Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக நீளமான சாலை இது தானாம் – இதுவரை எந்த மனிதனும் கடந்தது இல்லையாம்!

உலகின் மிக நீளமான சாலை இது தானாம் – இதுவரை எந்த மனிதனும் கடந்தது இல்லையாம்!

விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து முறைகள் எல்லாம் வருவதற்கு முன்னர் பல இடங்களுக்கு மக்கள் நடந்து தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் உலகிலேயே மிக நீண்ட பாதையை இதுவரை எந்த மனிதனும் கடந்தது இல்லையாம். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து தொடங்கி கிழக்கு ரஷ்யாவின் மகதான் டவுனில் முடிவடையும் இந்த சாலையின் நீளம் 22387 கிமீ ஆகும். இந்த பாதையை நடந்து கடக்க பலரும் பல முறை இதுவரை முயன்றுள்ளனர். ஆனால் எவரும் இதுவரை இந்த முயற்சியில் வெற்றிப் பெற்றதில்லை. ஏன் என்று தெரியுமா?

capetowntomagadoncover

அதிசயங்கள் நிறைந்த பூமி

இந்த பரந்த கிரகத்தில் மனிதர்களால் இன்னும் ஆராயப்படாத பல இடங்கள் உள்ளன. பூமி மிகப்பெரியது அதனுள் பல மர்மங்களும் சாகசங்களும் நிறைந்துள்ளது. முடியாத பல விஷயங்களையும் கூட மக்கள் முயற்சி செய்து வெற்றிக் கண்டுள்ளனர். ஆனால் எவரும் இந்த உலகின் மிக நீண்ட பாதையை இதுவரை நடந்து சென்றது இல்லை. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான மகதான் வரை நடக்கக்கூடிய மிக நீண்ட தூரமான இது இதுவரை இன்னும் ஆராயப்படாமலே இருக்கிறது.

17 நாடுகள் வழியாக பயணம்

நடக்கக்கூடியது என சொல்லப்பட்டாலும், இந்த பாதையின் மொத்த 22,387 கிமீ நடந்தே கடப்பது என்பது மிகவும் சிரமம். இந்த வழியில் பயணம் செய்ய பயணிகள், விமானங்கள், படகுகள் மற்றும் கார்கள் என எதையும் நாடவேண்டியதில்லையாம். ரஷ்யா to தென்னாப்ரிக்கா வரையிலான இந்த பாதையில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் வழியாக பயணிகள் 17 நாடுகள் மற்றும் 6 காலங்களை கடந்து செல்ல நேரிடும்.

capetowntomagadon

13 முறை எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு சமம்

இடைவேளையின்றி தொடர்ந்து நடந்தால் 187 நாட்களில் 4,492 மணி நேரத்தில் நடையை முடிக்க முடியும். இருப்பினும், நீங்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் நடந்தால், அதை முடிக்க 562 நாட்கள் ஆகும். மொத்தத்தில், ஒரு நபர் பயணத்தை முடிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும். எவரெஸ்ட் சிகரத்தில் 13 முறை ஏறி இறங்குவதற்கு இந்த நீண்ட நடைப்பயணம் பெரும்பாலும் ஒப்பிடப்படுகிறது.

என்ன காரணம்

இது எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட, இதுவரை எந்த மனிதனும் இதுபோன்ற பயணங்களில் ஈடுபடத் துணிந்ததில்லை. இந்த நடைபாதை சற்று ஆபத்தானதாக இருக்கலாம் மற்றும் சில பகுதிகள் உலகில் முரண்பட்ட பகுதிகளின் கீழ் வரும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல, விசா கட்டுப்பாடுகளும் கூட இங்கு ஒரு பெரிய குறையாக உள்ளது. மாறிவரும் வெப்பநிலையைத் தக்கவைக்க, ஒரு பயணிக்கு வலுவான உயிர்வாழும் திறன் மற்றும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும்.

இந்த பாதையைக் கடந்து செல்ல உங்களுக்கு விருப்பமாக உள்ளதா?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+