Search
  • Follow NativePlanet
Share
» »புஷி அணை - அறியப்படாத பேரழகு!!!

புஷி அணை - அறியப்படாத பேரழகு!!!

By

மகாராஷ்டிராவின் பிரபலமான மலைவாசஸ்தலமான லோனாவலாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை தேடி ஏராளமான குடும்பங்கள், வணிகமயமாக்கலின் அசுர வளர்ச்சியின் காரணமாக புலம் பெயர்ந்து வந்து வாழத் துவங்கினர்.

இதன் காரணமாகவே இங்கு வரும் பயணிகளின் எண்ணிகையும் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று புஷி அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது.

படித்துப் பாருங்கள் : சுற்றுலாத் தலங்களாக திகழும் தமிழக அணைகள்!

இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடம்!

இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடம்!

லோனாவலா மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பகுதிகள் என்றே சொல்லலாம். அதிலும் புஷி அணையின் பேரழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதன் கார் பார்க்கிங் பகுதியிலிருந்து, குட்டை, கடைகள், அணை என்று ஒவ்வொன்றும் புகைப்படக்காரர்களையும், இயற்கை காதலர்களையும் மயக்கம் கொள்ள செய்து விடும்.

குழந்தைகளாகும் பெரியவர்கள்!

குழந்தைகளாகும் பெரியவர்கள்!

புஷி அணையின் படிக்கட்டுகள் மீது வயது வித்தியாசமின்றி அனைவரையும் நீங்கள் பார்க்கலாம். அங்கு வழிந்தோடும் நீரினில் நனைந்து கொண்டு குதூகலிக்கும் குழந்தைகளோடு குழந்தைகளாக, பெரியவர்களும் விளையாடிக் களிக்கும் தருணம் மிகவும் சிறப்பானது.

லோனாவலாவிலிருந்து புஷிக்கு எப்படி செல்வது?

லோனாவலாவிலிருந்து புஷிக்கு எப்படி செல்வது?

நீங்கள் லோனாவலாவை அடைந்த பிறகு அங்கு யாரிடம் கேட்டாலும் புஷி அணைக்கு எப்படி செல்வது என்பதை தெளிவாக சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல், புஷி அணைக்கு செல்லும் வழியில், அணைக்கு 2 கிலோ மீட்டர் முன்பாக 'புஷி டேம் பார்க்கிங்' எனும் அறிவுப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்த இடத்தில் உங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு 5 முதல் 20 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.

வாகன நெரிசலை தவிர்க்க வழி!

வாகன நெரிசலை தவிர்க்க வழி!

புஷி அணையிலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு தூரத்தில் தள்ளி உங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஏனெனில் நீங்கள் அணையை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும் போது வாகன நெரிசலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. மேலும், இந்தப் பகுதியில் போக்குவரத்து காவல்துறையின் தலையீடு ஏதும் இருக்காதென்றாலும், சாலைகள் மோசமானதாக காணப்படும்.

குட்டை நீரை கடக்க வேண்டும்

குட்டை நீரை கடக்க வேண்டும்

புஷி அணையை அடைவதற்கு நீங்கள் ஆங்காங்கு தேங்கிக் கிடக்கும் குட்டை நீரினை நடந்துதான் கடக்க வேண்டும். அதன்பிறகு வளைந்து செல்லும் படிக்கட்டுகள் மூலம் நீங்கள் சுலபமாக புஷி அணையை அடைந்து விட முடியும்.

படம் : Ripanvc

குட்டை நீரும் அழகுதான்!

குட்டை நீரும் அழகுதான்!

குட்டை நீர் வருடத்தின் சில காலங்களில் ஒரு சிறிய ஏரி போல காட்சியளிக்கும். இதன் காரணமாகவே மழைக் காலங்களில் நிரம்பி வழியும் புஷி அணையுடன், இந்த குட்டை நீரையும் சேர்த்து பார்ப்பதற்கு அழகாகவும், பயணிகளை களிப்பூட்டும் விதமாகவும் இயற்கையாகவே அமைந்து விடுகிறது.

