» »விடுமுறைக்கு மும்பை பக்கம் போகனும்னா ஒரு முறை பந்தர்தரா போயிட்டு வாங்க!!

விடுமுறைக்கு மும்பை பக்கம் போகனும்னா ஒரு முறை பந்தர்தரா போயிட்டு வாங்க!!

Written By: Balakarthik Balasubramanian

ஹுல்லபலூ நகரத்தின் வெளியே காணப்படும் இடமான பந்தர்தரா, மும்பையிலிருந்து 165 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் குட்டி மலைப்பகுதியாகும். இவ்விடம் விடுமுறைக்கு ஏற்ற சிறந்த இடமாக அமைய, இயற்கையின் அழகினால் ஆழம் வரை அணைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சி, ஏரிகள், அணைகள் மற்றும் மலைப்பகுதிகள் என கண்களுக்கு ஆசிர்வாதத்தையும் இயற்கையின் வாயிலாக வழங்குகிறது.

2460 அடி உயரத்தில் இவ்விடமானது அகமத் நகர் மாவட்டத்தில் காணப்பட, ப்ரவரா, பந்த்ர்தரா ஆகிய நதிகளில் அமைந்திருக்கிறது. இயற்கை ஆர்வலர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் அழகிய இடமான இவ்விடம், தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் அசதிக்கு ஓய்வு நேரமாக சிறந்தும் விளங்குகிறது.

புராணத்தின்படி, அகஸ்திய முனிவர் தன்னுடைய சில தவங்களை இந்த பந்தர்தராவில் ஒரு வருடங்களுக்கு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. கடவுள் கங்கை நதியின் வாயிலாக அவருக்கு அருள் பாவித்ததாகவும் தெரியவர, அவருடைய பக்தியை கண்டு அவர் மனமகிழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த நதியே அவருக்கு ஒரு பரிசை அளிக்க, அதனையே இன்று நாம் 'ப்ரவரா' என்றழைக்கிறோம் எனவும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரியவருகிறது.

இயற்கை விரும்பிகளுக்கு மட்டும் பந்தர்தரா சொர்க்கமாக அமையாமல், இங்கே சிகரங்கள் மற்றும் கோட்டைகளுமென, பயண ஆர்வலர்களுக்கும் மலை ஏறும் ஆர்வலர்களுக்கும் ஏற்ற சிறந்த இடமாகவும் இது விளங்குகிறது.

 பந்தர்தராவை நாம் காண சிறந்த நேரங்கள்:

பந்தர்தராவை நாம் காண சிறந்த நேரங்கள்:

செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் இந்த பந்தர்தரா குளுமையான கால நிலையை கொண்டு ஓய்வினை நமக்கு தருகிறது. பருவமழைக்காலங்களில் இதற்கு சரிசமமான அழகினை தர, மழை சார்ந்த ஏரியையும், நீரையும் சேர்த்து கொண்டிருக்கிறது. இந்த கால நிலையில் பயணம் என்பது ஆபத்தாக அமைவதோடு குழப்பமாகவும் அமைகிறது.

Elroy Serrao

 மும்பையிலிருந்து பந்தர்தராவிற்கு செல்லும் வழி:

மும்பையிலிருந்து பந்தர்தராவிற்கு செல்லும் வழி:

வழி 1:
சேட்டா நகர் - தேசிய நெடுஞ்சாலை 160 - கோட்டி சீரடி சாலை.
கம்பலே - பந்தர்தரா (164 கிலோமீட்டர் - மூன்று மணி நேரம் முப்பது நிமிடங்கள்)
வழி 2:
CST சாலையின் தென்கிழக்கு. - AH வாடியா மார்க் - கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை - பர்வி சாலை. - சோனாவ்லே - பாட்லாபூர் - போரட்படா - மஹசா சாலை. - கர்ஜாட்-முர்பாட் சாலை.-தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை 44 - பந்தர்தரா (172 கிலோமீட்டர் - 5 மணி நேரம்)
வழி 3:
சேட்டா நகர் - பெங்களூரு - மும்பை நெடுஞ்சாலை - தேசிய நெடுஞ்சாலை 48 - கர்ஜாத் - சௌக் சாலை. - கர்ஜாத் - முர்பாத் சாலை. போஹியில் - தேசிய நெடுஞ்சாலை 61 - மகாராஷ்டிரா மாநில நெடுஞ்சாலை 44 - பந்தர்தரா (192 கிலோமீட்டர் - 5 மணி நேரம் 5 நிமிடங்கள்)
மேலும், பந்தர்தரா மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்கள் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ளலாம் இப்பொழுது.

