Search
  • Follow NativePlanet
Share
» »பெர்ஹாம்பூர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பெர்ஹாம்பூர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பெர்ஹாம்பூர் என்ற ஆங்கிலேயர்கள் இட்ட பெயர் சமீபத்தில் அவ்வூரின் சமஸ்கிருத தொடர்புக்கு ஏற்ப பிரம்மாபூர் என மாற்றப்பட்டது. எனினும் இன்னமும் பலர் பெஹ்ராம்பூர் என்றே அழைக்கிறார்கள். இங்கிருக்கும் ஏராளமான கோவில்கள் உள்ளூர் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது யாத்ரீக சுற்றுலாவின் மூலம் வருமானம் மாநில அரசின் வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கிறது,

 பெர்ஹாம்பூர் - பட்டு நகரம்!

பெர்ஹாம்பூர் - பட்டு நகரம்!

ஒடிசாவின் பழம்பெரும் நகரங்களுள் ஒன்றான பெர்ஹாம்பூர் பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரின் பாரம்பரியமும், வரலாற்றுப் பெருமையும் பெர்ஹாம்பூர் சமகாலத்தில் பெரும் பெருமைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இங்கு தயாராகும் உயர்ரக பட்டு பெர்ஹாம்பூர் பட்டா என்றழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது கைத்தறித் துணிகள் மற்றும் ஆபரணங்களும் இங்கு ஏராளமாக கிடைக்கின்றன.

தனித்துவம் வாய்ந்த கடற்கரை!!

தனித்துவம் வாய்ந்த கடற்கரை!!

கடற்கரை விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக பெர்ஹாம்பூர் திகழ்கிறது. வழமையான மணல், சூரியன், சறுக்கு விளையாட்டுக்கள் மட்டுமல்லாது கோவில்கள், உணவுவகைகள், அரங்கங்கள் என பெர்ஹாம்பூரின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இங்கு பொழுதுபோக்க ஏராளமான விசயங்கள் உண்டு.

Puspanjali1982

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

பெர்ஹாம்பூர் சுற்றுலாத்துறை நகரில் நிலவும் பலவகையான இயற்கை சத்தங்களுக்காகவும், காட்சிகளுக்காகவும் வளம் கொழிக்கும் துறையாக இருக்கிறது. இங்கிருக்கும் பங்கேஸ்வரி கோவில், நாராயணி, மஹேந்திரகிரி, மா புதி தாகுரணி கோவில், பால்குமாரி கோவில், மந்திரிதி சித்த பைரவி கோவில் ஆகியவை இங்கிருக்கும் புகழ்பெற்ற கோவில்களாகும். தப்தபானி வெந்நீர் ஊற்றில் பயணிகள் நீராடி மகிழலாம். அதுமட்டுமல்லாது 30கிமீ தொலைவில் உள்ள ஆர்யபள்ளி கடற்கரையிலும் மிதமான வெப்பக் காற்றை அனுபவித்து மகிழலாம்.

Smaranika123

பயணிக்க சிறந்த பருவம்

பயணிக்க சிறந்த பருவம்

அக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மிதமான வானிலை நிலவுவதால் பயணிக்க சிறந்த பருவமாக அறியப்படுகின்றன.

நாட்டின் பல முக்கியமான நகரங்கள் பெஹ்ராம்பூருடன் சாலை, ரயில், விமான தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளதால் பயணிப்பது சுலபம்.

Pinakpani

பங்கேஸ்வரி கோவில்

பங்கேஸ்வரி கோவில்

பங்கேஸ்வரி கோவில் பிரபலமடைவதற்கு முன்பே இங்கு பல பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். பெஹ்ராம்பூரில் இருந்து 20கிமீ தொலைவில் கெரண்டிமாலா மலைத்தொடரில் உள்ள இக்கோவிலை பெஹ்ராம்பூர்- திகபண்டி நெடுஞ்சாலையில் இருந்து 10கிமீ பயணத்தின் மூலம் அடையலாம். சக்தியின் வடிவமாக கருதப்படும் பங்கேஸ்வரி அம்மனின் சிலை சிகப்பு நிற உடை உடுத்தி கோபமாக காட்சியளிக்கிறது . கோடை காலம் இங்கு செல்வதற்கு உகந்த பருவமாகும், இந்துக்களுக்கு புனித தளமாக விளங்கும் இந்த இடத்தின் இயற்கை அழகும், அமைதியும் வர்ணிக்க முடியாதது.

Bikash Lakra

மஹேந்திரகிரி

மஹேந்திரகிரி

கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த பராலகேமுந்தியில் உள்ளது மஹேந்திரகிரி. கிழக்கு மலைத் தொடர்களின் ஒரு பகுதியான இதில் இயற்கையான ஒலிகளும், காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. இந்த மலை உச்சி ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இடம் இயற்கை அழகிற்காகவும் அறியப்படுகிறது. பாண்டவர்களால் கட்டப்பட்டதாக அறியப்படும் கோவில்களின் மிச்சங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன. சிவராத்திரி சமயங்களில் இங்கு வருவது சிறப்பாக கருதப்படுகிறது.

Ilya Mauter

Read more about: odisha
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more