாகும் நீர் பல மூலிகைச் செடிகளை தழுவி ஓர் காட்டற்று வெள்ளமாக உருமாறி நீர்வீழ்ச்சியாக வருவதால் இதில் நீராடும்பொழுது புத்துணர்ச்சி அடைவது மட்டுமின்றி, உடலில் உள்ள நோய், பிணிகளையும் நீக்கும் வல்லமையும் கொண்டதாக உள்ளது. நிச்சயம், இந்த அருவி உங்களின் பயணத்தை பல மடங்கு பயனுள்ளதாக மாற்றும் என்பதில் ஆச்சரியமில்லை.

Portvp

 மலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவுகள்

மலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவுகள்

கொல்லிமலைக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அவர்கள் மூலமும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர் இங்குள்ள மலைவாழ் மக்கள். நகரத்தில் அன்றாட வாழ்வில் முறையற்ற உணவுபழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள பயணிகளைக் கவரும் வகையில் இங்குள்ள மலைவாழ் பெண்கள் ஒரு குழுவாக இணைந்து சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்து வருகின்றனர். கொல்லிமலையின் முக்கிய இடமான செம்மேடு பேருந்து நிலைய அங்காடியில் தினை, ராகி மாவு, சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவை ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளன.

Rajeshodayanchal

கோவை- கொல்லிமலை

கோவை- கொல்லிமலை

கோவையில் இருந்து கொல்லிமலைக்கு நீங்கள் செல்ல விரும்பினால் அவிநாசி, ஈரோடு, திருச்செங்கோடு சாலை எளிதானதாக இருக்கும். சுமார் 4 மணி நேரம் பயணிக்க வேண்டிய இந்த சுற்றுலாவையும் நீங்கள் சுவைமிக்கதாக மாற்ற வேண்டும் என விரும்பினால் அவிநாசியில் அமைந்துள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில், கொக்கராயன்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றுப்படுகை உள்ளிட்டவற்றுக்கு ஒரு ட்ரிப் போலாம்.

அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

கோவையில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் வழியில் 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவிநாசி என்ற ஊரில், அமைந்துள்ளது அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில். கட்டிடக்கலைகளுடன் கூடிய ஆன்மீகத் தலமான இது பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் சுந்தர பாண்டியன் என்னும் மன்னரால் கட்டப்பட்தாகும். சுற்றுவட்டாரப் பகுதியில் வெயில் சுட்டெரித்தாலும் கோவில் வளாகத்தின் உட்பகுதி, மண்டபம் உள்ளிட்டவை குளுமை தருவதுடன் மன அமைதியினையும் தருகிறது.

Cnu

கொக்கராயன்பேட்டை

கொக்கராயன்பேட்டை

கோவை- நாமக்கல்லிற்கு இடைப்பட்ட பகுதியில் திருச்செங்கோடு அருகே அமைந்துள்ளது கொக்கராய்பேட்டை. நெடுஞ்சாலையில் இந்த ஊரை அடையும் முன்பே நம்மை வரவேற்பது காவிரி ஆற்றுப்படுகை. பல போராட்டத்த கடந்து கொஞ்சம் கசிந்த நிலையில் நம்ம ஊருக்கு வர காவிரி தண்ணிய கொஞ்சம் பாத்துட்டுதா வாங்களேன்.

என்னங்க, அரிய மூலிகைகளும், நோய் தீர்க்கும் நீரும், மாசற்ற காற்றும் என ஒட்டுமொத்த இயற்கை அரணாக உள்ள கொல்லிமலைக்கு நீங்களும் ஒரு சுற்றுலா போக ரெடியா ?

Read more about: travel temple waterfalls

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்