Search
  • Follow NativePlanet
Share
» »வாசகர் விருப்பம் - சுற்றுலாவுக்கு சிறந்தது அனந்தகிரி மலையா? ராமோஜி பிலிம் சிட்டியா?

வாசகர் விருப்பம் - சுற்றுலாவுக்கு சிறந்தது அனந்தகிரி மலையா? ராமோஜி பிலிம் சிட்டியா?

By Udhaya

ஹாய் பிரண்ட்ஸ். நா உங்க சான்யா. இன்னிக்கு நம்ம வாசகர்கள்ல ஒருத்தங்க ஹைதராபாத்துக்கு டூர் போனா பெஸ்ட் பிளேஸ் எதுனு கேட்ருக்காங்க. அதுல ரெண்டு இடத்த குறிப்பிட்டும் சொல்லிருக்காங்க. ஒன்னு அனந்தகிரி மலை இன்னொன்னு ராமோஜி பிலிம் சிட்டி. இந்த ரெண்டு இடங்கள தவிர்த்து இன்னும் நிறைய இடங்கள் ஹைதரபாத்ல இருக்கு. அதே நேரத்துல இந்த ரெண்டு இடங்கள்ல எது பெஸ்ட்.. எப்ப எந்த காலத்துல இந்த இடங்கள் எப்படி எப்படி இருக்கும்னு கேட்ருக்காங்க. அவங்களுக்கா மட்டும் இல்ல நண்பர்களே உங்களுக்காகவும்.. நீங்க ஹைதராபாத் போனீங்கன்னா உங்களுக்கு சுற்றிப் பார்க்க இந்த ரெண்டுல பெஸ்ட் இடங்கள் எதுனு இந்த பதிவுல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, நம்ம பதிவுகல தினந்தோறும் பாக்கணும்னா மேல இருக்குற பெல் பட்டன அமுக்கி சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. உங்களுக்கும் ஏதாவது கேள்வி கேக்கணும்னா நம்மளோட முகநூல் பக்கத்துல போயி இன்பாக்ஸ்ல கேளுங்க..

 அனந்தகிரி மலை

அனந்தகிரி மலை

தெலங்கானா மாநிலத்தில் மிக அழகாக காட்சி தரும் மலைப் பிரதேசம் இந்த அனந்தகிரி மலைகள் ஆகும். இது தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலைப் பிரதேசம். இது விக்ராபாத் என்று அழைக்கப்படும் பகுதியை உள்ளடக்கியதாகும்.

IM3847

ஆறுகளும் இயற்கை ஆர்வமும்

ஆறுகளும் இயற்கை ஆர்வமும்

இந்த மலைகள் பொதுவாகவே இயற்கை ஆர்வலர்களால் அதிகம் நேசிக்கப்படுகிறது. ஹைதராபாத்திலிருந்து அருகில் இருப்பதாலும், மிக அழகான இயற்கை காட்சிகளை விருந்தளிப்பதாலும் மக்களுக்கு எளிதாக வந்து செல்லமுடியும் என்பதாலும் இது தெலங்கானாவின் சிறந்த சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாக இருக்கிறது.

இங்கு ஓஸ்மான்சாகர், ஹிமாயத்சாகர் எனும் இரு பெரும் நீர் நிலைகள் உள்ளன. இவை இப்பகுதியை வளமாக்குகின்றன. முஸி ஆறும் இங்கு உற்பத்தியாகி ஓடுகிறது.

Praveen120

முஸி ஆறு

முஸி ஆறு

அனந்தகிரி மலையில் உற்பத்தி ஆகி, 90 கிமீ பயணித்து ஹைதராபாத் வழியாக சென்று பல இடங்களை வளமையாக்குகிறது முஸி ஆறு. நல்கொண்டா மாவட்டத்தில் வாடபள்ளி எனும் இடத்தில் கிருஷ்ணா நதியுடன் கலக்கிறது. பின் 240 கிமீ பயணிக்கிறது.

Praveen120

அனந்த பத்மநாப சுவாமி கோயில்

அனந்த பத்மநாப சுவாமி கோயில்

அனந்தகிரி மலை இயற்கை காட்சிகளுக்கு மட்டுமல்ல ஆன்மீக அம்சங்களுக்கும் பெயர் போனது. இங்கு இருக்கும் அனந்த பத்ம நாப சுவாமி உலகப் புகழ் பெற்றவர். பகவான் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோயிலானது அவரது பெயரிலேயே இந்த மலையும் புகழ் பெறுகிறது.

