Search
  • Follow NativePlanet
Share
» »வானமே எல்லை: பெங்களுரு - வயநாடு - ஆலப்புழா

வானமே எல்லை: பெங்களுரு - வயநாடு - ஆலப்புழா

அழகான காலநிலை, எங்கு பார்த்தாலும் கண்களை குளுமையக்கும் பசுமை, வற்றாத ஆறுகள், மாறாத பண்பாட்டு அடையாளங்களை கொண்டாடும் மக்கள் என கேரளா இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களுள் ஒன்று. எத்தனை முறை சென்றாலும் அலுக்காத இங்கு நண்பர்களுடனும் சரி, குடும்பத்தினருடனும் சரி சில நாட்கள் கொண்டாடி மகிழவும், இயற்க்கை அன்னையின் மடியில் தவந்து விளையாடவும் ஏற்ற இடம்.

அப்படிப்பட்ட கேரள மாநிலத்தில் அருமையானதொரு சாலைப்பயணம் மேற்கொள்வோம் வாருங்கள். பெங்களுருவில் இருந்து வயநாடு, கோழிகோடு குருவாயூர் வழியாக ஆலப்புழாவை அடையலாம். கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களை இந்தப்பயணத்தில் பார்த்து மகிழலாம். வாழ்க்கை தரும் ஆனந்தங்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.

விமான டிக்கெட்டுகளில் ரூ.7000 வரை தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

பெங்களுரு - மைசூர் - வயநாடு:

பெங்களுரு - மைசூர் - வயநாடு:

இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக நாம் பெங்களுருவில் இருந்து கிளம்பி மைசூர் வழியாக கேரளாவின் மிக முக்கிய மலை வாசஸ்தலமான வயநாட்டை சென்றடையவுள்ளோம்.

தேசிய நெடுஞ்சாலை 212 மற்றும் 17 வழியாக சென்றால் வயநாட்டை ஐந்தரை மணிநேரத்தில் அடைந்து விடலாம். 270 கி.மீ தூர பயணமாக இது அமையும்.

பெங்களுரு டு மைசூர்:

பெங்களுரு டு மைசூர்:

நாம் பெங்களுருவில் இருந்து கிளம்பி ராமநகரா, மடூர் வழியாக மிசுரை அடையலாம். 143 கி.மீ தூரமுள்ள இந்த பயணத்தை மூன்று முதல் மாங்கு மணிநேரத்தில் அடையலாம். அதிக நெரிசல் இல்லாத இந்த சாலையில் பயணம் செல்வது அலாதியான அனுபவமாக அமையும். மேலும் இந்த வழியில் சில நல்ல சுற்றுலாத்தலங்களும் அமைந்துள்ளன.

Photo:Vineeth

கொண்டாட்டம்! சாகசம்! வடை!! :

கொண்டாட்டம்! சாகசம்! வடை!! :

பெங்களுரு டு மைசூர் சாலையில் ஒரு மணிநேர பயணத்தில் பிடதி என்னும் இடத்திற்கு பக்கத்தில் அமைந்திருக்கும் 'இன்னோவேடிவ் பிலிம் சிட்டி' என்ற புதுமைகள் நிறைந்த திரைப்பட நகரம் அமைந்துள்ளது. குழந்தைகளுக்கான நிறைய விளையாட்டுகளும் இங்கே இருக்கின்றன. திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்குமெனில் கட்டாயம் இங்கே சென்று வாருங்கள்.

Photo:Rameshng

பாறை ஏறுதல்:

பாறை ஏறுதல்:

இதற்கு அடுத்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் ராமநகரா சாகச விளையாட்டுகளுக்கு பெயர் போனதாகும். இங்கு தான் இந்தியாவில் முதன் முறையாக பாறை ஏறுதல் ('Rock Climbing') துவங்கப்பட்டதாம். வண்னக்கள் சுவர், அன்ன-தம்மா போன்றவை இங்கிருக்கும் புகழ்பெற்ற பாறை ஏறுதல் இடங்களாகும். இவ்விளையாட்டில் ஆர்வம் இருந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்களும் இங்கே வந்து பயிற்சி பெறலாம்.

