Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரியைச் சுற்றி ஒரே நாளில் எங்கவெல்லாம் சுற்றுலாம் ?

கன்னியாகுமரியைச் சுற்றி ஒரே நாளில் எங்கவெல்லாம் சுற்றுலாம் ?

எத்தனை எத்தனையோ சிறப்புகளையும், சுற்றுலா அம்சங்களையும் கொண்டுள்ள இந்த கன்னியாகுமரியில் ஒரே நாளில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கியச் சுற்றுலாத் தலங்கள் எது என தெரியுமா ?

இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கும் இந்த மாவட்டத்திலேயே காலையில் சூரிய உதயத்தையும், மாலையில் அது மறைவதையும் கண்டு ரசிக்கலாம். சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரியதாகத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான். இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகளையும், சுற்றுலா அம்சங்களையும் கொண்டுள்ள இந்த கன்னியாகுமரியில் ஒரே நாளில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கியச் சுற்றுலாத் தலங்கள் எது என தெரியுமா ?

உதயகிரி கோட்டை

உதயகிரி கோட்டை


உதயகிரி கோட்டையில் தான் டிலனாய் என்ற டச்சு வீரர் மார்த்தாண்ட வர்மா படையில் சேர்ந்து, உள்நாட்டு வீரர்களுக்கு படைபயிற்சியளித்து வந்தார். அவருடைய கல்லரை இக்கோட்டையில் காணப்படுகிறது. நாகர்கோவில்- தக்கலை வழித் தடத்தில் அமைந்துள்ள இந்தக் கோட்டை கன்னியாகுமரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Infocaster

திருநந்திக்கரை குகைக் கோவில்

திருநந்திக்கரை குகைக் கோவில்


திருநந்திக்கரை பழங்கால சமணத் தலமாகும். இங்குள்ள கபோதரத்தில் உள்ள மாதேவர் ஓவியம்தான் சேரர் கால ஓவியங்களில் கிடைத்த ஒரே சான்று. விக்கிரமாதித்ய வரகுணன் திருநந்திக் கரையில் தங்கி இருந்ததாகவும், ஒரு சமணத் துறவியியின் முன்னிலையில் தெங்கு நாட்டுக் கிழவன் மகள் முருகன் சேத்தியை திருமணம் செய்து கொண்டதாகவும், அரசியின் வாழ்க்கைக்குத் தேவையான நிலங்களை விட்டுக் கொடுத்ததாகவும் வரகுணன் காலத்திய செப்பேடு கூறுகிறது. இவ்வூர் பார்க்க வேண்டிய முக்கிய தலமாகும். பாறையில் அமைக்கப்பட்ட கோவிலுள் புகுவதற்கு வாயிலும், மழைநீர், வாயிலுக்கு வராமல் மேலே ஓடையும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

முட்டம்

முட்டம்


கன்னியாகுமரியிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முட்டம் கடலை ஒட்டிய பகுதியாகும். இங்கு அழகான கடற்கரையும், கலங்கரை விளக்கமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அம்சமாகும். ஊருக்குள் கடல் உள்நோக்கி அரைவட்ட வடிவத்தில் அமைந்திருப்பதாலும், கேரள மாநிலத்தின் சாயல் இங்கே ஒரு வித பரவசத்தை ஏற்படும்.

Infocaster

பெருஞ்சாணி அணை

பெருஞ்சாணி அணை


பெருஞ்சாணி அணை கன்னியாகுமரியிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த்தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கே 58 கிலோ மீட்டர் தொலைவிலும், குலசேகரம் என்னும் இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் கிழக்கிலும் பசுமை நிறைந்த இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது.

Thatsalright

கீரிப்பாறை

கீரிப்பாறை


பெருஞ்சாணி அணையிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீரிப்பாறை. கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது. கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்லrலை வசதி உள்ளது. இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பசுமை நிறைந்த இச்சூழல் சிறந்த ஓய்வுத் தலமாக இருக்கும்.

Infocaster

சுசீந்திரம்

சுசீந்திரம்


கன்னியாகுமரிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சுசீந்திரம். இங்குள்ள தாணுமாலயன் கோவில் தமிழகப் பெருங் கோவில்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 135 அடி உயரமுள்ள கோபுரமும் எழுநிலை மாடமும் இதன் அழகை மெருகூட்டுகிறது. இக்கோவிலில் சோழ, சேர, பாண்டிய, விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

Ssriram mt

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X