Search
  • Follow NativePlanet
Share
» »பேங்காங்க் போகத் தேவையில்ல... சீக்ரெட்டான இந்த 10 இடங்கள் போதுமே...!

பேங்காங்க் போகத் தேவையில்ல... சீக்ரெட்டான இந்த 10 இடங்கள் போதுமே...!

பேங்காங்க் போக ஆசப்படுறவங்களுக்கு ரகசியமான இந்த பத்து இடம் பத்தி தெரிஞ்சா போதும் நீங்க அங்க போகத் தேவையே இல்லை. இந்தியாவைப் பற்றி நம் எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கும். இந்தியா ஆன்மீக தேசம்.

By Udhaya

பேங்காங்க் போக ஆசப்படுறவங்களுக்கு ரகசியமான இந்த பத்து இடம் பத்தி தெரிஞ்சா போதும் நீங்க அங்க போகத் தேவையே இல்லை.

இந்தியாவைப் பற்றி நம் எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கும். இந்தியா ஆன்மீக தேசம். இது மிகவும் கலாச்சார ஆர்வம் மிகுந்த நாடு. இங்கு மேலை நாட்டு கலாச்சாரம் செல்லாது. யாருக்கும் பிடிக்காது என்று. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது நிச்சயம் மறுபரிசீலனை செய்யவேண்டியது. ஏனெனில் அவரவர் மனதில் இருக்கும்படியான பிற்போக்கு சிந்தனைகள் சில, இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. அவற்றில் சில தனிமனித சுதந்திரத்தை பறிப்பது, உலக நாடுகளுடன் ஒத்து செல்லாத சில பழங்கால முறைகளை அப்படியே பின்பற்றுவது. காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மெருகேற்றிக்கொள்ளாதது போன்றவை. நீங்கள் ஒரு முறை உலகைச் சுற்றி வாருங்கள் புரியும் என்பார்கள். நம் நாட்டு இளைஞர்கள் பலருக்கு பாங்காங்க் எங்கிருக்கிறது என்பதே தெரியாது. ஆனால் பாங்காங் பற்றி தெரிந்துகொண்டால் அங்கு செல்லவேண்டும் என துடியாய் துடிப்பார்கள். போக வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் கவலைவேண்டாம். அதற்கு நிகரான பத்து ரகசியமான இடங்கள் நம்ம நாட்டுலயே இருக்கு.. படிச்சி தெரிஞ்சிக்கோங்க.. முடிஞ்சா பிளான் ஏற்பாடு பண்ணுங்க..

 கோவா

கோவா

எல்லாருக்கு தெரிஞ்சதுதான். கோவா.

கோவாவில் என்ன இருக்குனு சிலர் கேட்கலாம். அவர்களுக்கெல்லாம் அந்த இடங்கள் பற்றி தெரிந்திருக்காது போல. மாலை 6 மணிக்கெல்லாம் போர்த்திட்டு தூங்கிட்டா எப்படி பாஸ்.. நல்லா சுத்தணும். அப்போதான் சுற்றுலாவை அனுபவிக்க முடியும்.

 கோவாவில் இரவு விருந்து

கோவாவில் இரவு விருந்து

உங்கள் நண்பர்களுடன் இன்றே திட்டமிடுங்கள். நவம்பர் மாதம் பார்ட்டிக்கள் படு ஜோராக இருக்கும். கோவாவின் கடற்கரைகள் உங்கள் வருகைக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

அட.. அட்டகாசமான இரவு விருந்தை மிஸ் பண்ணப் போறீங்களா... சீக்கிரம் டிக்கெட் புக் பண்ணுங்க. நல்ல தெளிவான திட்டத்தோட நியூ இயர் பார்ட்டிய கோவாவுல வச்சீங்கன்னா உங்களுக்கு அந்த ரகசியத்த சொல்றோம்.

இரவு நட்சத்திரங்களில் மின்னும் ஒரு நட்சத்திரமாய் நீங்களும் உங்களுடன் உங்கள் நண்பர்களும், தோழிகளும் இளமை ததும்ப கோவா சுற்றுலாவை அனுபவிக்க அங்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் பீச் பார்ட்டிக்கு போங்க.

ஜாஸ் கன்ஸெர்ட், முழு நிலவு சுற்றுலா என அட்டகாசமான இரவு விருந்துகள் நடக்கும் அந்த கடற்கரைகளில்.. நிச்சயம் செல்வீர்கள் தானே...

அப்போது குறித்துக் கொள்ளுங்கள்..