Nagaraju raveender

நாகசமுத்ரம் ஏரி

நாகசமுத்ரம் ஏரி

அனந்த பத்ம நாப சுவாமி கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது இந்த நாகசமுத்திரம் ஏரி. இது அணையுடன் கூடிய ஏரி ஆகும். அனந்தகிரி மலையிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு அருகே நின்று பார்க்கும்போது சொர்க்கத்தில் இருக்கிறோமா என்பதாக தோன்றும். இந்த இடத்துக்கு சுற்றுலா செல்ல சரியான நேரம் இதுதான். உடனே கிளம்புங்கள்.

Deepak R Koppula

டிரெக்கிங் செல்வோம் வாங்க

டிரெக்கிங் செல்வோம் வாங்க

முஸி ஆறு தோன்றும் இடமான அனந்தகிரி மலைக்கு டிரெக்கிங் செல்ல விரும்புகிறவர்கள் இந்த பயண வழிகாட்டியை பயன்படுத்துங்கள்.

செவெல்லா முதல் விக்ராபாத் வரையிலான சாலை மிகவும் அழகாக இருக்கும். புல் தரைகளும், சூரிய காந்தி மலர்களும் நம்மை வரவேற்கும்.

ரெம்ப தமிழ்ல பேசுறேன்ல.. நா என் பிரண்ட் கிஷோர் கூட ஹைதரபாத் டிரிப் போயிருந்தப்ப இந்த டிரெக்கிங் போயிருந்தோம். ரெம்பவே அழகான இடம். அதுவும் மழைக்காலங்கள்ல பச்சை பச்சைனு அடடே.. செம்மயா இருக்கும்.

கீழ இருந்த பாத்தாலே மலையோட அழகு தெரியும். மலைனு சொல்றதவிட குன்றுங்குறதுதான் சரியான பதமா இருக்கும். கோடைக் காலங்கள்லயும் இங்க சுற்றுலாப் பயணிகள் நிறைய பேர் வராங்க.

உங்களுக்கு ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன். இங்க அனந்த பத்ம நாப சுவாமி கோயில் இருக்குனு சொன்னேன்லயா அது ஒரு சிறப்பு இருக்கு. நீங்க நினச்சி கூட பாத்துருக்க மாட்டீங்க..

இந்த கோயில கட்டுனத ஒரு முகலாய மன்னர். இந்தியாவுல இந்த இடத்துக்குனு ஒரு தனி மரியாதை இருக்குனா அதுக்கு இதுவும் ஒரு காரணம்.

IM3847

என்னவெல்லாம் பாக்கலாம்

என்னவெல்லாம் பாக்கலாம்

நீர் ஊற்றுகளை பாக்கலாம்.. அனந்த பத்ம நாப சுவாமி கோயிலுக்கு போகலாம். குகைகள் நிறைய இருக்கு. செல்பி எடுத்து கொண்டாடலாம். இங்க இருக்குற மரம் , செடி, கொடிகள்ல வர்ற பூக்கள், விலங்குகள் பறவைகள்னு ரசிக்கலாம்.

J.M.Garg

ஒரு திட்டமிடல்

ஒரு திட்டமிடல்

இந்த பிளான அப்டியே பாஃலோ பண்ணனும்னு அவசியம் இல்ல. நீங்க உங்க வசதிக்கு ஏற்ப மாத்திக்கலாம். ஆனா இந்த பிளான் ஒரு நல்ல பிளான்.. ஏன்னா பிளான் போட்டது சான்யா..

காலைல 6 மணிக்கெல்லாம் நானல் நகர் கிட்ட வந்துடனும். பக்கத்துலேயே பேக்கரி ஒன்னு இருக்கு. அங்கன எதுனா கிடச்சினா வாங்கி சாப்டுக்கோங்க. உங்க பிரேக் பாஸ்ட் ஓவர்..

