Search
  • Follow NativePlanet
Share
» »செல்லுலார் ஜெயில் - இங்கே தியாகிகள் புதைப்படவில்லை, விதைக்கப்படுள்ளனர்

செல்லுலார் ஜெயில் - இங்கே தியாகிகள் புதைப்படவில்லை, விதைக்கப்படுள்ளனர்

By Staff

ஒருவேளை உணவு இல்லையென்றால் கூட நாமெல்லாம் துடிதுடித்து போவோம். சுத்தமான குடிநீரும், உலகத்தரமிக்க மருத்துவமனைகளும், ஆரோக்கியமான வாழ்விடங்களும் கொண்டு ஆனந்தமாக வாழ்கின்றோம் நாம். ஆனால், இவையெல்லாம் நம் முன்னோர்கள் செய்த தியாகங்களின் பயனே அன்றி வேறேதும் இல்லை.

அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அவர்களின் தியாகங்களை பெருமையுடன் நினைவுகூருவது தான். அப்படி அவர்கள் செய்த தியாகத்தின் அடையாளமாக காலத்தை கடந்து நிற்கிறது 'செல்லுலார் ஜெயில்'. இந்த சிறையின் ஒவ்வொரு செங்கல்லும் நம் முன்னோர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகளை நமக்கு சொல்லும்.

தாமஸ் குக் தளத்தில் பயண சலுகை பெறுவதற்கான கூப்பன்களை இங்கே பெற்றிடுங்கள்

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் புரட்சி மற்றும் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களை இந்திய பெருநிலப்பரப்பில் இருந்து நாடு கடத்தி வங்காள விரிகுடாவில் மனித மாமிசம் தின்னும் பழங்குடிகள் வசிக்கும் அந்தமான் தீவில் அடைத்திட கட்டப்பட்ட சிறைச்சாலையே இந்த செல்லுலார் ஜெயில் ஆகும். இது காலா பாணி சிறை என்றும் அழைக்கப்படுகிறது.

Photo:Sudhamshu Hebbar

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

1896ஆம் ஆண்டு துவங்கி 1906 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் இந்த சிறையின் கட்டுமான பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த சிறையை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை கொண்டே பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டியிருக்கிறது. கடும் மழையினாலும், விஷப்பாம்புகளின் கடியாலும், மலேரியா, காலரா போன்ற தொற்று நோய்களாலும் ஆயிரக்கணக்கான கைதிகள் இந்த சிறையின் கட்டுமான பணியின் போது இறந்திருக்கின்றனர்.

Photo:Stefan Krasowski

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

பர்மாவில் இருந்து வரவழைக்கப்பட்ட செங்கற்கள், மரங்களை கொண்டு ஏழு பிரிவுகளாக இந்த சிறை வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் மொத்தம் 693 அறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மிகக்குறுகலாக, ஒரே ஒருவரை மட்டும் அடைக்கும் அளவுக்கு சிறியதாக இருக்கின்றன.

Photo:Arun Katiyar

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

வீர் சாவர்கர், பகத் சிங்கின் கூட்டாளியான மகாவீர் சிங் போன்ற பல அரசியல் முக்கியத்துவம் பெற்ற கைதிகள் இந்த சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

Photo:Ankur P

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

எந்த சிறையில் லட்சக்கணக்கான இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் வீரர்கள் அடைத்து கொடுமை படுத்தினாரோ அதே சிறையில் 1942 ஆம் ஆண்டு ஜப்பான் படைகளிடம் தோல்வியுற்ற பிரிட்டிஷ் வீரர்கள் போர் கைதிகளாக இந்த செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Photo:anuradhac

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டு பிரிவுகள் இடிக்கப்பட்டுவிட்டன. பின்னர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 1969ஆம் ஆண்டு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.

Photo:Arun Katiyar

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

அந்தமான்-நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் இந்த சிறை அமைந்திருக்கிறது. அந்தமான் தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றான இந்த சிறை திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கிறது.

Photo:Ankur P

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

சுற்றுலாப் பயணிகள் வரும் நாட்களில் மாலை நேரத்தில் சுதந்திர போராட்டத்தை பற்றிய ஆவணப்படம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரையிடப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சிறை வளாகத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதனுள் அருங்காட்சியகமும், ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி கூடமும் இயங்குகின்றன.

Photo:Ananth BS

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

1996ஆம் ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரபு மற்றும் மோகன் லால் நடிப்பில் வெளியான 'சிறைச்சாலை' என்ற திரைப்படத்தில் இந்த காலாபாணி சிறையில் நடந்த கொடுமைகள் அவ்வளவு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

இங்கு தான் எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மரணத்தை முத்தமிட்டிருகின்றனர்.

Photo:anuradhac

செல்லுலார் ஜெயில் :

செல்லுலார் ஜெயில் :

சென்னையில் இருந்து சொகுசு படகு மூலமோ அல்லது விமானம் மூலமோ போர்ட் பிளேர் நகரை எளிதாக அடையலாம். போர்ட் பிளேர் நகரத்தை பற்றிய மேலதிக தகவல்களையும், அங்குள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.

Photo:Stefan Krasowski

Read more about: andaman monuments
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X