Search
  • Follow NativePlanet
Share
» »பிரம்மிக்க வைக்கும் சல்ஸா சுற்றுலா

பிரம்மிக்க வைக்கும் சல்ஸா சுற்றுலா

பிரம்மிக்க வைக்கும் சல்ஸா சுற்றுலா

By Udhaya

மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் இமயமலைத்தொடர்களின் அடிவார மலைகளில் இந்த சல்ஸா எனும் அழகிய நகரம் அமைந்திருக்கிறது. இது சிலிகுரி சுற்றுலா நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் ரம்மியமான தேயிலைத்தோட்டங்கள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் பிரமிக்க வைக்கும் ஆறுகள் போன்றவற்றை கொண்டுள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் காண்டாமிருகங்கள் மற்றும் யானைகள் அதிகம் வசிக்கின்றன.

பிரம்மிக்க வைக்கும் சல்ஸா சுற்றுலா

Appra Singh

உள்ளூர் வழிகாட்டிகளின் துணையுடன் பயணிகள் இங்கு காட்டுச்சுற்றுலாவில் ஈடுபடலாம். சல்ஸாவுக்கு அருகிலுள்ள துவார் வனச்சரகத்தில் சம்பார் மான், புள்ளி மான் மற்றும் குரைக்கும் மான் இனங்கள் காணப்படுகின்றன. சுற்றுலா அம்சங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அருகி வரும் இனமான வங்காள புலியை இங்குள்ள பக்ஸா புலிகள் காப்பக வனப்பகுதியில் பார்த்து ரசிக்க வாய்ப்பிருக்கிறது.

பிரம்மிக்க வைக்கும் சல்ஸா சுற்றுலா


SOUMIK PAL

750 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த பக்ஸா புலிகள் சரணாலயம் இயற்கை ரசிகர்கள் மற்றும் மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். வங்காளப்புலிகள் மட்டுமல்லாமல் இந்த வனப்பகுதியில் சிறுத்தைகள் மற்றும் பலவகை அணில் இனங்கள், பறவைகள் போன்றவையும் வசிக்கின்றன. எப்படி செல்வது சிலிகுரி நகரத்தில் தங்கியபடி அங்கிருந்து 64 கி.மீ தூரத்திலுள்ள இந்த சல்ஸா சுற்றுலாத்தலத்துக்கு பயணிகள் வருகை தரலாம். இங்குள்ள எல்லா சுற்றுலா அம்சங்களையும் சுற்றிப்பார்க்க 3 நாட்கள் தேவைப்படலாம்.

பிரம்மிக்க வைக்கும் சல்ஸா சுற்றுலா

Appra Singh

தேசிய நெடுஞ்சாலை 31 மற்றும் 31C வழியாக சிலிகுரியிலிருந்து 61 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சல்ஸா சுற்றுலாத்தலத்திற்கு வரலாம்.

ரயில் மார்க்கமாக பயணம் மேற்கொள்ள வசதியாக சிலிகுரி நகர ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் இதர முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து ரயில் சேவைகள் உள்ளன.

சல்ஸா நகரத்துக்கு அருகில் சிலிகுரி விமான நிலையம் உள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கொண்டுள்ளது.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X