» »கேரளாவில் இருக்கும் அற்புத கடற்கரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

கேரளாவில் இருக்கும் அற்புத கடற்கரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Posted By: Staff

அரபிக்கடல் முத்தமிடும் கேரளத்தில் உண்மையிலேயே அற்புதமான கடற்கரைகள் இருக்கின்றன. இந்திய தேசத்தையும் உலகத்தையும் இணைக்கும் பாலமாக திகழ்ந்த கேரள கடற்கரைகள் இன்று உலகம் முழுக்க இருக்கும் சுற்றுலாப் பயணிகளையும் கவர தவறுவதில்லை.

முன்னூறு ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் கொண்ட ஆலப்புழா கடற்கரை, காரிலும் பைக்கிலும் சுற்றிப்பார்க்க ஏதுவான கடுமையான மணல்ப்பரப்பு கொண்ட முளுபிலங்காடு கடற்கரை, மலைக்குன்றை ஒட்டியபடியே அமைந்திருக்கும் வர்களா கடற்கரை போன்றவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.  

ஆலப்புழா கடற்கரை:

ஆலப்புழா கடற்கரை:

அலைகள் எழாத உப்பங்கழி ஓடைகளுக்கும் (Backwaters), அதில் ஓடும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற ஆலப்புழா நகரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது ஆலப்புழா கடற்கரை.

Amitra Kar

ஆலப்புழா கடற்கரை:

ஆலப்புழா கடற்கரை:

குப்பைகளால் நிரம்பியிராத சுத்தமான இந்த கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆலப்புழா கடற்கரை திருவிழா, மணல் சித்திர திருவிழா போன்றவை நடத்தப்படுகின்றன.

Roy Grimwood

ஆலப்புழா கடற்கரை:

ஆலப்புழா கடற்கரை:

ஆலப்புழா கடற்கரையில் நாம் நிச்சயம் தவறவிடக்கூடாத ஒன்று இங்கிருக்கும் நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஆகும். 1862ஆம் ஆண்டு கட்டப்பட்ட இதனுள் மதியம் 3மணி முதல் 4:30வரை சுற்றுலாப்பயணிகள் அனுபதிக்கப்படுகின்றனர்.

அனுமதிக்கட்டணம் ₹10.

ஆலப்புழா கடற்கரை:

ஆலப்புழா கடற்கரை:

வருகின்றன ஏப்ரல் மாதம் 2016ஆம் ஆண்டிற்கான சர்வதேச மணல் சிற்பத்திருவிழா ஆலப்புழா கடற்கரையில் நடைபெறவிருக்கிறது.

தேனிலவு சுற்றுலாவுக்கு வர மிகச்சிறந்த இடங்களில் ஒன்றான ஆலப்புழாவை பற்றிய மேலதிக தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Rocky Barua

ஆலப்புழா கடற்கரை:

ஆலப்புழா கடற்கரை:

கலங்கரை விளக்கத்தின் மேலிருந்து தெரியும் ஆலப்புழா கடற்கரையின் அழகிய காட்சி !!!

கோவளம் கடற்கரை:

கோவளம் கடற்கரை:

கேரளாவில் இருக்கும் குட்டி கோவா கடற்கரை போன்ற இடம் தான் கோவளம் கடற்கரை ஆகும். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 16கி.மீ தொலைவிலிருக்கும் கோவளத்தில் மொத்தம் மூன்று கடற்கரைகள் இருக்கின்றன.

Ian Armstrong

கோவளம் கடற்கரை:

கோவளம் கடற்கரை:

கிட்டத்தட்ட 17கி.மீ நீளம் கொண்ட கோவளம் கடற்கரைகள் பிறைநிலா வடிவில் இயற்கையாக அமையப்பெற்றிருக்கின்றன.

லைட் ஹவுஸ் பீச், ஹவாஹ் பீச், சமுத்ரா பீச் ஆகியவை தான் கோவளத்தில் இருக்கும் மூன்று கடற்கரைகள் ஆகும்.

Dhimant Patel

கோவளம் கடற்கரை:

கோவளம் கடற்கரை:

லைட் ஹவுஸ் பீச்:

கோவளத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும்லைட் ஹவுஸ் பீச் சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும். இங்கிருக்கும் விழிஞம் கலங்கரை விளக்கத்தின் காரணமாகத்தான் இக்கடர்க்கரைக்குலைட் ஹவுஸ் பீச் என்ற பெயர் வந்திருக்கிறது.

அதிகாலையிலும், அந்திப்பொழுது நேரத்திலும் சூரியன் இங்கே வர்ணஜாலம் புரிவதை காணலாம்.

Thejas Panarkandy

கோவளம் கடற்கரை:

கோவளம் கடற்கரை:

லைட் ஹவுஸ் கடற்கரையில் கோவா கடற்கரைகளில் இருப்பதை போல நீச்சல் உடையணித்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை காண முடியும். நண்பர்களுடன் கேரளாவில் சுற்றிபார்க்கவேண்டிய இடங்களில் இந்த கடற்கரையும் ஒன்று.

