Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவை ஆண்டாரா அலெக்சாண்டர்! என்ன சொல்கிறது வரலாறு?

இந்தியாவை ஆண்டாரா அலெக்சாண்டர்! என்ன சொல்கிறது வரலாறு?

இந்தியாவை ஆண்டாரா அலெக்சாண்டர்! என்ன சொல்கிறது வரலாறு?

By IamUD

உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற பேராசை கொண்ட அலெக்சாண்டர் எனும் மாவீரர் இந்தியாவை அடைவதே லட்சியம் எனக் கொண்டு இந்திய நாட்டை நோக்கி படையெடுத்து வந்தான் என வரலாற்று கதைகள் கூற கேட்டிருப்போம் நாம். ஆனாலும், அலெக்சாண்டரால் இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை என்று கூறுவார்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா?அலெக்சாண்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றினார் என்பதே. அவர் ஆட்சி செய்த பகுதி எது பின்னாளில் அது எப்படி மாறியிருக்கிறது. அதன் வரலாறு என்ன.. என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

அலெக்சாண்டர் இந்திய பயணம்

அலெக்சாண்டர் இந்திய பயணம்

இந்தியாவின் அழகை கண்டு மெய் மறந்த அலெக்சாண்டர் இந்தியாவை அடைய ஆசைப்பட்டார். அப்போதைய இந்தியா பல நூறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பகுதியாக இருந்தது. பெரும்பாலும் மலைவாசிக் குழுக்களே அந்த பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் போர் புரிந்து வெற்றி கொண்டார் அலெக்சாண்டர். அப்படியே இந்தியாவின் பஞ்சாப் பகுதிகளுக்குள் நுழைந்தார்.

Nitin544 -

அலெக்சாண்டர் இந்திய பயணம்

அலெக்சாண்டர் இந்திய பயணம்

உலக வரலாற்றின் தலை சிறந்த வீரர் யார் எனக் கேட்டால் நம்மில் பெரும்பாலானோர் அலெக்சாண்டரை கை நீட்டக்கூடும் அவரது காலத்தில் அதிக அளவு நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒரே மாமன்னர் அவர்தான். வெறும் 33 வயதுக்குள்ளாகவே உலகின் பெரும்பான்மை பகுதிகளை தன் கைக்குள் கொண்டு வந்தார். கிமு 335ம் ஆண்டு அலெக்சாண்டர் மன்னராகிறார். உலகம் முழுவதும் தங்கள் கிரேக்க நாகரிகத்தை பரப்ப வேண்டும் என்ற ஒரு ஆசை அவரது உள்ளத்தில் ஏற்பட்டது. அன்று தொடங்கியது அந்த பயணம்.

baljinder kang

 இந்தியாவை ஆண்டார் அலெக்சாண்டர்

இந்தியாவை ஆண்டார் அலெக்சாண்டர்

முழு இந்தியாவையும் அவரால் வெற்றி கொள்வது என்பது கற்பனையிலும் சாத்தியமில்லாதது. எண்ணற்ற அரசுகளுடன் போரிட வேண்டியிருந்தது அதற்காக. ஆனால் இந்தியாவின் முதல் போரிலேயே அதாவது போரஸ் எனும் புருசோத்தமனுடனான போரில் வெற்றி பெற்றார் அலெக்சாண்டர். போரஸ் ஆண்ட இந்தியாவின் பகுதிகள் அலெக்சாண்டர் இறப்புக்கு முன்பு வரை அவரது ஆட்சியிலேயே இருந்தது. புருசோத்தமனிடம் நாட்டை ஒப்படைத்து செல்லவில்லை அலெக்சாண்டர். மாறாக அவரை ஆளுநர் ஆக்கிவிட்டு சென்றார். அந்த வகையில் இந்தியாவின் ஒரு பகுதியை அலெக்சாண்டர் ஆட்சி செய்தார் என்பதே வரலாறு.

Guneeta

 பாரசீகப் படையெடுப்பு

பாரசீகப் படையெடுப்பு

அந்த காலக்கட்டத்தில் மிகப் பெரிய வல்லரசான பாரசீகத்தின் மீது படையெடுத்து சென்றார் அலெக்சாண்டர் அதுதான் அவரை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தது. கிழக்கு நோக்கி பயணித்து இந்தியாவை கைப்பற்ற திட்டமிட்டார்.