 ஏரிகள் நகரம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்:

ஏரிகள் நகரம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்:

நீங்கள் மும்பையை விட்டு புறப்பட, தானே மற்றும் கல்யாண் பகுதியின் அழகில் அகம் குளிர்ந்து காண்பீர்கள் என்பதே உண்மை. இந்த பெரு நகரங்களில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் பலவிருக்கிறது. தானேவில் வார்தன் பேண்டஸி தீம் பார்க், திகுஜி நி வாடி, சஞ்சய் நீர்ப்பூங்கா, என பல காணப்பட, குழந்தைகளுடன் நாம் நேரத்தை செலவழிக்க ஏற்ற இடமாக இவை அமைகிறது.
கல்யாணில் காலா டலோ ஏரி மற்றும் துர்கடி ஆலயம் காணப்பட, இவை இரண்டும் நகரத்தின் முக்கிய ஈர்ப்புகளாகவும் அமைகிறது.

Verma a k

 மஹுலி கோட்டை:

மஹுலி கோட்டை:


இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளை கொண்டு இந்த மஹுலி கோட்டை உருவாக்கப்பட்டிருக்க பொதுவாக உச்சத்தையும் பகிர்ந்துக்கொண்டுள்ளது. பயண ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இக்கோட்டை காணப்பட, தானே மாவட்டத்தின் உயர்ந்த புள்ளி இது என்பதும் நமக்கு தெரியவருகிறது. முகலாயர்களால் முதலில் இது கட்டப்பட, இன்று இவ்விடம் இடிபட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த கோட்டையை சுற்றி பசுமையான புற்களும், பாசிகளும் அழகாக காணப்படுகிறது.
கல்யாணிலிருந்து 48 கிலோமீட்டரில் அசங்கோன் பகுதியில் இது காணப்பட, 2,815 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. பயண குழுக்கள் தினசரி பயணத்தின் மூலம் தங்கள் நேரத்தை அழகாக்க உதவும் இக்கோட்டை ஒதுங்குபுறமாக காணப்படுகிறது.

Sanmukh.putran

 இகாட்பூரி என்னும் மலைப்பகுதி:

இகாட்பூரி என்னும் மலைப்பகுதி:

அசங்கோனிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுமோர் சிறிய மலைப்பகுதியான இவ்விடம் விடுமுறைக்கு ஏற்ற இடமாகவும் ஒதுக்குப்புறமாகவும் காணப்படுகிறது. இந்த சிறிய புகழிடமானது பாட்சா நதி பள்ளத்தாக்கு, ஒட்டக பள்ளத்தாக்கு மற்றும் பல சிகரங்களுக்கு வீடாக விளங்கி, ஒட்டுமொத்த மலைப்பகுதியின் காட்சியையும் நம் கண்களுக்கு பரிசாய் தருகிறது.

மலை ஏறும் ஆர்வலர்களுக்கும், இயற்கை விரும்பிகளுக்கும் இவ்விடம் அமைதியாகவும், புத்துணர்ச்சியையும் தர, அன்றாட வாழ்க்கையின் சலிப்பு நம்மிடமிருந்து நீங்க இவ்விடம் உதவுகிறது. பந்தர்தரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பற்றி நாம் இன்னும் பல சுவாரஷ்யமான தகவலை தெரிந்துக்கொள்ளலாமா...

Jsdevgan

 ஆர்தர் ஏரி மற்றும் வில்சன் அணை:

ஆர்தர் ஏரி மற்றும் வில்சன் அணை:


இதனை ‘ஆர்தர் மலை ஏரி' என்றும் அழைக்கப்பட, பந்தர்தராவில் காணப்படும் சஹ்யாத்ரி மலைத்தொடர்ச்சியானது அடர்ந்த காட்டினை தழுவி காணப்படுகிறது. 34 கிலோமீட்டருக்கு நீண்ட ஏரியுடன் இணைந்து வில்சன் அணைக்கட்டும் காணப்படுகிறது.
1910ஆம் ஆண்டில் இந்த அணை கட்டப்பட்டிருக்க, ஆங்கிலேயரால் 1926ஆம் ஆண்டு இது முழுமை அடைந்தது. இந்தியாவில் காணப்படும் பழமையான அணைகளுள் இதுவும் ஒன்றாகும்.
அமைதியான மற்றும் அழகினை கண்களுக்கு தருமோர் ஏரியாக பந்த்ர்தரா காணப்பட, சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. இந்த ஏரியில் படகு வசதிகள் காணப்பட, சுற்றியுள்ள சூழலை தெளிவாகவும் இது படம் பிடித்துகாட்டுகிறது.

