Search
  • Follow NativePlanet
Share
» »பாகா கடற்கரை பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

பாகா கடற்கரை பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற கடற்கரை கோவாவில் உண்டெனில் அது பாகா பீச்சை தவிர வேறெதுவாக இருக்க முடியும். இங்கு கடற்கரைக் குடில்கள் முதல் உணவகங்கள் வரை, சிறந்த ஹோட்டல்கள் முதல் அசல் ஜேர்மன் அடுமனை வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை கொடுக்கும். பாகா பீச் அதன் பரப்பளவிலும் சரி, அது தரும் அனுபவங்களிலும் சரி எவரையும் பிரமிக்க வைத்து விடும்.

சாகசமும் உணவும்

சாகசமும் உணவும்

பாகாவிற்கு வரும் பயணிகள் பாராசெய்லிங், வாட்டர் பைக் சவாரி, பனானா ரைட், படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

பாகா பீச்சின் தொடக்கத்திலேயே அமைந்திருக்கும் புகழ்பெற்ற கஃபே பிரிட்டோஸில் கிடைக்கும் காக்டெயிலுக்காகவும், கடல் உணவுக்காகவும் உயிரை கூடக் கொடுக்கலாம். அதோடு கோவான் மீன் சாப்பாடும் இங்கு வரும் பயணிகளிடையே பிரபலம்.

McKay Savage

கடற்கரையில் மகிழ்ந்திருங்கள்

கடற்கரையில் மகிழ்ந்திருங்கள்

பாகா பீச்சுக்கு மாலை வேலைகளில் வருபவர்கள் கஃபே பிரிட்டோஸை முத்தமிடத் துடிக்கும் கடலலைகளை ரசித்துக் கொண்டே இரவு உணவை ருசிக்கலாம். மேலும், கஃபே பிரிட்டோஸுக்கு வெளியே உள்ள அடுமனையை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இதன் முகப்புத் தோற்றம் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாங்கு அலாதியானது. இங்கு வரும் பயணிகளுக்கு ஐரோப்பிய வீதிகளில் இருப்பது போன்ற ஒரு மயக்கத்தை இந்த அடுமனையின் வடிவமைப்பு ஏற்படுத்திவிடும்.

Gayatri Priyadarshini

கரோக்கி இரவு

கரோக்கி இரவு

பாகா பீச்சில் கரோக்கி இரவு என்பது மிகவும் சாதாரணம் என்பதால், குடில்கள் அனைத்துமே கரோக்கி வசதியுடனே உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் அனைத்து குடில்களிலும் வெவ்வேறு சுவை மற்றும் மனங்களில் ஹக்கா உணவு கிடைக்கும். பாகா பீச்சை பேருந்து மற்றும் கார்களின் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். மேலும், மாம்போஸ் இரவு விடுதி, கேண்டலிம் கடற்கரை மற்றும் பனாஜி ஆகியவையும் பாகா பீச்சுக்கு வெகு அருகில் உள்ளன. எனவே இந்த இடங்களிலிருந்து உங்கள் விருப்பதிற்கேற்ப பேருந்துகள் அல்லது வாடகை கார்களின் மூலம் பாகா பீச்சை அடையலாம். -

Arulvallavan

கஃபே டிட்டோஸ்

கஃபே டிட்டோஸ்

கோவாவின் பாகா கடற்கரையில் உள்ள கஃபே டிட்டோஸ் விடுதியின் தனிப்பெரும் புகழின் காரணமாக அந்த விடுதி அமைந்திருக்கும் சாலையே டிட்டோஸ் சாலை என்று அதன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த டிட்டோஸ் சாலையில் நீங்கள் எண்ணற்ற பார்களையும், இரவு விடுதிகளையும் பார்க்கலாம். ஆனால் அவ்வளவு பார்கள் இருந்தாலும் அவற்றுக்கு மத்தியில் ராணித் தேனி போல கம்பீரமாக காட்சியளிப்பது கஃபே டிட்டோஸ் மட்டும்தான். இவ்வளவு பெருமைகளை கொண்ட கஃபே டிட்டோஸ் அதன் பிரபலத்தை போலவே சற்று விலைமதிப்பு மிக்கதும் கூட. இதன் உள்ளே நுழைவதற்கு கட்டணமாக 1500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

கஃபே மாம்போஸ்

கஃபே மாம்போஸ்

கோவாவின் புகழ்பெற்ற கஃபே டிட்டோஸ் சாலையில், பாகா கடற்கரையில் அமைந்திருக்கும் கஃபே மாம்போஸ், சுற்றுலாப் பயணிகளிடையே வெகு பிரசித்தம். அதிலும், குறிப்பாக டிட்டோஸ் சாலையில் எத்தனையோ இரவு விடுதிகளும், பார்களும், பார்லர்களும் இருந்தாலும் பயணிகளின் மனம் விரும்பும் நல்ல இசையையும், மிகச் சிறந்த தரத்தையும் அளிக்கும் விடுதிகளில் மாம்போஸுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.

இந்த விடுதிக்கு இணையாக வருபவர்களுக்கு 500 ரூபாயும், தனி நபருக்கு 800 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் இந்த கட்டணம் விடுதியின் உள்ளே நுழைவதற்கு மட்டும்தான். அதற்கு பிறகு நீங்கள் உள்ளே வாங்கும் பொருள் உணவு, மது என்று எதுவாக இருந்தாலும் தனியாக பணம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விடுதியில் கடன் அட்டைகள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. எனவே தேவையான அளவு பணத்தை நீங்கள் எடுத்து வருவது மிகவும் அவசியம்.

Ibizawinter

கேப் டவுன் கஃபே

கேப் டவுன் கஃபே

டிட்டோஸ் சாலையில் இருக்கக்கூடிய விடுதிகளிலேயே பயணிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கும் இரவு விடுதி இந்த கேப் டவுன் கஃபே தான். எனினும் இங்கு நீங்கள் ஐபிஸ் அல்லது ஈடேப் போன்ற பிரபலமான பிராண்டுகளை பார்க்க முடியும். அதற்கு இந்த இரவு விடுதி புகழ்பெற்ற டிட்டோஸ் கஃபே நிர்வாகத்தால் நடத்தப்படுவதே காரணம். கேப் டவுன் கஃபேவின் உயரமான மேற்கூரையும், மிகப்பெரிய எல்.சி.டி திரைகளும், அதிரவைக்கும் இசையும், அற்புதமான கோவான் உணவும் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

Johann Jaritz

Read more about: goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more