பிரேக் பாஸ்ட் ஓவர் ஆனதும் இப்ப டிரெக்கிங். இல்ல கொஞ்ச நேரத்துல நிறைய கடைகள் இருக்கு அங்கயும் வாங்கி சாப்பிட்டுக்கலாம். எப்ப பாரு சாப்பாடு சாப்பாடு சாப்பாடு... வந்த வேளைய பாக்கலாம்னு நீங்க சொல்றது புரியுது.. வாங்க நம்ம டிரெக்கிங்க தொடங்குவோம்

காலை 7 மணி - (பிக்பாஸ் வீட்ல சொல்றமாதிரியே இருக்கு...) டிரெக்கிங் தொடங்குகிறது.

காலை 8.30 மணி கொஞ்ச நேரம் ஓய்வு அல்லது காலை உணவு சாப்பிடலனா கொஞ்சமா சாப்பிட்டுக்கோங்க.. சாப்பாடு கட்டாயம் வாங்கிட்டு வந்துருங்க..

இப்படியே பொடி நடயா நடந்து போனா மத்தியானம் 1 மணிக்கு முன்னாடிலாம் அனந்தகிரி கோயிலை அடைந்துவிடலாம். அப்பறம் அங்க இருந்து அரை மணி நேரத்தில் மீண்டும் டிரெக்கிங் பயணத்தை தொடங்கவேண்டும்.

மறக்காமல் மதிய உணவையும் நீங்களே ஏற்பாடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். வெகு தூரத்திலிருந்து வருபவர்களுக்கு கீழே சாப்பாடு தயாரா இருக்கும் சில ஹோட்டல்களை காணமுடிந்தது. அவற்றை பயன்படுத்திக் கொள்ளவும்.

மதிய உணவை நடுக்காட்டிலேயே உண்டுவிட்டு, மீண்டும் நடக்க துவங்கலாம்.

அங்கே கொஞ்சும் மலையை பசுமையை வானத்தை மேகத்தை என எல்லாத்தையும் ரசிச்சிட்டு, அப்படியே திரும்பிடலாம். எப்படியும் கீழ வர்றதுக்கு மாலை 4 மணி ஆயிரும்.

Rajesh Karajada

ராமோஜி பிலிம் சிட்டி

ராமோஜி பிலிம் சிட்டி

ஹைதராபாத் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி - சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்புத்தளமாக மட்டுமல்லாமல் பிக்னிக் சுற்றுலா, பார்ட்டி கொண்டாட்டம், தனியார் நிறுவன நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், சாகச கேம்ப்'கள், மாநாடுகள் மற்றும் தேனிலவுப்பயணம் என்று பலதரப்பட்ட தேவைகளுக்கேற்ற ஸ்தலமாக மாறியுள்ளது.

கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்

கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்

சினிமாபடப்பிடிப்புக்கான மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகமாக ‘கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்' பட்டியலில் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்புக்கு தேவையான எல்லாவித உபகரணங்களையும் இயந்திர அமைப்புகளையும் இந்த படப்பிடிப்பு வளாகம் கொண்டுள்ளதால் படத்தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதிக அளவில் இந்த வளாகத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். நல்லதொரு திரைக்கதையுடன் இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நுழைந்தால் போதும் திரும்பிவரும்போது திரையிடத்தயாரான படத்துடன் திரும்பலாம்.

Pratish Khedekar

பொழுதுபோக்கு அம்சங்கள்

பொழுதுபோக்கு அம்சங்கள்

படப்பிடிப்புக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கான ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நிறைந்துள்ளன. உல்லாச சவாரி அமைப்புகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகின்றன. ஷாப்பிங் வசதிகளும் உணவகங்களும் கூட இங்கு அமைந்துள்ளதால் ஒரு முழுமையான பொழுதுபோக்கு தலமாக ராமோஜி ஃபிலிம் சிட்டி காட்சியளிக்கிறது.

Rameshng

எப்படி செல்வது

எப்படி செல்வது

ஹைதராபாத் ரயில் நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ராமோஜி பிலிம் சிட்டி. இங்கு செல்ல தனி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகள் இதன் நுழைவு வாயில் வரை மட்டுமே செல்லும். அங்கிருந்து பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் விவரிப்பார்கள். ஒருவேளை நீங்கள் தமிழாக இருந்தால் (வேறு மொழியாக இருந்தாலும்) உங்களுக்கென முன்கூட்டியே தமிழில் பேசுபவரை முன்பதிவு செய்யவேண்டும். அல்லது ஆங்கிலத்தில் விளக்குபவர் உங்களுக்கு வழிகாட்டியாக வருவார்.

Rameshng

Read more about: travel temple hills hyderabad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X