Search
  • Follow NativePlanet
Share
» »மும்பையில் பிக்னிக் செல்ல சிறந்த ஐந்து இடங்கள்

மும்பையில் பிக்னிக் செல்ல சிறந்த ஐந்து இடங்கள்

உலகத்திலேயே வாகன நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக தேர்ந்தேடுக்கபட்டிருக்கிறது மும்பை மாநகரம். எப்போதும் நிரம்பி வழியும் சாலைகள், தலைவலியை ஏற்ப்படுத்தும் ஹாரன் சத்தம், அலைச்சல் நிறைந்த தினசரி வாழ்க்கை இவை எல்லாம் மும்பைவாசிகளுக்கு பழகிப்போன ஒரு விஷயம்.

மும்பையில் பிக்னிக் செல்ல சிறந்த ஐந்து இடங்கள்

இதை எல்லாம் தவிர்த்து மும்பை நகரத்தில் இருந்து சற்று தள்ளி அருமையான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் இந்த இடங்களுக்கு வாருங்கள் ஒரு சின்ன ட்ரிப் போய் வரலாம்.

சஞ்சய் காந்தி தேசிய பூங்கா:

Photo: sujit jagdale

இரண்டு கோடி மக்கள் வாழும் ஒரு நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் ஒரு பசுமை சொர்க்கம் தான் இந்த சஞ்சய் காந்தி தேசிய பூங்கா. மிகவும் நன்றாக பாமரிக்கப்படும் இந்த பூங்காவினுள் நாம் சிங்கம், புலிகளை பார்க்க சபாரி செல்லலாம், அடர்த்தியான காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்லலாம், இதனுள் அமைந்திருக்கும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கைகளால் குடையப்பட்ட புத்த குகைகளை காணலாம், மேலும் குழந்தைகளுக்கு என்றே பொம்மை ரயில் சவாரியும் இங்கு இருக்கிறது. குளுகுளுவென இதனுள் இருக்கும் பசுமையான சூழல் மற்றும் இயற்கையான அமைதி நாம் இரைச்சல் மிகுந்த ஒரு நகரத்தின் நடுவே இருக்கிறோம் என்பதையே மறக்க வைக்கும். நீங்கள் ஒருவேளை மும்பை செல்ககையில் இங்கே வர தவறி விடாதீர்கள்.

தொங்கும் தோட்டம் & கமலா நேரு பார்க்:

Photo: 25 Cents FC

வாரம் முழுக்க பயணம் செய்து சலித்து போய் வார இறுதியிலும் பயணம் செய்ய வேண்டுமா என நினைப்பவர்களுக்காகவே மும்பை நகரத்திற்கு உள்ளேயே அமைந்திருக்கின்றன தொங்கும் தோட்டம் மற்றும் கமலா நேரு பார்க். வெப்பத்தை தணிக்க இதமான நிழல் தரும் மரங்களால் நிறைந்திருக்கிறது 'Hanging Garden' எனப்படும் தொங்கும் தோட்டம் . இங்கு இருக்கும் பிரமாண்டமான ஷுவை குழந்தைகள் நிச்சயம் ஆர்வமுடம் கண்டு ரசிப்பார்கள். மேலும் இங்கிருந்து மும்பையின் மரைன் டிரைவின் அற்புதமான காட்சியை காண முடியும். தொங்கும் தோட்டத்திற்கு எதிர்புறத்தில் இருக்கிறது பசுமையான புல்வெளிகளையும், நடைபாதைகளையும் கொண்ட கமலா நேரு பூங்கா. மாலை நேரங்களில் குடும்பத்துடன் அமைதியாக நேரத்தை செலவிட நல்லதொரு இடம் .

எலிபெண்டா தீவுகள்:

Photo: Christian Haugen

மும்பையில் இருந்து ஒருமணிநேர பயணத்தில் வருகிறது கலை அற்புதங்கள் பொதிந்த எலிபெண்டா தீவு. கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து இந்த தீவுகளுக்கு படகு சேவை உள்ளது. இந்த தீவுகளில் அமைந்திருக்கும் அஜந்தா மற்றும் எல்லோரா குகை சிற்பங்கள் உலகப்புகழ் பெற்றவை. நினைத்து பார்க்க முடியாத நுட்பத்துடன், அற்புதமாக வடிக்கப்பட்ட குகை சிற்பங்களை நாம் காணலாம். வரலாற்று இடங்களை புகைப்படம் எடுக்க நினைப்பவர்களும் இங்கே நிச்சயம் வரலாம். இந்த தீவை சுற்றி குழந்தைகளுக்கான பொம்மை ரயில் வசதியும் உள்ளது.

அலிபாக்:

Photo: Abhiram Katta

மும்பை நகரத்தில் இருந்து ஒரு மணிநேர கப்பல் பயணத்தில் வரும் ஒரு குட்டி நகரம் தான் இந்த அலிபாக். இங்குள்ள எல்லா கடற்கரைகளுமே தென்னை மரங்களுடனும், பாக்கு மரங்களுடனும் காணப்படுவதால் ஒரு பாலைவனப்பிரதேச கடற்கரை போன்று வித்தியாசமான இயற்கை எழிலுடன் காட்சியளிக்கின்றன. இங்கிருக்கும் கருமணல் கடற்க்கரை நமக்கு பிரமிப்பையும், கொஞ்சம் திகலையும் ஏற்படுத்தும். இவை தவிர இங்கிருக்கும் மற்ற இரண்டு கடற்கரைகளான கிஹிம் பீச் மற்றும் நகவான் கடற்கரைகள் வெள்ளியைப்போல் ஒளிரும் வெள்ளை மணலால் பயணிகளைக் கவர்கின்றன. மேலும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான கோட்டைகளையும் நாம் இங்கே காண முடியும். வார இறுதிக்கு மும்பையை மறந்து ஒரு சிற்றுலா சென்ன விரும்புபவர்கள் தாராளமாக மும்பையின் கோவா வான அலிபாகிர்க்கு சென்று வரலாம்.

ஆரே காலனி:

Photo: Elroy Serrao

மும்பைவாசிகளுக்கே இன்னும் அதிகம் தெரியாத அற்புதமான இயற்க்கை எழில் கொஞ்சும் அழகிய இடம் தான் இந்த ஆரே காலனி. காரில் அருமையான பாடல் ஒன்றை ஒலிக்க விட்டபடி ஆரே காலனியில் சாலைப்பயணம் செல்வது மறக்க முடியாத அனுபவமாக அமையும். மேலும் இங்கிருக்கும் சிறிய ஏரியில் படகு சவாரி செய்யலாம். குடும்பத்துடன் அமைதியாக நேரத்தை செலவிட நினைப்பவர்களுக்கு அருமையான இடம் இந்த ஆரே காலனி.

Read more about: mumbai weekend trips picnic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X