Search
  • Follow NativePlanet
Share
» »கோடை விடுமுறையை குளுகுளுவென கழிப்பதற்கு ஏற்ற இந்தியாவின் சூப்பரான பகுதிகள்

கோடை விடுமுறையை குளுகுளுவென கழிப்பதற்கு ஏற்ற இந்தியாவின் சூப்பரான பகுதிகள்

கோடை காலத்தின் அறிமுகமாக இப்போதே வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அனைவரும் குளுகுளு இடங்களை தேடி தான் ஓடுவார்கள். அப்படி இந்த ஆண்டு கோடை விடுமுறையை கழிக்க இந்தியாவில் ஏற்ற இடங்களை வாங்க தெரிந்து கொள்ளலாம். இதனால் உங்களின் கோடை விடுமுறை டிரிப்பை முன்கூட்டியே திட்டமிட முடியும்.

Best places to visit in India this for summer vacation

காஷ்மீரின் குல்மார்க்

கோடை காலத்திற்கு போக வேண்டிய அருமையான இடம் இந்த குல்மார்க். ஜம்மு காஷ்மீரின் அழகான சுற்றுலாத் தலம் இது. சொர்க்கம் போலவே காணப்படும் அழகு பூமி. பனி போர்த்திய மலைகள், பசும் புல்வெளிகள், அழகு அழகான பூக்கள், இந்த பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. மனம் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் குல்மார்க் கண்டிப்பாக கோடை கால டூர் லிஸ்ட்டில் இடம் பெற வேண்டிய ஒரு இடம் என்பதில் சந்தேகம் இல்லை.

மேகாலயாவின் ஷில்லாங்

கிழக்கு இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுவது ஷில்லாங். அருமைாயன சீதோஷ்ணம் நிறைந்த பகுதி இது. பார்க்கவே பளிச்சென பசும் புல்வெளிகள், பசுமையான மலைத் தொடர்கள் என ரம்மியமாக காட்சி தருவது தான் ஷில்லாங். இங்கு ஏராளமான மலர்களைக் கொத்துக் கொத்தாக காணலாம். இந்தப் பிராந்தியத்தின் சிறப்பே இந்த மலர்ச் செடிகள்தான். மேலும் இங்கு ஏராளமான உள்ளூர் விழாக்களும், கலாச்சார நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கும்.

Best places to visit in India this for summer vacation

டார்ஜீலிங்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜீலிங் ஒரு அருமையான பிரதேசம். குறிப்பாக வசந்த கால சமயத்தில் இங்கு போக வேண்டும். சீதோஷ்ணம் அத்தனை அற்புதமாக இருக்கும். பசுமையான செடி கொடிகள், பூத்துக் குலுங்கும் மலர்கள், தேயிலைத் தோட்டங்கள் என்று அழகான பூமி இது. இங்குள்ள ஜில்லென்ற கிளைமேட்டை அனுபவிப்பதற்காகவே புதுமண தம்பதிகள், சுற்றுலா வரும் நண்பர்கள் கூட்டம் இங்கு வந்து குவிகிறது.

மலர்ப் பள்ளத்தாக்கு

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது மலர்ப் பள்ளத்தாக்கு. யுனெஸ்கோவால் பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதி இது. ஏராளமான காட்டு மலர்ச் செடிகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. அந்த ஏரியாவே மலர்களால் மூடப்பட்டது போல பார்க்க அத்தனை ரம்மியமாக இருக்கும். சீதோஷ்ணமும் செமையாக இருக்கும். பசுமையான செடிகள், மரங்கள் என இந்தப் பகுதியே பசுமைப் போர்வை போர்த்தியது போல காணப்படுவதுதான் இதன் சிறப்பம்சம்.

Best places to visit in India this for summer vacation

குன்னூர்

தமிழ்நாட்டின் குன்னூர் அருமையான சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது. இங்குள்ள சீதோஷ்ணம் சூப்பராக இருக்கும். எப்போதும் பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள், ஜிலு ஜிலு கிளைமேட் மனதைக் கொள்ளை கொள்ளும். நீலகிரி வுட் பீஜியன் பறவை உள்பட ஏகப்பட்ட பறவைகளும் இங்கு விசேஷமானவை. இந்தியாவுக்கே உரித்தான கருப்பு கழுகும் இங்கு அதிகம். கிரேட் ஹார்ன்பில் பறவையும் இங்கு பிரபலமானவை.

மூணாறு

கேரளாவின் மிக முக்கியமான சுற்றுலா தலம் மூணாறு. டூர் என்று லிஸ்ட் போட்டாலே தானாகவே வந்து இடம் பெற்று விடக் கூடிய ஊர்தான் மூணாறு. இயற்கை விரும்பிகளுக்கும், சாகசத்தை விரும்புவோருக்கும் மூணாறு அருமையான இடம். அருமையான சீதோஷ்ணம், மலைப் பகுதிகள், அணை, தேயிலைத் தோட்டங்கள் என்று மூணாறுக்கு ஒரு முறை போய் வந்தாலே புத்துணர்ச்சி ஆகி விடுவோம்.

லே லடாக்

லே மற்றும் லடாக் அற்புதமான ஒரு சுற்றுலாப் பகுதி. பனி போர்த்திய உயர்ந்த மலைச் சிகரங்கள் சூழ்ந்த லே மற்றும் லடாக் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதி. ஏகாந்த விரும்பிகளுக்கு இது சொர்க்கபுரி. சாகசம் விரும்புவோருக்கும் இது சூப்பரான இடம். இந்திய எல்லையில் இருக்கும் இந்த பகுதியில் பலரும் பைக் டிரைவ் செல்ல ஆசைப்படுவது உண்டு.

லட்சத்தீவு

கடற்கரை விரும்பிகளுக்கும், இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதிகளை விரும்புவோருக்கும் லட்சத்தீவு ஒரு சொர்க்கபுரியாகும். நிறைய நீர் விளையாட்டுகளை இங்கு விளையாட முடியும். கடலோர வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க லட்சத்தீவு சிறந்த இடம். இங்கு சீதோஷ்ணமும் பிளசன்ட்டாக இருக்கும் என்பது முக்கியமானது.

பிர், ஹிமாச்சல் பிரதேசம்

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் பிர் பகுதி சின்னஞ்சிறிய கிராமம் தான். ஆனால் அத்தனை அழகானது. கங்க்ரா பள்ளத்தாக்கில் இந்த கிராமம் உள்ளது. இங்கு பாரா கிளைடிங் பிரபலமாக உள்ளது. அதே போல புத்த மடாலயங்கள், கோவில்கள் பிரபலமானவை. அருமையான இயற்கை எழில் கொஞ்சும் பகுதி இது.

More News

    Read more about: summer vacation hill stations
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+