Malikhpur

 அலெக்சாண்டர் ஆண்ட இந்தியாவின் பகுதிகள்

அலெக்சாண்டர் ஆண்ட இந்தியாவின் பகுதிகள்

அலெக்சாண்டர் ஆண்ட இந்தியாவின் பகுதிகள் இப்போது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாமா?

பஞ்சாபின் புகழ்பெற்ற ஊரான பதிந்தா, 6ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட பதி ராஜபுத்திர வீரர்கள் நினைவாக இப்பெயர் பெற்றுள்ளது. வளமான கலாச்சாரத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் இங்கு ஏராளமான பயணிகள் வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானோர்க்கு தெரியாது இது அலெக்சாண்டரின் படைகள் வந்து சென்ற இடம் என்று... வாருங்கள் தெரிந்துகொள்வோம்

Iflex -

 சிந்து நதிக்கரை சிற்றரசுகள்

சிந்து நதிக்கரை சிற்றரசுகள்

அலெக்சாண்டர் படையெடுத்து வந்த அந்த காலக்கட்டத்தில் சிந்து நதிக்கரையில் இருந்தவை அனைத்தும் சிற்றரசுகளே.

vikas bishnoi

 அருகிலுள்ள சுற்றுலா இடங்கள்

அருகிலுள்ள சுற்றுலா இடங்கள்

மத முக்கியத்துவம் வாய்ந்த இந்நகரத்தில் ஏராளமான கோவில்களும், குருத்வாராக்களும் உள்ளன. சிறிய கற்களால் கட்டப்பட்டு பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் குய்லா முபாரக், காட்டுக்குள் இருக்கும் குருத்வாரா லாகி ஜங்கிள் சாஹிப் போன்ற மத தளங்கள் இங்கு ஏராளம் உள்ளன. இவை சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டவர்களையும் திரும்ப திரும்ப வரவழைக்கிறது.

pindisidhu

 இந்தியாவில் நுழைந்த அலெக்சாண்டர்

இந்தியாவில் நுழைந்த அலெக்சாண்டர்

30000 படை வீரர்களுடன் அலெக்சாண்டர் இந்தியாவுக்குள் நுழைகிறார். முதலில் அவர் மலை வாழ் மக்களுடன் போரிடுகிறார். அசகினோய் எனும் படை இவருடன் சண்டையிடுகிறது. மிகவும் கடுமையான சண்டைக்கு பிறகே அலெக்சாண்டர் வெற்றிகொள்கிறார். பின் அம்பி எனும் மன்னர் அலெக்சாண்டருக்கு பணிந்துவிட, போரஸ் எனும் புருசோத்தமன் மீது அலெக்சாண்டரின் கவனம் செல்கிறது.

Malikhpur

 பாஹியா கோட்டை

பாஹியா கோட்டை

செடாக் பூங்கா, டம்டமா சாஹிப், பதிந்தா ஏரி, தோபி பஜார், பீர் ஹாஜி ரத்தானின் மசார் ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன. மிகவும் ஆடம்பரமான தங்கிமிடம் வேண்டும் பயணிகள் பாஹியா கோட்டைக்கு செல்லலாம். 193ல் கட்டப்பட்ட இந்தக் கோட்டை தற்சமயம் நான்கு நட்சத்திர விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

ndisidhu

 நதியை கடந்த அலெக்சாண்டரின் சாமர்த்தியமும் தந்திரமும்

நதியை கடந்த அலெக்சாண்டரின் சாமர்த்தியமும் தந்திரமும்


அலெக்சாண்டரின் படைகள் ஜீலம் நதியைக் கடக்க முடியாமல் தவிக்க, போரஸ் மன்னர் போருக்காக காத்திருந்தார். அலெக்சாண்டரோ இன்னொரு திட்டமிட்டார். அது ஒரு பக்கத்தில் பெரும்படைகளை நிறுத்தி நதியைக் கடக்கமுடியாத படி நாடகமாடி, மறுபுறத்தில் சிறு படைகள் மூலம் திசை திருப்பி போரஸ் படையை நிலைகுலையச் செய்து, அதிரடி காட்டுவது என்பதுதான். எல்லாவற்றையும் சமாளித்த போரஸின் படைகள், மழையால் போர்க்களம் சகதியாக மாறியதை எதிர்கொள்ளமுடியாமல் தவித்தது.

