Search
  • Follow NativePlanet
Share
» »பர்தமான் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பர்தமான் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

கொல்கட்டாவிற்கு அருகில் இருக்கும் பர்தமான் நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும், கிபி 6ஆம் நூற்றாண்டு வரை செல்லும் அதன் வரலாறு மகாவீர் காலத்தை ஒத்ததாய் இருக்கிறது. மேலும் ஆங்கிலேயர்களின் தலைமைச் செயலகமாகவும் இவ்வூர் விளங்கியது. நகரத்தில் உள்ள கோவில்கள் பர்தமான் சுற்றுலாத்துறை அங்குள்ள கோவில்களையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

வங்காள இந்து கலாச்சாரத்தின்படி இயங்கும் இக்கோவில்களில் சர்வமங்களா கோவில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பர்தமானில் கிடைக்கும் உணவுகள் கர்ஜான் வாயில் மற்றும் மஹாராஜா கோலாபாக் தோட்டம் ஆகியவை பர்தமானில் முக்கியமான சுற்றுலா தளங்கள் ஆகும். இவற்றுக்கு அருகாமையில் உள்ள உணவங்களில் முகாலய சாயலுடன் கூடிய சுவை மிகுந்த பெங்காளி உணவுகள் கிடைக்கின்றன.

Cover pc: Barakat Munshi

சிடாபோக் மற்றும் மிஹிதானா ஆகிய இனிப்பு வகைகள் இவ்வூரின் சிறப்பம்சங்களாகும். மற்றொருபுறம் சுவை மிகுந்த மீன் உணவுகள் விற்கப்படுகின்றன. திருவிழாக்கள் திருவிழாக்களை பர்தமான் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இந்துப் பண்டிகைகளான ஹோலி, தீபாவளி மற்றும் புதுவருடப் பிறப்பு போன்ற சமயங்களில் ஊரே விழாக்கோலம் பூணுகிறது. துர்கா பூஜா, தசரா ஆகிய விழாக்கள் வங்காள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இச்சமயங்களில் ஏராளமான உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன.

கல்வி மையம் 1960களில் கிழக்கு இந்தியாவில் புகழ்பெற கல்வி மையமாக பர்தமான் வளரத் துவங்கியது. தரமான கல்விக்காக ஏராளமான மாணவர்கள் இங்கு வரத் துவங்கினார்கள். புகழ்பெற்ற விஞ்ஞான மையங்களும், புர்த்வான் பல்கலைக்கழகம் இங்கே அமைந்துள்ளது.

பர்தமான் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

sanjeew singh

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

ஓய்வு நேரம் இருப்பின் 108 தனித்துவம் வாய்ந்த சிவலிங்கங்கள் இருக்கும் நவாப் ஹட் சென்றுவாருங்கள். நவாப் ஹட் என்றால் 108கோவில்கள் என்று பொருள். மஹாசிவராத்திரி விழா இங்கு மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஆஃப்கான் ஷேர் கல்லறை ஆகட்டும், ரமணா பங்கன் வன அலுவலகம் ஆகட்டும் அனைத்து வகையான சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறும் பர்தமானில் பார்க்க விசயங்கள் இருக்கிறது. பர்தமான் அடைவது எப்படி? புகழ்பெற்ற தலம் என்பதால் பர்தமானை சாலை, ரயில் மற்றும் விமானம் மூலமாக சுலபமாக அடையலாம்.

125 வகையான மரங்களையும் செடிகளையும் உள்ளடக்கிய இந்த அரண்மனையில் உள்ள வனவியல் பூங்கா 1800ல் பிஜோய் சந்த் மஹாதாப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இங்கு அமர்ந்து கணிணியில் அலுவலக வேலைகளையும், புத்தகங்கள் படிப்பதையும் பலர் விரும்புகிறார்கள்.

பர்தமான் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

Indu

பர்தமானின் முகாலயர்களின் ஆட்சிக்கு எதிராக போராடிய ஷேர் ஆஃப்கானின் கல்லறை இங்கு உள்ளது. 1610ல் நிகழ்ந்த போருக்குப் பின் அவர் நினைவாக இக்கல்லறை எழுப்பப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள்.

வனவிலங்கு அலுவலகத்திற்கு உட்பட்ட ரமணா பூங்கா இயற்கை அழகு நிரம்பியதாகவும், முதலை, மான்கள், புலிகள் போன்ற வனவிலங்குகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. புகைப்படக்காரர்களின் சொர்க்கபுரியாக திகழும் இவ்விடத்திற்கு புலம்பெயர் பறவைகளும் ஏராளமாக வருகின்றன. இங்கிருக்கும் விஞ்ஞான மையத்திற்கு செல்வதன் மூலம் ஏராளமான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

காளி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதாகும். காளியின் கல் சிலையை பிரதான தெய்வமாக கொண்டுள்ள இக்கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருகை தருவதால் வளாகத்தினுள்ளேயே எல்லா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Read more about: kolkata
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more