Search
  • Follow NativePlanet
Share
» »பிப்ரவரி மாதத்தில் தென்னிந்திய சுற்றுலா செல்ல ஏற்ற டாப் 10 இடங்கள்

பிப்ரவரி மாதத்தில் தென்னிந்திய சுற்றுலா செல்ல ஏற்ற டாப் 10 இடங்கள்

தற்போது ஒரு நாள் லீவ் கிடைத்தால் கூட எங்காவது சுற்றுலா செல்லலாம் என்று தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள். அதுவும் குடும்பத்துடன், நண்பர்களுடன் எங்கு செல்லலாம் என்று தான் அனைவரும் யோசனை செய்கிறார்கள். தற்போது மழை, குளிர் காலங்கள் நிறைவடைந்து லேசான குளிர், லேசான வெயில் என இதமான தட்பவெப்ப நிலை இருக்கும் பிப்ரவரி மாதம் துவங்க போகிறது. அதனால் அதிகமானவர்கள் சுற்றுலா செல்வதற்கு தயாராவார்கள். இந்த பிப்ரவரியில் தென்னிந்தியாவில் எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Best places to visit in South India in the month of February

தென்னிந்தியாவின் டாப் 10 சுற்றுலாத் தலங்கள் :

சிக்மகளூரு :

ஏராளமான நீர்வீழ்ச்சிகள், சுற்றிலும் பசுமை நிறைந்த ஏரிகள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாகும் திகழும் சிக்மகளூரு சமீபகாலமாக கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க ஒரு சுற்றுலா தலமாக மாறி வருகிறது.

ஊட்டி :

காலங்கள் மாறினாலும் ஊட்டியில் அழகு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் செல்கிறது. மலையகளின் ராணியாக இருக்கும் ஊட்டிக்கு எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் என்றாலும் பிப்ரவரி மாத கிளைமேட்டை அனுபவிப்பது தனி சுகம் தான். ஊட்டியில் சுற்றி பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளது.

கொடைக்கானல் :

கோடை விடுமுறை தொடங்கி விட்டாலே சுற்றுலா பயணிகள் தேடிச் செல்லும் இடம் கொடைக்கானல் தான். திண்டுக்கல், தேனி, மதுரை என பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வதற்கு எளிதாக இருக்கும் இடமாக உள்ள கொடைக்கானல், இயற்கை அழகை ரசிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற ஊர்.

Best places to visit in South India in the month of February

மூணாறு :

கேரள எல்லையில் உள்ள மூணாறு பகுதி இயற்கை விரும்பிகளின் முதல் தேர்வாக உள்ளது. கேரளா பக்கம் செல்ல நினைப்பவர்கள் எப்போதும் தவற விடக்கூடாத ஒரு சுற்றுலா தலமாக இருப்பது மூணாறு. பசுமையான சொர்க்க பூமியாக காட்சி அளிக்கும் மூணாறுக்கு ஒரு முறை தவறாமல் சென்று விட்டு வாருங்கள்.

கூர்க் :

கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கூர்க், கொடகு என்றும் அழைக்கப்படுகிறது. அழகிய தேயிலை தோட்டங்கள், பசுமை நிறைந்த மலைகள், நீர்வீழ்ச்சிகள் என குடும்பத்தோடு சந்தோஷமாக பொழுதை கழிப்பதற்கு ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாகும். காவிரி உற்பத்தியாகும் இடம் என்பதை இதை காண ஏராளமான சுற்றலா பயணிகள் வருவதுண்டு.

ஏற்காடு :

ஏழைகளின் ஊட்டி என பெயருக்கு ஏற்றாற் போல் குறைந்த செலவில் சந்தோஷமாக குடும்பத்துடன் ஒரு நல்ல சுற்றுலாவை என்ஜாய் செய்வதற்கு ஏற்ற இடம் ஏற்காடு தான். படகு சவாரி, பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டு தளங்கள் என ஏற்காட்டில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன.

மேக மலை :

கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள மேக மலை சமீப காலங்களில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. தனிமை, இயற்கை ஆகியவற்றை விரும்புபவர்கள் அவசியம் செல்ல வேண்டிய ஒரு ஊர்.

ஏலகிரி :

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சுற்றுலா தலம். மலைகளால் சூழப்பட்ட அழகான இடம். வளர்ச்சி பெற்ற சுற்றுலா தலமாக இல்லா விட்டாலும் டிரக்கிங் செல்வதற்கு, சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

ஆலப்புழா :

கேரளாவின் மிக முக்கியமான சுற்றுலா தலம் ஆலப்புழா. காயல் படகில் ஹோம் ஸ்டே, இயற்கை அழகு, கதகளி நிகழ்ச்சிகள், ஆயுர்வேத ஸ்பா சிகிச்சை என பல வித்தியாசமான அனுபவங்களை பெறலாம்.

கன்னியாகுமரி :

நீர்வீழ்ச்சி, கடற்கரை, ஆறுகள், ஏரிகள், படகு சவாரி, கோவில்கள் என அனைத்து வகையான சுற்றுலா பயணிகளையும் திருப்திபடுத்தும் ஒரு இடமாக இருப்பது கன்னியாகுமரி மாவட்டம். பார்க்க பார்க்க திகைப்பூட்டும் அழகு சுற்றுலா பயணிகளை மீண்டும் மீண்டும் ஈர்ப்பதாக உள்ளது.

More News

    Read more about: south india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+