Search
  • Follow NativePlanet
Share
» »தென் இந்தியாவில் இருக்கும் மிக வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள் சில...

தென் இந்தியாவில் இருக்கும் மிக வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள் சில...

சுற்றுலா என்றாலே வழக்கமான இடங்களுக்கு வார இறுதியிலோ அல்லது பண்டிகை காலங்களிலோ நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சென்று சுற்றுலா சென்ற இடத்தில் வாகன நெரிசலிலோ, நெரிக்கி தள்ளும் வரிசையிலோ காத்திருந்து பாதி நேரத்தை வீணடித்து கொஞ்சமாக சந்தோசப்பட்டு திரும்புவதாக இருக்ககூடாது. அப்படி செய்து செய்து வெறுத்து பொய் விட்டதா உங்களுக்கு?. வாருங்கள் தென் இந்தியாவில் இருக்கும் சில நல்ல அதேசமயம் வித்தியாசமான சுற்றுலாதளங்களுக்கு சென்று வரலாம்.

ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 50% தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

காதல் ஏரி:

காதல் ஏரி:

உண்மையிலேயே இது அதிசயம் தான். கேரளாவின் மிக அழகான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான வயநாட்டில் அமைந்திருக்கிறது செம்பரா ஏரி. காதலின் சின்னமான இதய வடிவில் இயற்கையாகவே அமையப்பெற்றிருக்கிறது.

Photo:Karthik Narayana

காதல் ஏரி:

காதல் ஏரி:

வயநாட்டில் உள்ள மிக உயர்ந்த சிகரமான செம்பரா மலையின் மேல் அமைந்திருக்கும் இந்த ஏரியை செம்பரா மலையில் ட்ரெக்கிங் செய்வதன் மூலம் அடையலாம். பசுமை போர்த்திய செம்பரா மலையில் உங்கள் அன்பானவருடன் இங்கு சென்று வாருங்கள். முற்றிலும் புதியதொரு அனுபவமாக அமையும்.

Photo:leendeleo

டால்பின்களை பார்க்கலாம்:

டால்பின்களை பார்க்கலாம்:

கோவா என்றாலே நினைவுக்கு வருவது கடற்கரைகள் தான். கூத்து கேளிக்கை என கொண்டாட இந்தியாவிலேயே கோவா கடற்கரைகள் தான் சிறந்த இடம் என்பதில் சந்தேகம் இல்லை. இதை தவிர்த்து அமைதியாக கடற்கரையை ரசிக்க விரும்புபவர்களுக்கு கோவாவில் இருக்கும் பல்லோலம் கடற்கரை தான் சிறந்த இடம்.

Photo:Andrew Miller

டால்பின்களை பார்க்கலாம்:

டால்பின்களை பார்க்கலாம்:

அசுத்தம் அற்ற வெள்ளை மணல் கடற்கரையும், தெளிவான நீல நிற கடலும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கட்டிப்போடுகிறது. குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடலாம், பட்டம் விடலாம், இங்கிருந்து சிறு படகில் கொஞ்ச தூரம் கடலினுள் சென்றால் அங்கே துள்ளிக்குதிக்கும் டால்பின் மீன்களை கண்டு ரசிக்கலாம். அடுத்த் அமுரி கோவா சென்றால் இங்கே வர தவறி விடாதீர்கள்.

Photo:Andrew Miller

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

இன்னும் அதிகம் பிரபலமாகாத அதேசமயம் அற்புதமான இயற்கை காட்சிகளை கொண்டுள்ள இடம் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்துக்கு அருகில் அமைந்திருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு ஆகும்.

Photo:Raj

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

மிகவும் சுத்தமான அதேசமயம் வர்த்தகத்தனம் இல்லாத அழகிய இடமான இங்கு தான் இந்தியாவில் முதல் முறையாக பழங்குடிகளால் விளைவிக்கப்பட்ட பூச்சிகொல்லிகளும், உரங்களும் சேர்க்காத கரிம(Organic) காப்பி கொட்டை கிடைக்கிறது. சுவையான இந்த காபியை ருசித்தபடி பசுமையான இவ்விடத்தை சுற்றிப்பாருங்கள்.

Photo:Kara Newhouse

இந்தியாவின் பிரான்சு:

இந்தியாவின் பிரான்சு:

இந்த ஊரில் கால் வைத்தவுடனே ஏதோ வெளிநாட்டுக்கு வந்தது போன்ற உணர்வு ஏற்ப்படும். நேர்த்தியான, சுத்தமான வீதிகள், இன்றும் நன்றாக பராமரிக்கப்படும் பழங்கால கட்டிடங்கள், பக்கத்து வீட்டுக்காரர் போல பேசும் வெளிநாட்டவர்கள் என்று புதுமையான பல அனுபவங்களை தரவல்லது தமிழ் நாட்டை ஒட்டி இருக்கும் யூனியன் பிரதேசமான பாண்டிசேரி.

