Search
  • Follow NativePlanet
Share
» »பாராமதி சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி செல்வது

பாராமதி சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி செல்வது

பாராமதி சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி செல்வது

இந்திய தேசத்தின் விவசாயப் பின்புலத்தையும், பெருமையையும் உலக நாடுகளிலிருந்து வரும் பயணிகள் நன்றாகவே அறிவார்கள். அதுவும் இந்தியா போன்ற நாடுகளின் வேளாண் தொழிற்நுட்பத்தை அறிந்து கொள்ளும் தாகத்தோடு பற்பல நாடுகளுக்கு பயணம் செல்லும் பயணிகளின் மத்தியில் தற்போது விவசாயச் சுற்றுலா என்ற சொல்லாடல் மிகவும் பிரபலம். இந்த வகை சுற்றுலாவில் பயணிகள் நேரடியாக விவாசய நிலங்களுக்கு சென்று, விவசாயிகளை சந்தித்து, அவர்களுடன் வேளாண்மை குறித்து கலந்துரையாடி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்.

COVER PIC: AbhijeetHS

மகாராஷ்டிராவில் உள்ள பாராமதி நகரம், விவசாயச் சுற்றுலா என்ற இந்த புதிய வகை சுற்றுலாவில் முன்னணியில் இருக்கிறது. இந்த விவசாய நகரம் புனேவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு இந்த நகரை விமானம், ரயில் மற்றும் சாலை என எந்த மார்கத்திலும் சுலபமாக அடைந்து விடலாம்.

பாராமதி சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி செல்வது

AbhijeetHS

பாராமதியின் விவாசய நிலங்களுக்கு ஒரு குழுவாக சென்று விவசாயிகளுடன் பயனுள்ள நேரத்தை கழிப்பதும், அவர்களுடன் அமர்ந்து கிராமிய உணவு வகைகளை ருசிப்பதும் உங்கள் வாழ்கையில் எப்போதாவது நிகழும் அற்புதமான பேரனுபவம். அதுமட்டுமல்லாமல் இந்த பயணத்துக்கு ஆகும் செலவை ஒப்பிடுகையில், இதன் மூலம் கிடைக்கும் பயன்கள் அளப்பரியது. மேலும், பாராமதி நகரம் அதன் கரும்பு சாகுபடிக்காகவும் பிரத்தியேகமாக அறியப்படுகிறது. எனவே நீங்கள் மற்ற விவசாய நிலங்களுக்கு செல்வது போல கரும்புத் தோட்டங்களுக்கும் விவசாயச் சுற்றுலா செல்லலாம்.
தங்கும் இடங்கள்

பாராமதியில் உள்ள ஹோட்டல்களிலேயே தாஜ் மற்றும் அமர்தீப் இரண்டும் சிறந்த ஹோட்டல்களாக கருதப்படுகின்றன. இதில் தாஜ் ஹோட்டல் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றது அல்ல. மாறாக அமர்தீப் ஹோட்டல் அனைத்து பயணிகளுக்கும், அனைத்து வகையிலும் வசதியான தங்குமிடமாக இருக்கும்.
ஷாப்பிங்

பாராமதியில் காணப்படும் எண்ணற்ற துணிக் கடைகளில் நீங்கள் தரம் வாய்ந்த ஆடைகளை குறைந்த விலையில் வாங்க முடியும். அதிலும் குறிப்பாக இந்தப் பகுதியில் கிடைக்கும் மகாராஷ்டிரிய பாரம்பரிய புடவை வெளிநாட்டு பயணிகளிடையே மிகவும் பிரபலம். மேலும் முதல் தரமான உணவு விடுதிகளும் பாராமதியில் ஏராளமாக உள்ளன.

பாராமதியின் ஏரோடிரம்மில் நடத்தபடும் அமைச்சூர் வகுப்புகளில் கலந்துகொண்டு நீங்கள் வானத்தில் பறந்து மகிழலாம். அதோடு பயணிகளின் விருப்பத்திற்கேற்ப மாட்டு வண்டி சவாரியில் ஈடுபட்டும் பொழுதை கழிக்கலாம்.

Read more about: maharastra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X