Photo:L. Shyamal

மடூர் வடை:

மடூர் வடை:

ராமநகரத்துக்கு அடுத்து நாம் மடூரை அடைவோம். இங்கு நாம் நெடுஞ்சாலைகளிலேயே மடூரின் அடையாளமான மடூர் வடைகளை விற்பதை காணலாம். அருசி மாவு, மைதா, தேங்காய் உள்ளிட்டவை கொண்டு செய்யப்படும் இந்த வடை நம்ம ஊர் பருப்பு வடையை போன்றே இருந்தாலும் இதன் தனித்துவமான சுவை நம்மை இதனை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்.

Photo:Amarrg

மைசூர்:

மைசூர்:

பெரும் ராஜ வரலாற்றை கொண்டுள்ள மைசூர் நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இங்கே நாம் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. உலகப்புகழ் பெற்ற டைம்ஸ் இதழ் உலகில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 31 நகரங்கள் பட்டியலில் மைசூரையும் குறிப்பிட்டிருப்பதே இதற்க்கு சான்றாகும்.

Photo: Flickr

மைசூர்:

மைசூர்:

இங்கே புகழ் பெற்ற மைசூர் அரண்மனை, பிருந்தாவன் கார்டென், அற்புதமான இயற்கை காட்சிகளை வழங்கும் குக்கரஹல்லி ஏரி போன்றவை உள்ளன. மைசூரில் இருந்து சற்று தொலைவில் நூற்றுக்கணக்கான பறவைகள் வரும் ரங்கனதிட்டா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

சாமுண்டி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்நகரில் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குழந்தைகளுடன் சுற்றிப்பார்க்க நல்ல இடமாக மைசூர் திகழ்கிறது.

Photo:Rohith Ajjampur

சூப்பர் தோசை!:

சூப்பர் தோசை!:

அதேபோல மைசூருக்கு வந்துவிட்டு அங்கு கிடைக்கும் அதிசுவையான மைசூர் மசாலா தோசையை சுவைக்க மறந்து விடாதீர்கள்.

Photo:Arjunm101

மைசூர் டு வயநாடு:

மைசூர் டு வயநாடு:

மைசூரில் இருந்து வயநாட்டை அடைய மூன்று வழிகள் இருக்கின்றன. மைசூரில் - ஹுன்சூர் - தொல்பெட்டி - வயநாடு, மைசூர் - பவலி - கட்டிக்குலம் - வயநாடு இந்த இரண்டு சாலைகளும் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையில் செல்வதால் மிருகங்களை பார்க்கும் வாய்ப்பும், இயற்கையை எந்த தொந்தரவும் இல்லாமல் ரசிக்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும் என்றாலும் இவை குண்டும் குழியுமாக வாகனங்கள்
செல்ல ஏற்றவை அல்ல.

Photo:friedwater

வயநாடு வன விலங்குகள் சரணாலயம்:

வயநாடு வன விலங்குகள் சரணாலயம்:

மைசூரில் இருந்து குண்டுலுபேட், சுல்தான் பாத்ரி வழியாக வயநாட்டை அடைவதே சிறந்த வழியாகும். தேசிய நெடுஞ்சாலை 212 ஆன இந்த வழியில் பயணித்தால் 131 கி.மீ தொலைவில் இருக்கும் வயநாட்டை இரண்டரை மணிநேரத்தில் அடையலாம். இந்த வழியில் பயணிக்கையில் முடிந்தால் வயநாடு விலங்குகள் சரணாலயத்திற்கு சென்று வரலாம்.

