Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவில் தீபாவளி கொண்டாடினால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான்!

கோவாவில் தீபாவளி கொண்டாடினால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான்!

கோவாவில் தீபாவளி கொண்டாடினால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான்!

By IamUD

இதோ வந்துவிட்டது தீபாவளி.. தீப ஒளியின் வண்ண மயமான இருளில் மூழ்கி முத்தெடுத்து வர தயாராகிவிட்டீர்களா இளைஞர்களே.. அதென்ன இளைஞர்களுக்கு மட்டும் தனி மரியாதை என்கிறீர்களா.. காரணம் இருக்கிறது நாம் இந்த பதிவில் காணவிருப்பது கோவாவின் தீபாவளி... கோலாகலமான தீபாவளி. மற்ற ஊர்களில் கொண்டாடும்படியான தீபாவளி கோவாவில் கொண்டாடப்படுவதில்லை. மாறாக வித்தியாசமான தீபாவளியை கண்டுகளிக்க வாருங்கள் இப்போதே கோவா புறப்படலாம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 கோவா செல்லலாம் வாங்க!

கோவா செல்லலாம் வாங்க!

சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவா செல்லலாம்.

இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர், ஏர் இன்டியா உள்ளிட்ட பல விமான சேவைகள் சென்னையிலிருந்து கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.

நேரடி விமான கட்டணமாக குறைந்தது 2500 ரூபாயும், இணைப்பு விமானம் மூலம் சென்றால் குறைந்தபட்சம் 5000 ரூபாயும் ஆகலாம்.

மதுரையிலிருந்து நேரடியாக விமானங்கள் இல்லை. ஆனால் இணைப்பு விமானங்கள் மூலம் குறைந்தபட்சம் 5500 ரூபாயிலிருந்து கோவாவுக்கு பயணிக்கமுடியும்.

கோவையிலிருந்தும் இணைப்பு விமானங்களே இருக்கின்றன. இந்த மாத இறுதியில் செல்லவிரும்புபவர்களுக்கு 4000 ரூபாயிலிருந்து கோவாவுக்கு விமான கட்டணம் தொடங்குகிறது.

 ரயிலில் பயணிக்கவிரும்புபவர்களுக்காக

ரயிலில் பயணிக்கவிரும்புபவர்களுக்காக

சென்னை சென்ட்ரல் வாஸ்கோ விரைவு வண்டி மட்டுமே சென்னையிலிருந்து நேரடியாக கோவா செல்ல இயக்கப்படும் ரயில் ஆகும்.

22 மணி நேர பயணத்தில் நாம் கோவாவை அடைய முடியும். அல்லது பெங்களூரு சென்று அங்கிருந்தும் ரயிலில் பயணிக்கலாம்.

யெஸ்வந்த்பூரிலிருந்து இரண்டு ரயில் வண்டிகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன. மதியம் 2.45 மணிக்கு ஒன்றும், இரவு 10.30 மணிக்கு ஒன்றும் என இரு வண்டிகளும் யெஸ்வந்த்பூர் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகின்றன.

அதை தவறவிட்டுவிட்டால் கவலைப் படாதீர்கள், இரவு சரியாக 12 மணிக்கு கச்சிக்குடாவிலிருந்து யெஸ்வந்த்பூர் வழியாக மடகானுக்கு ஒரு ரயில் உள்ளது. மேலும் சென்னை சென்ட்ரலிருந்து வரும் ரயில் இரவு 8.10 மணிக்கும், வேளாங்கன்னியிலிருந்து வரும் ரயில் காலை 7.30 மணிக்கும் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்லும்.

கன்னியாகுமரியிலிருந்து 3 ரயில்களும், திருநெல்வேலியிலிருந்து 1 ரயிலும், கோவையிலிருந்து ஒரு ரயிலும் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.

கவலை வேண்டாம்.... சாலையிலும் பயணிப்போம்.....

கவலை வேண்டாம்.... சாலையிலும் பயணிப்போம்.....

ரயிலும் வேண்டாம் விமானமும் வேண்டாம்.. பைக் அல்லது கார் போதும். நீங்களும் கோவாவுக்கு படையெடுக்கலாம்.

இங்க இருக்கு கோவா.. வெறும் 16 மணி நேரம்.. இதோ இதுதான் பிளான்.

அ. சென்னை - ஓசூர் - பெங்களூர்

ஆ. பெங்களூர் - ஹூப்ளி - மார்கோவ்

சென்னையிலிருந்து கோவா செல்லும் திட்டத்தை இரண்டாக பிரித்துக்கொள்வோம்.

