Search
  • Follow NativePlanet
Share
» »தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பாக ஊர் சுற்றி பார்க்க ஏற்ற இடங்கள் இவை தானாம்

தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பாக ஊர் சுற்றி பார்க்க ஏற்ற இடங்கள் இவை தானாம்

பெண்களில் பலர் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். தனியாக எங்காவது டிரிப் அல்லது ஜாலி டூர் சென்று விட்டு வரலாம் என நினைப்பார்கள். ஆனால் தாங்கள் செல்லும் இடங்களில் பாதுகாப்பு விஷயங்கள் எப்படி இருக்குமோ என்ற பயமும் மனதில் கூடவே தொற்றிக் கொள்ளும். அப்படி எந்த ஒரு பயம், தயக்கம் இல்லாமல் நிம்மதியாக டிரிப்பை என்ஜாய் செய்து விட்டு வர வேண்டும் என்றால் தனியாக செல்லும் பெண்கள் சுற்றுலா செல்ல தேர்வு செய்வதற்கு ஏற்ற இடங்களின் பட்டியல் இதோ...

Best Woman Friendly solo travel places in India

பெண்கள் தனியாக செல்ல ஏற்ற இடங்கள் :

1. ரிஷிகேஷ் :

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ், உலகின் யோகா தலைநகராக கருதப்படுகிறது. இங்கு தியானம் செய்யும் வகையிலான ஆசிரமங்கள் முதல் த்ரில்லிங்கான ஆறுகளின் பயணங்கள் வரை அனைத்தும் உள்ளது. ஆன்மிகம், சாகசங்கள் நிறைந்த பகுதியான ரிஷிகேஷ் தனியாக செல்லும் பெண் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான, அமைதியான சூழலை ஏற்படுத்தி தரும் மிகவும் அற்புதமான இடம்.

2. புதுச்சேரி :

பிரெஞ்சு மாடல்களில் அமைந்த தெருக்கள், அழகிய கடற்கரைகள், உணவகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ள நகரம் புதுச்சேரி. அமைதியான நடைபாதைகள், விசித்திரமான தேவாலயங்கள், ஆன்மிக மயமான ஆரோவில் ஆகியவை அவசியம் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள். இவை அனைத்துமே தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான, அமைதியான அனுபவத்தை வழங்கக் கூடியவை.

Best Woman Friendly solo travel places in India

3. ஹம்பி :

கர்நாடகாவின் ஹம்பி அற்புதமான கட்டிடங்கள், கோவில்கள் நிறைந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாகும். இந்திய வரலாற்றை சொல்லும் இது சிறிய நகரமாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடமாகவும் இருந்து வருகிறது. இது தனியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத இனிமையான அனுபவங்களையும், பாதுகாப்பையும் தரக் கூடிய இடமாகும்.

4. மைசூரு :

கர்நாடகாவின் ஆடம்பர நகரமான மைசூரு பிரம்மாண்ட அரண்மனைகள், பிஸியான மார்கெட்கள், கலாச்சார சின்னங்கள் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நகரமாகும். சுத்தம், கணிவான வரவேற்பிற்கு மட்டுமல்ல பாதுகாப்பிற்கும் பெயர் பெற்ற நகரம். தனியாக ஊர் சுற்றி பார்க்க விரும்பும் பெண்களுக்கு பாரம்பரியம் மற்றும் மாடர்ன் கலாச்சாரம் ஆகியவை கலந்த இதமான சூழலை தரும் ஊர் இதுவாகும்.

Best Woman Friendly solo travel places in India

5. ஷில்லாங் :

கிழக்கு ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் மேகாலயாவின் ஷில்லாங், நிஜமாகவே பேருக்கு ஏற்றாற் போல் ஜில்லென்ற அனுபவத்தை தரக் கூடிய ஊர் தான். இயற்கை அழகு, நீர் வீழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சியை தரும் ஊர் என்றே சொல்லலாம். நட்புடன் பழகும் உள்ளூர் மக்கள், அமைதியான சூழல் ஆகியவை நம்முடைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாக இருக்கும். தனியாக பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பான உணர்வை தரும் நகரமாகும்.

Best Woman Friendly solo travel places in India

6. உதய்பூர் :

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், ஏரிகள், பிரம்மாண்டமான அழகிய அரண்மனைகள், அழகு அழகான பொருட்கள் நிறைந்த கடை வீதிகள் என உற்சாகம் ஊற்றெடுக்க செய்யும். இங்குள்ள மக்களின் கணிவான கவனிப்பு தானாக அனைவருக்கும் பாதுகாப்பு உணர்வை தந்து விடும். பெண்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் ஊர் என்பதால் இங்கு பெண்களுக்கு பாதுகாப்பிற்கு எந்த குறையும் இருக்காது.

Best Woman Friendly solo travel places in India

7. மணலி :

இமாச்சல பிரதேசத்தின் மணலி, இந்தியாவின் மிக அற்புதமான இடங்களில் ஒன்று. பனி மூடி மலைகள், குளுமையான பள்ளத்தாக்குகள், த்ரில்லிங் அனுபவத்தை தரும் சாகச விளையாட்டுகள், இயற்கை அழகுகள், அன்பான வரவேற்பு, நல்ல உணவு என தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் பெண்களின் சிறந்த தேர்வாக மணலி இருக்கும். அமைதி, சாகசம், சந்தோஷம் என எது வேண்டுமானாலும் மணலியில் கிடைக்கும்.

More News

    Read more about: women solo travel beach
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+