Search
  • Follow NativePlanet
Share
» »பூராடம் ராசியை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் பக்தஜனேசுவரர்..!

பூராடம் ராசியை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் பக்தஜனேசுவரர்..!

பூராடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 20-வது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூராட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூராட நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். சுக்கிரனின் அம்சமாக வருவது இந்த பூராட நட்சத்திரம். வித்யாதரன் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கனிவான பார்வையும், நினைத்ததை சாதிக்கும் மனப்பாங்கும் கொண்டவர்கள். பெரும்பாலும், புராட ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்திருப்பது கிடைக்காவிட்டாலும், பதிர்பாத வகையில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களும் அவர்களுக்கு சாதகமாகவே அமையும். இன்னும் எத்தனை எத்தனையோ சாதகமான அதிர்ஸ்டசாலியாக நீங்கள் இருந்தாலும் இது நாள் வரையில் செல்வமும், செழிப்பான வாழ்வும் உங்களை விட்டு சற்று விலகியே இருந்திருக்கும். இந்த விளம்பி வருட சித்திரை, வைகாசி மாதத்தில் இக்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டு வர இந்த வருடமே புகழ்ச்சியும், மகிழ்ச்சியும் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் அமைந்துள்ளது அமைந்துள்ளது அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோவில். விழுப்புரம் மாநகரத்தில் இருந்து திருச்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை 38-யில் சுமார் 25 கிலோ மீட்டர் பயணித்தால் மெட்டத்தூரை அடுத்துள்ள திருநாலூரில் அமைந்துள்ள பக்தஜனேசுவரர் கோவிலை அடையலாம்.

Sreejithk2000

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் 8-வது தலமாகவும், 274 சிவாலயங்களில் இது 219 தேவாரத் தலமாகவும் உள்ளது. இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை மட்டும் சூரியனின் ஒளிக் கதிர்கள் கறுவறையில் உள்ள மூலவர் பக்தஜனேசுவரர் பக்தஜனேசுவரர் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது. பூராட நட்சத்திரத்திற்கு உகந்த தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

Ssriram mt

திருவிழா

திருவிழா

ஆகம விதிமுறைப் படி திருநாவலூர் பக்தஜனேசுவரர் ஆலயத்தில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சுந்தரர் ஜனன விழா, ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சித்திரைத் திருவிழா, சித்திரை புத்தாண்டு அன்று பஞ்சமூர்த்திகளுக்கும் அபிசேக ஆராதனை, ஆடி மாதம் பூராடம் நட்சத்திரத்தன்று இத்தலத்தில் வீற்றுள்ள மனோன்மணியம் அம்மையாருக்கு சிறப்பு வழிபாடு என விழா கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கைக்கு ராகுகால வழிபாடு நடத்தப்படுகிறது. இதனைத் தவிர, பிரதோச நாட்களில் சிறப்பு அலங்காரத்துடன் மூலவருக்கும், மனோன்மணியம் அம்மையாருக்கும் சிறப்பு பூஜைகளுடன் ஆராதனை செய்யப்படுகின்றன.

Ssriram mt

நடை திறப்பு

நடை திறப்பு

அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Arunankapilan

வழிபாடு

வழிபாடு

சைவ சமயத்தினர் தங்களது வாழ்நாளில் தவறவிடாமல் வழிபட வேண்டிய தலங்களில் இச்சிவதலம் முக்கியமானதாகும். சுக்ரனுக்கு வக்ரம் தோசம் பரிகாரம் பெற்ற தலம் இது. திருமண வரம், தொழில் விருத்தி, உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட செழிபான வாழ்வைப் பெற அவசியம் இத்தலத்தில் வழிபட வேண்டும். பூராடம் நட்சத்திரம் உடையோர் சித்திரை, வைகாசி மாதத்தில் குடும்பத்தினருடன் இத்தலத்திற்கு வருவது சிறப்பு.

Laks316

qநேர்த்திக்கடன்

qநேர்த்திக்கடன்

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மூலவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, தாமரைப் பூ மாலை சூட்டி வழிபாடு செய்தால் எண்ணியவை யாவும் கிடைக்கும் என்பது தொன்நம்பிக்கை. நிலக் கிரையம், வழக்கு பிரச்சனை உள்ளிட்டவை தீர 3 மஞ்சள் கிழங்கு மற்றும் 3 எலுமிச்சை பழத்தினை மூலவருக்கு சாற்றி பூஜை செய்து பெற்றுச் சென்றால் மங்கலகரமான நிகழ்வுகள் இல்லரத்தில் அரங்கேறும்.

Ssriram mt

புராணக் கதை

புராணக் கதை

சுக்கிரன் இத்திருத்தலத்தில் ஒரு லிங்கத்தை வைத்து அதற்கு தினந்தோறும் தவறால் பூஜைகள் செய்து இறையருள் பெற்றார். இன்றும் சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கு அருகே அமைந்துள்ளது. வெள்ளிக் கிழமைகளில் இந்த லிங்கத்திற்கு விசேச பூஜைகள் செய்யப்படுகின்றன. இத்தலத்தின் சிறப்பையும், பெருமையையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியுருப்பது குறிப்பிடத்தக்கது.

Gaura

தலசிறப்பு

தலசிறப்பு

பிரம்மா, விஷ்ணு,, சண்டகேசுவரர், கருடன், நரசிங்க முனையர் வழிபட்ட தலம் பக்தஜனேஸ்வரர் ஆலயம். பார்வதி தேவி இத்தலத்தில் தோன்றி சிவ பெருமானை பூஜித்து, அவர் மனம் மகிழ திருமணம் புரிந்தார். இரணியனை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு இங்குள்ள சிவனை பூஜித்து நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை இத்தலத்தில் பெற்றார். அருணகிரிநாதன் இத்தலத்தில் உள்ள முருகனை பெருமைகொண்டு பாடியுள்ளார்.

Laks316

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

விழுப்புரத்தில் இருந்து சுமார் 25.4 கிலோ மீட்டர் தூரத்திலும், நெய்வேலியில் இருந்து சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்திலும், கள்ளக்குறிச்சியில் இருந்து 59 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோவில். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தலத்தை அடைய பேருந்து வசதிகளும், தனியார் போக்குவரத்து வசதிகளும் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பெரங்கியூர், அரசூர், மடப்பட்டைக் கடந்து செஞ்சிக்குப்பம் அடுத்துள்ள திருநாவலூரை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more