Search
  • Follow NativePlanet
Share
» »பார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பார்மேர் எனும் இந்த புராதன நகரம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 13ம் நூற்றாண்டில் பஹதா ராவ் அல்லது பர் ராவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

COVER pC:
Last Emperor

இவர் நினைவாகவே துவக்க காலத்தில் இந்நகரம் பஹதாமேர் என்று அழைக்கப்பட்டது. அதாவது 'பஹதாவின் மலைக்கோட்டை' என்பது அதன் பொருளாகும். காலப்போக்கில் அப்பெயர் பார்மேர் என்று மாறி அதுவே நிலை பெற்றுவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் இப்பகுதி செழுமையான கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய கலையம்சங்களுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பல வரலாற்றுத்தலங்களும் பார்மேர் நகரத்தை முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.

பார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

Searchtrial67

பார்மேர் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வதன் மூலம் கிராமப்புற அழகு, ராஜஸ்தானிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒருவர் மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இங்கு பார்மேர் கோட்டை, ராணி படியானி கோயில், விஷ்ணு கோயில், தேவ்கா சூரியக்கோயில், ஜுனா ஜெயின் கோயில் மற்றும் சஃபேத் அக்காரா போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் அடங்கியுள்ளன. பலவகையான திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கேளிக்கைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தில்வாரா எனும் இடத்தில் நடத்தப்படும் கால்நடைச்சந்தை வருடாவருடம் ரவால் மல்லிநாத் நினைவாக நடத்தப்படுகிறது. வீரதாரா மேளா மற்றும் பார்மேர் தார் திருவிழா போன்றவை இங்கு கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும்

பார்மேர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

Ambrish mishra

பார்மேர் நகரம் முக்கியமான இந்திய நகரங்களுடன் விமான, ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். பார்மேர் ரயில் நிலையம் மீட்டர்கேஜ் இருப்புப்பாதை மூலம் ஜோத்பூர் நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற ராஜஸ்தானிய நகரங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சி சேவைகளும் பார்மேர் நகரத்திற்கு கிடைக்கின்றன. இங்கிருந்து 207 கி.மீ தூரத்தில் ஜோத்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட பருவம் பார்மேர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

More News

    Read more about: rajasthan
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+