» »வேற லெவலுக்கு டிரெண்டிங் ஆன பக்கோடா! இந்தியாவிலேயே பெஸ்ட் பகோடா எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

வேற லெவலுக்கு டிரெண்டிங் ஆன பக்கோடா! இந்தியாவிலேயே பெஸ்ட் பகோடா எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Written By: Udhaya

பக்கோடா சாப்பிட ஒரு சுற்றுலாவா என்று கேளிக்கையாக இருக்கலாம். ஆனால், பக்கோடா கதையைத் தெரிந்துகொண்டால், நீங்கள் நிச்சயம் இதை உணர்வீர்கள். குறிப்பிட்ட இடங்களுக்கு நீங்கள் சுற்றுலா செல்வதென்றால், அங்கு கிடைக்கும் ஸ்பெஷல் டிஸ்களை சுவைக்காமல் வருவீர்களா. இல்லைதானே. பகோடாவின் கதையையும் அதை சுவைக்க எங்கெல்லாம் செல்லலாம் என்பதையும் இந்த பதிவில் காணலாம். ஒருவேளை இந்த இடங்களுக்குச் சென்றால் , பகோடாவை சுவைக்க மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...

தோன்றிய இடம்

தோன்றிய இடம்


பக்கோடா எனப்படும் உணவு தோன்றிய இடம் நிச்சயமாக இந்திய துணைக்கண்டமாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில்தான் இந்த உணவுப்பண்டங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. சுவைக்காக ஒரு சுற்றுலா செல்பவர்கள் குறைவு என்றாலும், சுற்றுலா செல்லும் இடத்தில் சுவைக்க என்ன கிடைக்கும் என்பதும் தெரிந்து வைத்திருக்கவேண்டிய அவசியம்தானே.

Damien Ramon Naidoo

பெயர்கள்

பெயர்கள்

பகோடா, பகோரா, பஃக்குரா, பாஜியா, பாஜி, பனாக்கோ என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்த பண்டம், தமிழகத்தில் பெரும்பாலும் பகோடா என்றே அழைக்கப்படுகிறது.

இது சமக்கிருதத்திலிருந்து கொண்டுவரப்பட்ட வார்த்தை என்றும் நம்பப்படுகிறது. பகோடா என்பது தெலுங்கில் பகோரா என்று அழைக்கப்படுகிறது. இது ஹைதராபாத் அருகாமை இடங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.

மகராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் இது பாஜி என்றும் அழைக்கப்படுகிறது.

ஆப்கன் உணவு

ஆப்கன் உணவு


இந்த வகை உணவு ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த முகலாயர்களால் இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டதாக வும் சில கருத்துக்கள் இருக்கின்றன. எனினும் இது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உணவு என்பது பெரும்பாலானோர் கருத்து. உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இந்த வகை உணவு விற்கப்பட்டுவருகிறது.

ampersandyslexia

டெல்லி பகோடா

டெல்லி பகோடா


பகோடா என்றவுடனே டெல்லி வாசிகள் குஷியாகிவிடுவார்கள். ஏன் தெரியுமா? மிகவும் ருசியான அழகாக அலங்கரிக்கப்பட்ட பகோடாக்கள் இந்தியத் தலைநகர் டெல்லியின் கடைத்தெருக்களில் கிடைக்கின்றன. நீங்களும் டெல்லி செல்கையில் பகோடாவை சுவைக்க மறந்துவிடாதீர்கள்.

Thamizhpparithi Maari

அஜ்மல் கான் சாலை

அஜ்மல் கான் சாலை

டெல்லியில் பெஸ்ட் ஆப் பெஸ்ட் பகோடா சாப்பிட வேண்டுமென்றால் நீங்கள் செல்லவேண்டியது இந்த இடத்துக்குத்தான். ஆமாம். அஜ்மல் கான் சாலை டெல்லியின் உணவுக்கான கடைத்தெருக்களில் ஒன்றாகும். இங்கு நேதாஜி சுபாஷ் சந்தை ஒன்று உள்ளது. இது டெல்லியின் வடக்கு பக்கத்தில் ரோகினியிலிருந்து காசியாபாத் செல்லும் சாலை ஆகும்.