பாகா பீச், மோரிஜிம் பீச், அரம்போல் பீச்

 மும்பை

மும்பை

இந்தியாவின் மிகச் சிறந்த இரவு நகரம் மும்பையைப் பற்றி நாங்கள் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை. ஆனால் பாங்காங்க் போல சுதந்திரமாக பறந்து திரியும் அழகிய கடற்கரைகள் பற்றி தெரியுமா.. நீங்கள் பாங்காங் செல்லவேண்டாம்.. இந்த கடற்கரைக்கு செல்லுங்கள் போதும்....

மும்பையில் இரவுப் பார்ட்டி

மும்பையில் இரவுப் பார்ட்டி

கனவுகளின் நகரம், இரவுப் பறவைகளின் நகரம் என்று அழைக்கப்படும் இந்த நகரம் மிகவும் அழகானது, அமைதியானது தொழில் வளம் நிறைந்தது.. கலாச்சாரம்...??? .. மேலை நாட்டுக் கலாச்சாரம் மிகுந்து காணப்படும் இந்திய நகரங்களில் அடித்து பிடித்துக்கொண்டு முன் வரும் நகரம் இது.

சத்தமென இசை கேட்க விரும்பும் நீங்கள் கடற்கரையில், மிக மகிழ்ச்சியாக பாலிவுட் நட்சத்திரங்களைப் போன்று கொண்டாடித் தீர்க்க மும்பை கடற்கரைகள் காத்திருக்கின்றன. எப்ப போறீங்க.. ஒருவேள நீங்க போக திட்டமிட்டீங்கன்னா உங்களுக்கு உதவ நாங்க தயாரா இருக்கோம்.. போலாம்தானே..

இதோ குறிச்சி வச்சிக்கோங்க...

ஜூகு பீச்.. இங்க நிறைய பாலிவுட் நட்சத்திரங்களோட வீடுகளும் இருக்கு..

 டெல்லி

டெல்லி

இவ்ளோ சொல்லிட்டோம் டெல்லி பத்தி சொல்லலனா டெல்லி வாசிங்களே கோச்சிப்பாங்க. டெல்லி பாக்குறதுக்கு நிறைய இந்திய கலாச்சார நினைவுகள சுமந்து இருக்குறமாதிரியான தோற்றம் நம்மோட தொலைக்காட்சிங்க மூலமாக நம் எல்லாருடைய மனசுலையும் வர வச்சிட்டாங்க.. டெல்லினாலே அதிகாரிங்களும், கட்டிடங்களும், சுதந்திரப்போராட்டமும்னுதான் தோணும். ஆனா அதைவிட ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி தரக்கூடிய அட்டகாசமான இடங்களும் இங்க இருக்குங்க..

 டெல்லியில் இரவுப் பயணம்

டெல்லியில் இரவுப் பயணம்


ஒரு பைக்ல உங்க காதலி இல்ல தோழிய கூட்டிட்டு இரவு முழுக்க ரவுண்ட் அடிக்கணும்னாலும் சரி, இல்ல பீச்ல கொண்டாடித் தீர்க்கணும்னாலும் சரி.. அடடே.. டெல்லியில பீச் இல்லியே... டெல்லியில் பீச் இல்லைங்குற விசயமே பலருக்கு தெரிந்திருக்காதுனு நினைக்குறேன்.

பாங்காங் னாலே பீச்தானே என்று நினைப்பவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கணும். பாங்காங்க் விட பத்து மடங்கு என்ஜாய்மென்ட் நம்ம டெல்லியில இருக்கு.. குளிர பொருட்படுத்தாம.. அட்டகாசமா சுற்றுலாவ தூள் கெளப்புங்க.. நீங்க இந்த இரவு பயணத்துக்கு தயாராகிட்டீங்கன்னா இதோ இந்த இடங்கள்லதான்

ஹாஸ் காஸ் மெட்ரோ ஸ்டேசன் அருகில், கோன்னாட் மாளிகை அருகில், வசந்த் குஞ்ச் போன்ற இடங்கள்ல கொண்டாடித் தீர்க்கலாம்... என்ன ரெடியா?

 பெங்களூர்

பெங்களூர்

அடடே.. இங்க இருக்குற பெங்களூர்ல இவ்ளோ விசயம் இருக்கானு உங்களுக்கே வாயடைச்சி போயிடும். இதுல இன்னொரு விசயம் என்னன்னா.. பெங்களூர்ல வட இந்திய இளைஞர்களுக்கு கொஞ்சமும் சளைக்காம தென்னிந்திய இளைஞர்களும் இரவு நேர கொண்டாட்டத்துல தங்கள ஐக்கியப்படுத்திக்குறாங்க. ஆமா.. நீங்களும் பெங்களூர்லதான் இருக்கீங்களா.. அப்போ எங்கெல்லாம் போயிருக்கீங்க?