Photo:[email protected]

வயநாடு - மேற்கு தொடர்ச்சி மழையின் அழகு குவியல்:

வயநாடு - மேற்கு தொடர்ச்சி மழையின் அழகு குவியல்:

வர்ணிக்க முடியாத அழகுடன் ஓரிடம் இந்த உலகத்தில் இருக்குமானால் அது நிச்சயம் வயநாடாகத்தான் இருக்க முடியும். அவ்வளவு அழகான இயற்க்கை பொதிந்த இடமாக இருக்கும் இங்கு நாம் சுற்றிபார்க்க சில நல்ல சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Photo: Wikipedia

எடக்கல் குகைகள்:

எடக்கல் குகைகள்:

வயநாடு மாவட்டத்தின் தலைமை இடமான கல்பேட்டாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் எடக்கல் இன்னும் இடத்தில் இயற்கையாக அமைந்திருக்கும் குகைகள் தான் இந்த எடக்கல் குகைகள் ஆகும். இந்த குகைகளின் சிறப்பம்சம் என்னவெனில் இங்கு தான் கி.மு 6000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்ததற்கான சுவடுகள் இன்றும் இருக்கின்றன.

Photo:Shekure

எடக்கல் குகைகள்:

எடக்கல் குகைகள்:

ஹரப்பா நாகரீகத்தை விட பழமையான காலத்தில் இங்கு வாழ்த்த மனிதர்கள் இங்குள்ள குகைகளில் பல்வேறு குறியீடுகளை பொறித்துள்ளனர். தென் இந்தியாவில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஒரே ஆதாரமாக திகழும் இந்த குகைக்கு மறக்காமல் சென்று வாருங்கள்.

Photo:Vinayaraj

செம்பரா சிகரம்:

செம்பரா சிகரம்:

வயநாட்டில் இருக்கும் மற்றுமொரு அழகு குவியல் தான் இந்த செம்பரா சிகரம் ஆகும். எப்போதும் பச்சை போர்வை போர்த்தியது போன்று இருக்கும் இங்கு மலையேற்றம் செய்வது இனிமையான அனுபவமாக அமையும். அப்படி ட்ரெக்கிங் செய்து இந்த சிகரத்தின் உச்சியை அடைந்தால் அங்கு இயற்கையாக அமையப்பெற்றிருக்கும் காதல் ஏரியை காணலாம். காதலின் சின்னமான இதயத்தின் வடிவில் இயற்கையாகவே அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.

Photo:Usandeep

செம்பரா சிகரம்:

செம்பரா சிகரம்:

மேலே சொன்னவைகள் தவிர குருவத்வீப், திருநெல்லி கோயில், அம்புகுத்தி மலை போன்ற அருமையான சுற்றுலாதலங்கலும் இங்கே அமைந்திருகின்றன. தென் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த மலைவாசஸ்தலமான இந்த வயநாட்டுக்கு எப்போது வாய்ப்பும், நேரமும் கிடைத்தாலும் நிச்சயம் சென்று வாருங்கள்.

Photo:Aneesh Jose

வயநாடு டு ஆலப்புழா:

வயநாடு டு ஆலப்புழா:

பயணத்தின் இறுதி கட்டமாக நாம் வயநாட்டில் இருந்து ஆலப்புழாவை நோக்கி செல்லவிருக்கிறோம். வழியில் நாம் கோழிக்கோடு, குருவாயூர் மற்றும் கொச்சி போன்ற கேரளாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சென்று விட்டு இறுதியாக ஆலப்புழாவை அடையலாம். 313 கி.மீ தூர பயணமான இதை முடிக்க ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகும்.

Photo:Challiyan

கோழிகோடு - வரலாற்றின் வாயில்:

கோழிகோடு - வரலாற்றின் வாயில்:

கோழிக்கோடு நகரம் தான் இந்திய வரலாற்றுக்கே திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்வு நடந்த இடமாகும். 1498ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் போர்த்துகிசிய ஆய்வாளரான வாஸ்கோ ட காமா கடல் வழியாக இந்தியாவை அடைந்து ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமான பாதையை கண்டு பிடித்தார். இவ்வழி வந்தே ஆங்கிலேயர்கள் பின்னர் இந்தியாவை அடிமை படுத்தினர் என்பது வரலாறு.