Kashif Pathan

 அம்பர்ல்லா நீர்வீழ்ச்சி:

அம்பர்ல்லா நீர்வீழ்ச்சி:


அம்பர்ல்லா நீர்வீழ்ச்சி:

பருவமழைக்காலத்தின்போது, வடக்கு பகுதியிலிருந்து பெரும்பாலும் இந்த வில்சன் அணையில் நீர் நிரம்பி வழிகிறது. பாறைகளில் விழும் இந்நீர் குடை வடிவத்தில் காணப்பட, அதனாலே இந்நீர்வீழ்ச்சிக்கு இப்பெயர் வந்ததாகவும் நமக்கு தெரியவருகிறது.
இந்த நீர்வீழ்ச்சிக்கு கீழே வலது புறத்தில் பாலம் காணப்பட, அருவியிலிருந்து விழும் நீரின் முழு வீச்சினை இந்த பாலத்திலிருந்து நாம் பார்ப்பது இனிமையான காட்சியை நம் கண்களுக்கு தருகிறது, இந்த அம்பர்ல்லா நீர்வீழ்ச்சியின் அழகானது பருவ மழைக்காலங்களின் போதே நம் கண்களுக்கு பரிசளித்து மனதினையும் வருட செய்கிறது.

Desktopwallpapers

 மௌன்ட் கல்சுபாய்:

மௌன்ட் கல்சுபாய்:


பயண பிரியர்களின் பிடித்தமான இடமாக மேற்கு தொடர்ச்சியில் காணப்படும் உயர்ந்த சிகரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 5400 அடி உயரத்தில் இவ்விடம் காணப்பட, இந்த சிகரத்தை சுற்றிலும் கோட்டைகளும், ஆலயங்களுமென காணப்படுகிறது.
இந்த கோட்டை, மராட்டிய பேரரசரை சார்ந்து காணப்பட, கல்சுபாய் சிகரமானது மராட்டிய வம்சத்தினரால் பக்கத்து நாட்டு எதிரி சாம்ராஜ்ஜியத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது.
இந்த மௌன்ட் கல்சுபாயில் ஏறுவதற்கு பல வழிகள் காணப்பட, மூன்று இரும்பு ஏணிகள் அதிகரிகளால் மலையில் ஏறுவதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Elroy Serrao

 ரட்டங்கட் கோட்டை:

ரட்டங்கட் கோட்டை:


பந்த்ர்தராவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்பட, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக இந்த ரட்டங்கட் கோட்டை விளங்குகிறது. 4250 அடி உயரத்தில் இந்த கோட்டை காணப்பட, பயண ஆர்வலர்களின் விருப்பத்திற்கு ஏற்ற சிறந்த இடமாகவும் இது விளங்குகிறது.
முகலாயர்களால் முன்பு பயன்படுத்தப்பட்ட இக்கோட்டை, சிவாஜி மஹாராஜரால் கைப்பற்றப்பட்டதாகும். இந்த 400 வருடத்திற்கும் பழமை வாய்ந்த கோட்டையில் 4 கதவுகளும், 2 குகைகளும் என எண்ணற்ற கிணறுகளும் கோட்டையை சுற்றி பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த இரண்டு குகைகளுள் ஒன்றுதான் 50 மக்கள் வரை தங்க போதிய அளவில் காணப்பட, ரட்டங்கட் கோட்டை சாகசங்கள் நிகழ்த்த துடிக்கும் ஒருவருக்கு சிறந்த இடமாக விளங்குகிறது.

VinayakPhadatare

 அம்ருதேஷ்வரர் ஆலயம்:

அம்ருதேஷ்வரர் ஆலயம்:

சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த அம்ருதேஷ்வரர் ஆலயம், ரத்தன்வாடி கிராமத்தில் காணப்படுகிறது. பந்த்ர்தராவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இவ்விடம் காணப்பட, 1200 வருடங்களுக்கு பழமையான கோவில் இது எனவும் இந்தியாவிம் தொல்பொருள் ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
ஹேமத்பாந்தி கட்டிடக்கலை பாணியில் காணப்படும் இந்த ஆலயம், சிவப்பு மற்றும் கருப்பு கற்களை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாபெரும் ஆலயத்தில் சுவரோவியங்கள், தூண்கள், பாறை சிற்பங்கள் எனவும் காணப்படுகிறது.

commons.wikimedia.org