இங்கு நிறைய சினிமா அரங்கங்களும், பூங்காக்களும், மெட்ரோக்களும் அருகருகே அமைந்துள்ளன,. டெல்லிக்கு சென்றால் கட்டாயம் இந்த பகோடாவை சுவைத்துவிட்டு வாருங்கள்.

பகவதி சந்தை

பகவதி சந்தை

டெல்லியில் சுவையான பகோடா கிடைக்கும் மற்றொரு இடம் பகவதி சந்தை ஆகும். இது டெல்லியின் சந்தினி சவுக் பகுதியில் அமைந்துள்ளது. புது டெல்லியிலிருந்து பழைய டெல்லிக்கு செல்லும் வழியில் இந்த சந்தை அமைந்துள்ளது. இது மிகவும் மும்முரமான பரபரப்பான சாலை ஆகும்.

கோவிந்தாபுரி

கோவிந்தாபுரி

புதுடெல்லியின் கல்காஜி பகுதியில் அமைந்துள்ளது கோவிந்தபுரி. இதுவும் பகோடாவுக்கான சிறந்த இடம் ஆகும். இங்கு பகோடா விற்பனை அதிக அளவில் நடைபெறும். ஷாப்பிங் செல்பவர்களுக்கும், மற்ற பொழுது போக்கு பகுதிகளுக்கு சென்று வருபவர்கள் நிறைய பேருக்கு பிடித்த வகையில் இந்த பகோடாக்கடைகள் பகோடாக்களை தயாரித்து தருகின்றன.

பெங்களூருவில் எங்கெல்லாம் பகோடா கிடைக்கும் தெரியுமா?

பெங்களூருவில் எங்கெல்லாம் பகோடா கிடைக்கும் தெரியுமா?


இந்திராநகர், லாவெல்லி சாலை, வைட்பீல்ட், துபரஹல்லி, ககடசபுரா போன்ற இடங்களில் இருக்கும் சில தனியார் ரெஸ்டாரண்ட்களில் மிகச் சுவையான பகோடாக்கள் கிடைக்கின்றன. பெங்களூருவுக்கு சுற்றுலா வந்தீர்கள் என்றால் இந்த இடங்களில் கிடைக்கும் பகோடா உட்பட பல உணவுகளை சுவைத்துப் பாருங்கள்.

Barthateslisa

உணவுச் சுற்றுலா

உணவுச் சுற்றுலா


சுற்றுலா என்றவுடனே நாம் இன்பச்சுற்றுலா அல்லது ஆன்மீகச் சுற்றுலா மட்டுமே அறிந்துவைத்திருக்கிறோம். சாப்பிடுவதற்கு ஏன் அவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்பதுதான் நமக்கு தோன்றும் எண்ணம். சாப்பிடுவதற்காக செல்வது என்று பாராமல், ஒவ்வொரு இடங்களிலும் என்ன கிடைக்கும் என்பதையும் தெரிந்துவைத்துக்கொண்டால், அங்கு செல்லும்போது நாம் இதை சாப்பிடத்தவறாமல் இருக்கலாம் அல்லவா? உதாரணத்துக்கு கடலைமிட்டாய் எல்லா ஊர்களிலும்தான் கிடைக்கிறது. ஆனால், கோவில்பட்டி செல்பவர்கள் அங்கிருந்து கடலைமிட்டாய் வாங்கி வருவதும்,திருநெல்வேலியில் அல்வா, தூத்துக்குடியில் மக்ரூன் என உணவுகளை வைத்தும் சுற்றுலாத்தளங்களை அடையாளம் கண்டுகொள்ளலாமே.

Bhaskaranaidu

உணவு

உணவு


இந்தியா பல இனங்களையும், மொழிகள் பழக்கவழக்கங்களையும் மட்டுமே கொண்டிருக்கவில்லை. உணவு என்னும் முக்கிய அம்சம் எல்லா சுற்றுலாவிலும் வந்துநிற்கும். விருந்தோம்பலுக்கு பெயர் போன இந்தியாவின் சமையல்களைப் பற்றி வெளிநாட்டவர்களே அசந்துபோகிறார்கள். அப்படி இந்தியாவில் சுற்றுலாத் தளங்களில் கிடைக்கும் பண்டங்களைப் பற்றி இந்த தொடரில் தொடர்ந்து பார்க்கவிருக்கிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் நேட்டிவ் பிளானட்.

Sameer Goyal

Read more about: travel, delhi, bangalore