Photo:Praveen

இந்தியாவின் பிரான்சு:

இந்தியாவின் பிரான்சு:

இங்குதான் அமைதிக்கான சர்வதேச மாதிரி நகரமான ஆரோவில்லே அமைந்திருக்கிறது. அரவிந்தரின் சிஷ்யையான 'அன்னை' அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நகரத்தில் பல நாடுகளை சேர்ந்த மக்கள் ஒன்றாக இயற்க்கைக்கு கெடுதல் செய்யாத முறையில் வாழ்கின்றனர்.

இதன் நடுவில் அமைந்திருக்கும் மாத்ரிமந்திர் என்னும் உருண்டையான தங்க பந்து வடிவிலான தியான மண்டபம் கட்டிடக்கலை அதிசயம் என்று புகழப்படுகிறது. ஒரு வார விடுமுறையில் நிச்சயம் இங்கே சென்று வாருங்கள்.

Photo:Ravikiran Rao

பாம்பு படகு:

பாம்பு படகு:

கேரளாவில் ஆண்டு தோறும் நடக்கும் பாம்பு படகு போட்டிகள் உலக அளவில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் ஒரு விஷயமாக மாறி விட்டது. வருடா வருடம் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை நடக்கும் இந்த போட்டி ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னமடா ஆற்றில் நேரு கோப்பை பந்தையமாக நடக்கிறது.

Photo:rahul rekapalli

பாம்பு படகு:

பாம்பு படகு:

வீரர்கள் படகின் இரண்டு புறமும் அமர்ந்தபடி ஒரே மாதிரியாக துடுப்பு போடுவதை பார்க்க மிக உணர்ச்சி பூர்வமாக இருக்கும். நம்மூர் ஜலிக்கட்டுக்கு இணையாக கேரளாவில் நடக்கும் இந்த விளையாட்டை ஒரு முறையேனும் சென்று காணுங்கள்.

Photo:Arun Katiyar

அதிசயம் என்றால் இவைதான்:

அதிசயம் என்றால் இவைதான்:


இன்றுபோல தொழில் நுட்பம் இல்லை, நூற்றுக்கு தொண்ணுறு சதவிகிதம் மனித உழைப்பினால் தான் அனைத்தும் சாத்தியம் போன்ற சூழலிலும் இன்றைய நவீன விஞ்ஞானத்தால் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் நம்முடைய முன்னோர்கள் கட்டிடங்களை கட்டியுள்ளனர். அப்படிப்பட்டதொரு அதிசய இடம்தான் லேபாக்க்ஷி கோயில்.

Photo:Premnath Thirumalaisamy

அதிசயம் என்றால் இவைதான்:

அதிசயம் என்றால் இவைதான்:

ஆந்திர மாநிலம் அனத்பூர் மாவட்டத்தில் இருக்கும் லேபாக்க்ஷியில் இருக்கும் வீரபத்திரர் கோயிலில் தான் மிதக்கும் தூண்கள், கலைநயமிக்க கோயில் கற்சுவர்கள் என இங்கு நாம் பார்த்து அதிசயிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. ராமாயண காவியத்தில் ராவணன் சீதையை கவர்ந்து செல்கையில் அவரை காப்பாற்ற ஜடாயு என்னும் கழுகு ராவணனுடன் போரிட்டு இந்த இடத்தில் தான் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

Photo:Premnath Thirumalaisamy

விசா கொடுக்கும் கடவுள்:

விசா கொடுக்கும் கடவுள்:

ஆம், தெலுங்கானா மாநிலத்தில் சில்கூர் என்னும் இடத்தில் இருக்கும் பாலாஜி கோயில் தான் இத்தகைய புனைபெயருக்கு சொந்தமானது. இங்கு வந்து வேண்டிகொண்டால் எப்படியும் வெளிநாடு போக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. சிறிய கோயிலான இங்கு எந்த மதத்தை சேர்ந்தவரும் வரலாம்.

Photo:Adityamadhav83

நீந்தும் யானை:

நீந்தும் யானை:


இயற்கையாக நீந்தவே தெரியாத விலங்கினம் யானை. ஆனால் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தமான் தீவுகளில் யானைகளை நீந்த பழக்கி உள்ளனர். அப்படி நீந்த பழகிய யானைகளுள் கடைசியாக இருப்பது ராஜன் என்னும் யானை தான்.

இது தான் இன்று உலகில் இருக்கும் கடைசி நீந்தும் யானையாகும். அந்தமானில் உள்ள ஹவேலோக் தீவில் இதை நாம் பார்க்க முடியும். அப்படியே கடலில் இதன் மேல் அமர்ந்து சவாரியும் போகலாம். இந்த வாய்ப்பு இன்னும் கொஞ்ச காலத்தில் யாருக்குமே கிடைக்காமல் போகலாம். முந்துங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X