Search
  • Follow NativePlanet
Share
» »இனி சிம்லா, டார்ஜிலிங் வேணாம்...ஜோடியாக செல்ல தென்னிந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கே

இனி சிம்லா, டார்ஜிலிங் வேணாம்...ஜோடியாக செல்ல தென்னிந்தியாவில் இத்தனை இடங்கள் இருக்கே

நம் நாட்டில் பசுமையான மலைத்தொடர்கள், அழகிய கடற்கரைகள், வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள் போன்ற பலவிதமான கலாச்சார பாரம்பரிய இடங்கள் உள்ளன. ஜோடியுடன் ரொமான்டிக்காக சென்று வர வேண்டும் என்றால் பலரும் சிம்லா, டார்ஜிலிங்கிற்கு தான் செல்வார்கள். ஆனால் ஜோடியாக உங்கள் துணையுடன் சென்று ஜாலியாக விடுமுறையை கழிக்க ஏற்ற இடங்கள் தென்னிந்தியாவிலேயே ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.

Best places in South India to travel with your partner

தரங்கம்பாடி

இது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோர மண்டல கடற்கரையில் அமைந்துள்ள நகரம். இந்த நகரம் டேனிஷ் பாரம்பரிய மற்றும் அழகான கடற்கரைக்கு பிரசித்தி பெற்றது. இங்கு17ஆம் நூற்றாண்டில் கட்டபட்ட டான்ஸ் போர்க் கோட்டையை பார்வையிடலாம். அதோடு மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தை உங்கள் துணையுடன் ரசித்து மகிழலாம்.

தென்மலா

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள தென்மலா இந்தியாவின் புகழ்பெற்ற சூழலியல் சுற்றுலா தலமாகும். பாலருவி நீள்வீழ்ச்சி ஏரியில் படகு சவாரி செல்லுதல், கயிறு பாலம், மலையேற்றம் மற்றும் பைக் சவாரி, இயற்கை நீர் ஊற்றுகள் கொண்ட அழகான இடங்களில் ஒன்று. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ள இந்த தென்மலா ஜோடிகளுக்கு நிச்சயம் அற்புதமான அனுபவத்தை அளிக்கும்.

லம்பசிங்கி

ஆந்திர பிரதேசத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் லம்பசிங்கி மேகங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த மலைப்பகுதியில் உள்ள காபி, பைன் மரங்கள், தைலம் மரங்கள் சிறிய ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெரி தோட்டங்கள் பார்ப்பதற்கு இனிமையான ஒன்று. தென்னிந்தியாவின் பனிப்பொழிவு ஏற்படும் இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு காணப்படும் மூடு பனி நிறைந்த காலை மற்றும் மாலை வேளைகள் காதலர்கள், புதுமண தம்பதிகள், ஜோடிகள் ரொமான்டிக்காக விடுமுறைக்கு சிறந்த இடமாகும்.

பூவார் தீவு

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலம் இந்த பூவார் தீவு. இங்குள்ள அழகிய கடற்கரைகள், மிதக்கும் குடிசைகள், தங்க மணல் கடற்கரை மற்றும் சதுப்பு நிலக்காடுகள் வழியாக செல்லும் படகு சவாரி போன்றவை காதலர்கள் தங்களின் காதலை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற அமைதியான ரம்மியமான இடம் ஆகும்.

வட்டக்கணல்

இந்தியாவின் சிறிய இஸ்ரேல் என்று அழைக்கப்படும் வட்டக்கணல், கொடைக்கானலுக்கு அருகில் உள்ள அமைதியான இடமாகும். அழகான மர குடில்கள், காடுகளுக்கு இடையே உள்ள நீர்வீழ்ச்சி மூடுபனி கொண்ட பசுமையான பள்ளத்தாக்குகளை உங்கள் துணையுடன் கண்டு மகிழ ஏற்ற இடமாக இருக்கும்.

மரவந்தே

மரவந்தே கடற்கரை, கர்நாடகாவில் உள்ள தங்க மணல் கடற்கரையாகும். ஒருபுறம் அரபிக் கடலும் மறுபுறம் சௌபர்ணிகா நதியும் இருப்பதால் இது தனித்துவமாக காணப்படுகிறது. அரபிக் கடலுக்கு இணையாக செல்லும் நெடுஞ்சாலையின் பயணம், சூரிய அஸ்தமனம் போன்றவற்றை உங்கள் துணியுடன் கண்டு ரசித்தவாறு இனிமையாக விடுமுறையை கழிக்கலாம்.

couple

ஹார்ஸ்லி ஹில்ஸ்

ஆந்திர பிரதேசத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியாகும். ஹார்ஸ்லி மலைகளில் வளைந்து செல்லும் பாதைகளில் அழகிய காட்சிகளை கண்டு களித்தவாறு இயற்கையின் மத்தியில் அமைதியான மாலை நேரத்தை உங்கள் துணையுடன் நடந்து சென்று விடுமுறையை கொண்டாடி மகிழுங்கள்.

கவி

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். இயற்கை விரும்பும் தம்பதிகள் மற்றும் காதலர்களுக்கு ஏற்ற ஒரு வித்தியாசமான இடமாகும். அமைதியான நீர் தேக்கத்தில் படகு சவாரி, மலை ஏற்றம், வனவிலங்கு சஃபாரி போன்றவற்றை காணலாம். இரவு நேரத்தில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் இளம் ஜோடிகளுக்கு உற்சாகம் நிறைந்த பயணமாக இருக்கும்.

அரக்கு பள்ளத்தாக்கு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை வாழ்விடம் ஆகும். இது அடர்ந்த காடுகள் உடைய அழகிய பகுதி, பசுமை நிறைந்த பள்ளத்தாக்காகும். காபி தோட்டங்கள், மூடுபனி நிறைந்த மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சி, போரா குகைகள் மற்றும் பழங்குடியின அருங்காட்சியகம் போன்றவற்றை கண்டு மகிழலாம்.

அகும்பே

கர்நாடகாவில் சிமோகா மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் காடுகள் நிறைந்த மலைப்பகுதி. அதிக மழைப்பொழிவு காரணமாக தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது. பசுமைக்கு பெயர் பெற்ற இந்த இடத்தில் சூரிய அஸ்தமனம் மனதை மயக்கும் ரம்மியமான காட்சியை தரும். பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகளை உங்கள் துணையுடன் சென்று கண்டு இன்புற்று மகிழுங்கள்.

More News

    Read more about: south india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+