(எச்சரிக்கை: பைக் ரைடிங் செல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். இது வெறும் வழிகாட்டி அவ்வளவுதான். 900 கிமீ பைக் ரைடிங் செல்வது அவ்வளவு எளிதான காரணம் இல்லை. அனுபவசாலிகள் மட்டும் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்)

பைக் ரைடிங் செல்பவர்கள் சென்னையிலிருந்து பெங்களூர் வருவதற்கு காஞ்சிபுரம், ஆம்பூர், ஓசூர் முதலிய இடங்களில் சிறு இடைவேளையும், பெங்களூருவில் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, பின் பயணத்தை தொடரலாம்.

பெங்களூருவிலிருந்து தொடங்கிய பயணம் பின் சிரா, சித்ரதூர்கா, ஹவேரி, ஹூப்ளி வரை பயணித்து, ஹூப்ளியில் சற்று ஓய்வெடுத்து பின் பயணத்தை தொடரலாம்.

இப்படி பயணிப்பதால் 910 கிமீ தூரத்தை கடப்பதற்கு 24 முதல் 28 மணி நேரங்கள் எடுக்கும். தீபாவளிக்கு தயாராகுங்கள். புது அனுபவம் பெறுங்கள்.

கோவாவில் தீபாவளி

கோவாவில் தீபாவளி

இந்த வருடம் 6ம் தேதி செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவாவில் 7ம் தேதிதான் தீபாவளி. முன்னதாக சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் விடுமுறை என்பதால் உங்கள் பயணத்தை சிறப்பாக்கலாம்.

ஐந்து நாள்கள் கோலாகல கொண்டாட்டத்தை தொடருங்கள். கோவாவில் குதூகலியுங்கள்.

நண்பர்களுடன், தோழிகளுடன், காதலியுடன், ஒளிகள் மின்ன அன்பு சொட்ட சொட்ட இனிப்புகள் பரிமாறி, வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் உங்கள் நட்பு, அன்பு, காதலை வெளிப்படுத்துங்கள்.

இருள் பிறந்து ஒளி விலகும்

இருள் பிறந்து ஒளி விலகும்

என்ன.... இருள் பிறந்து ஒளி விலகுமா.. ஆமாம்.. வழக்கமாக தீபாவளி பண்டிகை இருளில் ஒளி பிறக்கத்தான் கொண்டாடுவார்கள். ஆனால் கோவா... இருளில் மின்னும் நட்சத்திரம். அங்கு இருள் எப்போது பிறக்குமோ அப்போதே ஒளிகள் வெட்கப்படும். மற்ற நாட்களைப் போல மேற்கத்திய நாகரிகத்துக்கு கோவா என நினைத்திருந்த உங்கள் நினைப்புகள் எல்லாம் கரையும் வண்ணம், வண்ண ஒளிகள் உங்கள் கண்களை அலங்கரிக்கும்.

கிருஷ்ணர் நரகாசூரனை வதம் செய்வார்

கிருஷ்ணர் நரகாசூரனை வதம் செய்வார்

வழக்கமாக தீபாவளிக்கு கதைகள் இருக்கும். அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றாலும், வழிவழியாக தொட்டுத் தொடரும் பட்டு பாரம்பரியம் போன்றது. எனினும் கதைகளில் என்ன இருக்கிறது. நெகட்டிவிட்டியை அடித்து விரட்டி, இன, மத, சாதி பேதமில்லாமல் ஒருங்களித்து கொண்டாடவேண்டிய பண்டிகை இது. அதுவும் கோவாவில், கிருஷ்ண பரமாத்மா எனும் நேர்மறை எண்ணங்கள், நரகன் எனும் எதிர்மறைகளை வீழ்த்த இந்த தீப ஒளித் திருநாளை போற்றி புகழ்ந்து கொண்டாடிவோம்.

ரங்கோலியை மறந்துவிட்டேனோ

ரங்கோலியை மறந்துவிட்டேனோ

தாள்களால் செய்யப்பட்ட மற்ற கலவைகளுடன் இணைந்து எரியூட்டப்படக்கூடிய நரகனின் பொம்மை, அந்த இருளிலும் பிரகாசமாக வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கோரமான முகமாகினும் நரகனையும் நமக்கு பிடிக்கும். அவனை அழிக்க வரும் கிருஷ்ணர் அழகாய் இருப்பார்.

வண்ண கோலங்களை ரங்கோலங்களாய் பார்த்து ரசித்த கிருஷ்ணர் அதை பார்த்து இருளை விலக்கி வண்ண ஒளியை பரப்புவார். நீங்களும் வண்ணங்களில் மூழ்கி ஒளியை மீட்டெடுங்கள். அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

PC: Md. Taymuer Reza Ratul

Read more about: travel goa diwali
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X