Harvinder Chandigarh

 எப்படி அடைவது

எப்படி அடைவது

பதிந்தா அடைய வழி டெல்லியில் இருந்து 326கிமீ தொலைவில் உள்ள பதிந்தாவை 6மணி நேர சாலை பயணத்தில் அடையலாம். சுற்றியுள்ள நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பான பேருந்து மற்றும் கார் வசதி உள்ளது. லூதியானா வரை விமானத்திலும் பின்னர் அங்கிருந்து பதிந்தாவிற்கு வாடகைக் காரிலும் பயணிக்கலாம். பயணிக்க சிறந்த பருவம் அக்டோபர் முதல் மார் வரையிலான காலத்தில் பதிந்தாவிற்கு பயணிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

pindisidhu

சரணடைய மறுத்த போரஸ்

சரணடைய மறுத்த போரஸ்

சரணடைய மறுத்ததால் கைது செய்யப்பட்ட போரஸிடன் கடைசி ஆசை என்ன என்று கேட்க, என்னையும் உமக்கு நிகராக மதிக்கும்படி துணிவுடன் கேட்டதாகவும், அவரது துணிச்சலை கண்டு வியந்த அலெக்சாண்டர் போரஸின் பகுதிகளுடன், தம் நிலப்பரப்பின் சில பகுதிகளையும் கொடுத்து அவரையே ஆட்சி செய்ய பணித்ததாகவும் சில வரலாற்று கதைகள் உலாவுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல..

Harvinder Chandigarh

 வனவிலங்கு பூங்கா

வனவிலங்கு பூங்கா


வனவிலங்கு பூங்கா பதிந்தாவின் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான பலவகை விலங்குகள் இங்கு உள்ளன. இயற்கை அழகை படம்பிடிக்க ஏராளமான புகைப்படக்காரர்கள் வருகிறார்கள்.

Harmanpreet Meehnian

 துணிச்சல் மிகுந்த வீரன்

துணிச்சல் மிகுந்த வீரன்

துணிச்சலுடன் கூடிய போரஸை அலெக்சாண்டர் பாராட்டினார் என்பதுடன், போரஸ் உடைய நாட்டினை நிர்வகிக்கும் உரிமையை மட்டுமே வழங்கினார் அலெக்சாண்டர். கிட்டத்தட்ட போரஸ் ஒரு ஆளுநர் போலதான். முழு நிர்வாகமும் அலெக்சாண்டர் கைகளில்தான் இருந்தது எனவும், ஆனால் சில வருடங்களிலேயே அலெக்சாண்டர் இறக்க, இது வெளியில் தெரியாமல் போயிருக்கலாம் எனவும் வரலாறு தெரிவிக்கிறது.

Harvinder Chandigarh

 பீர் ஹாஜி ரத்தன்

பீர் ஹாஜி ரத்தன்

பீர் ஹாஜி ரத்தன் பதிந்தாவின் புகழ்பெற்ற மததளமாகும். பாபா ஹாஜொ ரத்தன் மெக்காவுக்கு சென்றுவந்தபின் இங்கு வந்த தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. அருகிலேயே பொதுச்சுவருடன் கூடிய மசூதியும், குருத்வாராவும் உள்ளன.

Charan Gill

 டால்வன்டி

டால்வன்டி

டால்வன்டி சபோவில் உள்ள இந்த இடம் குரு கோபிந்த் சிங் ஶ்ரீ குரு க்ராந்த் சாஹிபை தயாரித்த ஐந்து இடங்களில் ஒன்றாகும். முகாலயர்களுடன் நடந்த போருக்குப் பின் இங்கு ஓய்வெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. வளாகத்தினும் 10 குருத்வாராக்களும், மூன்று நீர்த்தொட்டிகளும் உள்ளன. 1510ல் குரு நானக் இங்கு வந்தபோது முதல் தொட்டி உருவாக்கப்பட்டது. குருசார் சரோவர், அகால்ஸார் சரோவர் என்ற இரண்டாவது மூன்றாவது தொட்டிகளில் நீர் அருந்துவது நோய்களைத் தீர்ப்பதாகச் சொல்லப்படுகிறது

Gurlal Maan

 பிர் தலாப் வனவிலங்கு பூங்கா

பிர் தலாப் வனவிலங்கு பூங்கா


பிர் தலாப் வனவிலங்கு பூங்கா பதிந்தாவில் இருந்து 7.2கிமீ தொலைவில் உள்ளது. சம்பார், சிறுத்தை, ப்ளாக் பக் மான்கள் என பலவகை விலங்குகள் இங்கு உள்ளன.

T. R. Shankar Raman

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X