Marc Staub

கோவளம் கடற்கரை:

கோவளம் கடற்கரை:

கோவளத்தில் இருக்கும் மற்ற இரு கடற்கரைகளான ஹவாஹ் மற்றும் சமுத்ரா கடற்கரைகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகக்குறைவே. இந்த கடற்கரைகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், பிடித்த மீன்களை விற்கும் இடமாகவும் இந்த இரு கடற்கரைகளையும் பயன்படுத்துகின்றனர்.

countries in colors

பேக்கள் கடற்கரை:

பேக்கள் கடற்கரை:

தமிழ் சினிமா ரசிகர்கள் எவராலும் மறக்கமுடியாத திரைப்படமான 'பாம்பே' படத்தில் வரும் 'உயிரே உயிரே' பாடல் படமாக்கப்பட்ட பேக்கள் கோட்டை அமைந்திருக்கும் இடம் தான் இந்த பேக்கள் கடற்கரை ஆகும்.

கேரளாவில் காசர்கோட் மாவட்டத்தில் இந்த கடற்கரை அமைந்திருக்கிறது.

-Reji

பேக்கள் கடற்கரை:

பேக்கள் கடற்கரை:

பேக்கள் கடற்கரையில் சொல்லிக்கொள்ளும்படியான அம்சங்கள் எதுவும் இல்லை. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் பேக்கள் கோட்டையை சுற்றிப்பார்க்கவே வருகின்றனர்.

ஒரு காலத்தில் அந்நிய கடற்ப்படைகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கி மலபார் கடற்கரையினை காத்து நின்ற பேக்கள் கோட்டையையும், அதனை ஒட்டியே அமைந்திருக்கும் பேக்கள் கடற்கரையையும் வாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் சென்று சுற்றிப்பருங்கள்.

Hari Prasad Nadig

முளுபிலங்காடு கடற்கரை:

முளுபிலங்காடு கடற்கரை:

பொதுவாக கடற்கரைகளில் காலில் செருப்பு போட்டுக்கொண்டு நடப்பதே கடினமாக இருக்கும். ஆனால் தலசேரிக்கும் கண்ணூறுக்கும் இடையில் அமைந்திருக்கும்முளுபிலங்காடு கடற்கரையில் தார் சாலையில் ஓட்டுவதை போல வாகனங்களை எவ்வித சிரமமுமின்றி ஒட்டி மகிழலாம்.

Riju K

முளுபிலங்காடு கடற்கரை:

முளுபிலங்காடு கடற்கரை:

5.5கி.மீ நீளமுள்ளமுளுபிலங்காடு கடற்கரை தான் இந்தியாவிலிருக்கும் மிகநீளமான 'டிரைவ்-இன்' கடற்கரையாகும். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இங்கே கடற்கரை திருவிழா நடக்கிறது.

Ranjit Laxman

முளுபிலங்காடு கடற்கரை:

முளுபிலங்காடு கடற்கரை:

இந்த கடற்கரையில் உள்ள கடினத்தன்மை கொண்ட மணல் வாகனங்களை முழுவேகத்தில் இயக்கவும் எதுவாக இருக்கிறது. கேரளத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தவறாமல் இங்கே வருகின்றனர்.

முளுபிலங்காடு கடற்கரை தலசேரியில் இருந்து 7.கி.மீ தொலைவிலும், கண்ணூரில் இருந்து 15.கி.மீ தொலைவிலும் இருக்கிறது.

Riju K

வர்களா கடற்கரை:

வர்களா கடற்கரை:

கேரளாவில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரை எதுவென்றால்வர்களா கடற்கரை என்று உறுதியாக சொல்லலாம். இதன் தனித்துவமே ஒரு சிறிய மலைத்தொடரை ஒட்டியே அமைந்திருப்பது தான். இந்தியாவில் இப்படியான புவியமைப்பு கொண்ட ஒரே கடற்கரை வர்களா கடற்கரை மட்டும் தான்.

இது பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

Henrik Jagels

வர்களா கடற்கரை:

வர்களா கடற்கரை:

கடற்கரையை ஒட்டியிருக்கும் குன்றின் மேல் ஏராளமான ஹோட்டல்களும் ஸ்பாக்களும் உள்ளன. இங்கே ஒய்யாரமாக சூரிய குளியல் போட்டபடி கடற்கரையை ரசிக்கலாம். அதோடு இங்கே நீரூற்றுகளும், சுனைகளும் கூட நிறைய இருக்கின்றன.

Vineet Radhakrishnan

வர்களா கடற்கரை:

வர்களா கடற்கரை:

சில நாட்கள் வழக்கமான அலுத்துப்போன வாழ்கையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையேனும் இதுபோன்ற இயற்கையோடு நேரடியாக கொஞ்சி மகிழக்கூடிய வாய்ப்பிருக்கும் இடங்களுக்கு சுற்றுலா வாருங்கள்.

Thejas Panarkandy