படம் : Lucky vivs

ருசியான உணவுகள்

ருசியான உணவுகள்

புஷி அணையின் படிக்கட்டுகள் நெடுகிலும், அதைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கடைகளில் அப்பகுதியின் பிரசித்தமான உணவு வகைகள் விற்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். அதிலும் வட பாவ், மக்காச் சோளம் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றில் செய்த வடைகள் போன்றவைகள் இங்கு வரும் பயணிகள் விரும்பி உண்ணும் பதார்த்தங்கள் ஆகும்.

படம் : Sobarwiki

ஹூக்கா ஜாயின்ட்

ஹூக்கா ஜாயின்ட்

புஷி அணையில் ஹூக்கா ஜாயின்ட்டுகளை அவ்வப்போது காண முடியும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஹூக்கா ஜாயின்ட் கூட இப்பகுதியில் இருக்கக்கூடும்.

ஒன்றும் வாங்காதீர்கள்

ஒன்றும் வாங்காதீர்கள்

புஷி அணையிலேயே எல்லாப் பொருட்களும் கிடைக்குமென்பதால் குட்டையை கடக்கும் முன்பாக எந்த பொருளையும் வாங்க அவசியமில்லை. அப்படி ஏதேனும் பொருட்களை நீங்கள் வாங்கினாலும், குட்டையை கடக்கும் போது கைகளில் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும்.

நீரில் நடக்க காலணிகள்

நீரில் நடக்க காலணிகள்

குட்டையிலிருந்து, அணையின் வாயிலை அடையும் வரை நிறைய காலணி விற்கும் கடைகள் உள்ளன. எனவே எதற்காக நீங்கள் உங்கள் விலையுயர்ந்த பிராண்டட் காலணிகளை நீரில் நடந்து வீணாக்கவேண்டும்.

புஷி அணையை எப்படி அடைவது?

புஷி அணையை எப்படி அடைவது?

புஷி அணைக்கு வெகு அருகில் மும்பை (88 கி.மீ) மற்றும் புனே (70 கி.மீ) விமான நிலையங்கள் இருக்கின்றன. இதனால் உள்நாட்டு பயணிகளும், வெளிநாட்டு பயணிகளும் சுலபமாக புஷி அணையை அடையலாம். அதேபோல நீங்கள் லோனாவலா ரயில் நிலையத்தை அடைந்து விட்டால், அங்கிருந்து வாடகை கார்களின் மூலம் சுலபமாக புஷி அணையை அடைந்து விடலாம். ஆனால் அந்த கார்களை நீங்கள் ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுப்பது நல்லது. இல்லையென்றால் அணையிலிருந்து திரும்பிப் போகும் போது கார் கிடைக்காமல் நீங்கள் கஷ்டப்பட நேரும். அதைவிட புஷி அணைக்கு நீங்கள் உங்கள் சொந்த கார்களில் பயணம் செய்யும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும். மேலும் லோனாவலாவிலிருந்து மிதிவண்டியோ, மோட்டார் பைக்கோ வாடகைக்கு எடுத்துக்கொண்டு புஷி அணையை அடையலாம். அப்படி நீங்கள் செல்கையில் அந்த 8 கிலோமீட்டர் பயணத்தை உங்கள் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டீர்கள். அதோடு பார்க்கிங் போன்ற தொல்லைகளும் இந்த வகை போக்குவரத்தில் இல்லை.

எப்போது சுற்றுலா வரலாம்?

எப்போது சுற்றுலா வரலாம்?

புஷி அணை கோடை காலங்களில் அதன் பசுமையை இழந்து மிகவும் வறண்டு போய் காட்சியளிக்கும். எனவேபுஷி அணையை சுற்றிப் பார்க்க அதன் மழைக் காலமே சிறந்தது. இந்தக் காலங்களில் மழைப் பொழிவு அதிகமாக இருப்பதால் அணை நிரம்பி பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும், புஷி அணையை பனிக் காலத்தில் சுற்றிப் பார்க்கும் அனுபவமும் மகிழ்ச்சியளிக்க கூடியதே. ஆனால் இந்தக் காலங்களில் புஷி அணையின் இரவு நேர வெப்பநிலை 10 டிகிரி அளவில் சென்றுவிடுவதால், அடர்த்தியான ஆடைகளை உடுத்திக் கொள்வதும், கம்பளி எடுத்து வருவதும் நல்லது.

Read more about: அணைகள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X