 பெங்களூரில் அட்டகாசம்...

பெங்களூரில் அட்டகாசம்...

பெங்களூரில் அட்டகாசம் பண்ணத் தயாரா... இங்கு பல இளைஞர்கள் லாங்க் டிரைவ் போவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் சில்க் போர்டிலிருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை இருக்கும் அந்த பாலத்தில் அட்டகாசமான ஒரு பயணம்.. இது நிகழ்வது இரவு 12 மணிக்கு மேல் என்பதுதான் ஹைலைட்.

எம்ஜி ரோடு... என்ற இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் பெங்களூருக்கு வந்திருந்தீங்கன்னா அது வீண்.. அதுவும் சிலர் நாலஞ்சி வருசமா பெங்களூர்ல இருந்துகிட்டு எம்ஜி ரோடுக்கு போனதே இல்லைனு சொல்றாங்க.. இப்படிலாம் இருக்கலாமா.. உடனே திட்டமிடுங்க.. இன்னும் ஒரு மாசம்... ஆண்டிறுதி கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சிரும்..

எம்ஜிரோடு மாதிரி இங்க கோரமங்களா எனும் இடமும் இருக்கு... அங்கேயும் சில கொண்டாட்டங்கள நிகழ்த்தலாம்.

PC: YT

 புனே

புனே

மும்பைக்கு ஓரளவுக்கு அருகில் இருக்குற புனே கொண்டாட்டத்துலயும் மும்பைக்கு பக்கத்துலதான் இருக்கு.. அடடே.. ஆச்சர்யப்பட ஒன்னும் இல்ல... புனேவுல இருக்குற உங்க பிரண்ட்ஸுக்கு கால் பண்ணி.. எப்ப வரலாம்னு முடிவு பண்ணுங்க.. அட்டகாசமா ஒரு சூப்பர் இரவு பார்ட்டிய கொண்டாடலாம்.

ராக் மியூசிக், பாண்ட் சத்தம், அட்டகாச ஆட்டம்னு கலக்கலாம்..

PC: YT

ஹைதராபாத்

ஹைதராபாத்


ஹைதராபாத்தும் சூப்பரான நகரம்தான். கொஞ்சம் வெயில் கூடவே இருந்தாலும், இரவு பறவைகள் சுதந்திரத்த கொண்டாட தவறுவதில்லை. இதுக்கு இன்னொரு விசயமும் இருக்கு. ஹைதராபாத்தில் வெய்யில் எவ்ளோ ஜாஸ்தி.. பகல்ல வெளிய தலை காட்டமுடியாது.. ஒன்லி நைட்தான்.

அட்டகாச தெருக்கள், இசை சந்துகள்னு அய்யயோ கலர்புல் கண்காட்சியே நடக்கும்.

PC: YT

 சண்டிகர்

சண்டிகர்

பஞ்சாப் பக்கத்துல இப்படி ஒரு நகரமானு கேட்கற அளவுக்கு கொண்டாட்டம் களைகட்டும்,. இங்க பெரும்பாலும் நம்ம ஊர் மாதிரிதான் கலாச்சாரம் நல்லா இருக்கும். ஆனா இதுலாம் இரவு பறவைகள் கிட்ட நடக்குமா.. வீட்லதான் கலாச்சாரம் பண்பாடு எல்லாம். இரவு உலானு வந்துட்டா இளைஞர்களும் இளம்பெண்களும் அழகழகான உடைகளில் தங்கள் சுதந்திரத்தை கொண்டாடித் தீர்ப்பார்கள்.

 ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்


அழகான நகரம் என்று பெயர் பெற்ற இந்த நகரமும் கொண்டாட்டத்துக்கு சளைத்ததல்ல.. அது ஏன் கலாச்சார நகரம், எல்லா கலாச்சாரத்துக்கும் வழி கொடுக்கும் என்பது சகஜம்தானே.. வடநாடு, தென்நாடு, மேலை கீழை நாடுகள்னு ஏன் பிரிக்கணும். மனுசன் என்ஜாய் பண்ண தயார்னா.. கொண்டாடித் தீர்ப்பதில் என்ன தவறு..

Read more about: travel delhi mumbai bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X