» »மியான்மரின் வணிக நுழைவாயில்!

மியான்மரின் வணிக நுழைவாயில்!

Written By: Udhaya

மிஜோராமின் அட்சயப் பாத்திரம் என வழங்கப்படும் சம்பை, மியான்மர் மலைகளை மறைக்கும் வண்ணம் நிமிர்ந்து நிற்கும் தவறவிடக் கூடாத சுற்றுலாதளமாகும். பல வண்ண பூக்களும், வண்ணமும், வளங்களும் நிறைந்த இந்த இடத்தில் தேவதைக் கதைகளில் உள்ளதைப் போல பட்டாம்பூச்சிகளும் மிகுந்து காணப்படுகின்றன.

மியான்மர் மலைகளின் நீலநிற தோற்றத்தை அழகுற எடுத்துக்காட்டும் சம்பை, தன்னகத்தே கொண்டுள்ள பழங்கால சின்னங்களாலும், தொல்பொருள் கற்களாலும் தன் பழமையையும், வரலாற்றுப் பெருமையையும் பறைசாற்றியபடி இருக்கிறது.

வர்த்தக நகரம்

வர்த்தக நகரம்


மிஜோராமின் வேகமாக வளரும் ஊர்களில் ஒன்றான சம்பையின் வளர்ச்சிக்கு மியான்மரின் அருகாமையும் ஒரு காரணமாகும். இந்திய மியான்மர் வர்த்தகத்தில் சம்பை முக்கியப் பங்காற்றுகிறது.

Bogman

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

இந்தியாவில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்களில் சம்பை ஒன்றாகும். சமப்பகுதிகள் முழுதும் அழகிய மியான்மர் மலைகளால் சூழப்பட்டுள்ளன. முர்லென் தேசியப் பூங்கா, முரா பூங்கா, ரி தில் ஏரி, தசியாமா செனோ நெய்ஹ்னா ஆகிய இடங்களுக்கு சம்பை புகழ்பெற்று விளங்குகிறது.

Isak Zomi

சம்பையின் கலாச்சார வரலாறு!

சம்பையின் கலாச்சார வரலாறு!

மிசோராம் மக்களின் வரலாறு சம்பையிலேயே துவங்கி சம்பையிலேயே இறுதியுறுவதாக அறியப்படுகிறது. பழங்கால சின்னங்கள், கட்டிடங்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவை இங்கு ஏராளமாக உள்ளன. பல இன பழங்குடிகள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஹ்மார்ஸ், ரால்த்ஸ், சைலோ போன்றவர்கள் இப்பகுதியை சமப்படுத்தி விவசாய பூமி ஆக்கியிருக்கிறார்கள்.

Bogman

சம்பை அடையும் வழி

சம்பை அடையும் வழி


அய்ஜ்வாலில் இருந்து 192கிமீ தொலைவில் உள்ளது சம்பை. சிறப்பான சாலை வசதிகளும், வாடகைப் பேருந்து வசதிகளும் உள்ளது.

சம்பை வானிலை

சம்பை வானிலை


மிதமான வானிலை வருடம் முழுதும் நிலவுகிறது. வெயில் காலங்கள் மிதமாகவும், குளிர்காலங்கள் நடுநிலையான வானிலையுடனும் உள்ளன. மழைக்காலத்தில் மிசோராமின் மற்ற இடங்களைப் போலவே அதிகமான மழை பெய்கிறது.