Photo:Ernesto Casanova

கோழிக்கோடு கடற்கரை:

கோழிக்கோடு கடற்கரை:


அவர் வந்திறங்கிய கோழிக்கோடு கடற்கரை இன்றும் இந்நகரின் முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இங்கு வாஸ்கோ ட காமா வந்து இறங்கியதற்கான நினைவிடம் இண்டுறம் உள்ளது. மேலும் இந்த கடற்கரையில் காலையும், மாலையும் வர்ணஜாலமான சூரிய உதயத்தையும்,அஸ்தமனத்தையும் காண முடியும்.

Photo:Ekuttan

குருவாயூர்:

குருவாயூர்:


கோழிக்கோட்டில் இருந்து அடுத்ததாக நாம் கேரளாவில் இருக்கும் மிக முக்கிய ஆன்மீக ஸ்தலங்களுள் ஒன்றான குருவாயூர் கோயிலுக்கு செல்லலாம். இங்கே கிருஷ்ண பகவான் மூலவராக வீற்றிருக்கிறார். 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படும் இக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும் உள்ளது. வரலாற்று பெருமை வாய்ந்த இக்கோயிலுக்கு சென்று வருவது மனதுக்கு புத்துணர்வூட்டுவதாய் அமையும்.

Photo:Arjun.theone

ஆலப்புழா:

ஆலப்புழா:


குருவாயூரில் இருந்து எர்ணாகுளம், கொச்சி வழியாக நாம் ஆலப்புழாவை அடையலாம். அலைகள் எழாத ஆறுகள், கால்வாய்கள், கடற்கரைகள், பசுமையான வயல்வெளிகள் என ஆலப்புழா நம் மனதை கொள்ளைகொள்ளும் ஓரிடம்.

Photo:Amit Rawat

ஆலப்புழா கடற்கரை:

ஆலப்புழா கடற்கரை:

கேரளா மாநிலத்தில் இருக்கும் மிக அழகான கடற்கரைகளுள் ஒன்று இந்த ஆலப்புழா கடற்கரையாகும். வெள்ளி மணலில் நின்றபடி அலைகளின் ஆர்ப்பரிப்பை காண்பது மனதுக்கு இதமாக இருக்கும். இந்த கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கின் ஒளியில் இரவு நேரங்களில் கடற்கரையை ரசிப்பதும் தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

Photo:Kainjock

படகு வீடு:

படகு வீடு:


ஆலப்புழாவில் அடையாளமே இங்கிருக்கும் படகு வீடுகள் தான், அலைகள் எழாத ஆறுகளில் ஐந்து நட்சத்திர விடுதிக்கு ஒத்த
வசதிகளுடன் உங்கள் அன்பானவருடன் ஓரிடண்டு நாட்கள் எவ்வித தொந்தரவும் இன்றி பயணம் செல்ல சிறந்த ஒரு தேர்வாகும். இதில் பயணம் செய்தவாறே ஆலப்புழாவின் பசுமையான இடங்களை சுற்றி வரலாம்.

Photo:Karthick Ramachandran

பாம்பு படகு போட்டி:

பாம்பு படகு போட்டி:



ஆலப்புழாவில் இருக்கும் மற்றுமொரு கலாசார அடையாளம் வருட வருடம் ஆகஸ்டு மாதம் நடக்கும் பாம்பு படகு போட்டியாகும். ஒவ்வொரு படகிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆக்ரோஷமாக துடுப்பு போடுவது பார்க்க கண்கொள்ளா காட்சியாக அமையும்.

உண்மையில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் அற்புதமான பயணங்களில் ஒன்றாக இது அமையும்.

Photo:rahul rekapalli

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X