» »கோவாவில் மலிவு விலையில் விற்க கூடிய ஷாப்பிங் இடங்கள் எவை?

கோவாவில் மலிவு விலையில் விற்க கூடிய ஷாப்பிங் இடங்கள் எவை?

Written By: Balakarthik Balasubramanian

விடுமுறையின் போது விளையாட்டு தனமாகவும் விருப்பமான இடத்திலும் நாட்களை செலவிட வேண்டுமென நாம் நினைக்க, நம் மனதில் தோன்றும் முதல் இடமாக கோவாதான் இருக்கிறது. இங்கே அழகிய இடங்கள் காணப்படுவதோடு அது நம் மனதை ஈர்க்கும் விதமாகவும் அமைந்திருக்க, சுவாரஸ்யமூட்டும் ஷாப்பிங்க் சந்தைகளும் இங்கே பிரசித்திபெற்று விளங்குகிறது. 'என்ன ஷாப்பிங்கா?' என நீங்கள் வியந்து பார்ப்பதை போல் நான் உணர்கிறேன். அட ஆமாம்ங்க, கோவாவில் நாம் அழகிய இடங்களை மட்டும் காண போவதில்லை. பல அழகிய பொருட்களையும் சந்தையில் வாங்கி சிந்தையை சிலிர்க்க செய்யலாம்.

விடுமுறை காலங்களின் சொர்க்கமாக விளங்கும் கோவா, நம் விடுமுறையை கழிக்கவும், சின்ன சின்ன பொருட்களை வாங்கவும் சிறந்த இடமாக விளங்குகிறது. பல இடங்களை சுற்றி திரிந்து நாம் ஓய்வு நேரத்தை செலவிட...அதுவே நம்முடைய ஷாப்பிங்க் நேரமாக இருப்பது வழக்கமாகிறது. எண்ணற்ற வசதிகளை உள்ளடக்கி கொண்டிருக்கும் இந்த கோவாவில் சந்தைகள் நிறைய இருக்க, இங்கே ஒருவருக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் நம்மால் வாங்கவும் முடிகிறது.
நீங்கள் கோவாவில் இருந்தாலோ...அல்லது கோவாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தலோ, இங்கே காணும் சந்தைக்கு மறக்காமல் செல்லுங்களேன். இங்கே நாம் உலாவ, இதனால், திரும்பும்பொழுது நினைவு பொருட்களை மூட்டைக்கட்டி கொண்டும் சுமந்து, நாம் வீட்டிற்கு செல்ல முடிகிறது.

அஞ்சுனா சந்தை:

அஞ்சுனா சந்தை:

இந்த சந்தையானது புதன்கிழமை காணப்பட, இதில் பழையபொருட்கள் விற்கப்படுகிறது. அத்துடன், கோவாவில் பெயர் பெற்ற ஒரு சந்தையாகவும் இச்சந்தை விளங்குகிறது. இந்த சந்தையானது ஹிப்பிகளின் சிந்தனையாக இருக்க, தங்கள் வாழ்வை தக்கவைத்துகொள்ள தங்களுடைய தயாரிப்புகளை விற்று வந்தனர். இந்த நடைமுறை பிரசித்திபெற்றுவிட, இந்த சந்தையானது இன்று நல்ல முறையில் நிறுவப்பட்டு, பலரின் வாழ்க்கை ஆதாரமாகவும் சிறந்து விளங்குகிறது. நாடு முழுவதும் பலரும், பல பொருட்களை எடுத்துகொண்டு இங்கே வர, அவற்றுள் மூ(நா)க்கை துளைக்கும் ருசியான உணவுகளும் அடங்கும்.

Nagarjun Kandukuru

பகா இரவு சந்தை:

பகா இரவு சந்தை:

இந்த கடற்கரையானது சிறிதாக இருக்கும்போதிலும் அழகிய காட்சியால் நம் கண்களை வெகுவாக கவர்கிறது. இங்கே பொருட்களை வாங்க வருபவர்கள், இங்கே தங்க வேண்டுமெனவும் ஆசைகொள்கின்றனர். இந்த இரவு சந்தையானது சனிக்கிழமை இரவு நேரங்களில் காணப்பட, இந்த சந்தையில் நாம் எத்தகைய பொருட்களையும் வாங்க முடியும் என்னும் நம்பிக்கையையும் நம் மனம் கொள்கிறது. அடிப்படை மளிகை சாமான்களில் தொடங்கி, ஆடை, உணவு வரை நம் தேவையை இவ்விடம் பூர்த்தி செய்கிறது. அவை அனைத்தும் நமக்காகவே தயாரித்து விற்பது போல் மனம் துள்ளி குதிக்க, இங்கே கோன் கிராமங்களிலிருந்து வரும் பொருட்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

Sara marlowe

மார்கோவொ சந்தை:

மார்கோவொ சந்தை:

இதனை காந்தி சந்தை என்றும் அழைப்பர். இந்த இடத்தில் பொருட்களானது குவிந்து காணப்பட, எதனை வாங்கலாம் என்பதே நம் மனதில் உற்சாகத்துடன் பல குழப்பத்தை உண்டாக்குகிறது. விலைமதிப்பற்ற பொருளை வாங்குவோருக்கான சொர்க்கமாக இந்த சந்தை காணப்பட, வாசனை பொருட்களிலிருந்து பங்கி நகைகள் என அனைத்து விதமான பொருட்களையும் நம்மால் இங்கே வாங்க முடிகிறது. இந்த சந்தையில் இவ்வாறு எவ்வித குறையுமின்றி பொருட்களை நம்மால் வாங்க முடிவதால், அனைவராலும் பேசப்படும் ஒரு புகழ்மிக்க இடமாகவும் இந்த மார்கோவொ சந்தையானது காணப்படுகிறது.

Klaus Nahr

அர்போராவில் சனிக்கிழமை இரவு காணப்படும் கடைத்தெரு:

அர்போராவில் சனிக்கிழமை இரவு காணப்படும் கடைத்தெரு:

கோவாவில் காணப்படும் சிறந்த சந்தைகளுள் ஒன்றான இச்சந்தையில், உள்ளூர் கைவினைஞர்களின் சிறந்த கைவினைப்பொருட்கள் விற்கப்படுகிறது. இந்த சந்தையானது பார்ப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருப்பினும், நாம் பார்த்த பிறகு சிறந்த சந்தையென சிந்தையில் எண்ணம் கொண்டு சுற்றும் அளவிற்கு பல பொருட்களை கொண்டுள்ளது. இந்த சந்தையை ‘இங்கோ சந்தை' என்றும் அழைப்பர்.

Ipshita B

மேக்கி இரவு கடைத்தெரு:

மேக்கி இரவு கடைத்தெரு:

உணவுக்கு உன்னதமானதோர் சந்தையாக இந்த மேக்கி இரவு சந்தை இருக்க, இங்கே கைவினை பொருட்கள், நினைவு பரிசுகள், பரிசுகள், என பல பொருட்களை நம்மால் வாங்க முடிகிறது. இங்கே உள்ளூர் இசைக் கலைஞர்களால் வாசிக்கப்படும் இசையை கேட்கவும் முடிகிறது. இங்கே நாம் ஓர் அல்லது இரண்டு பொருட்களை வாங்கி திரும்பிவிடலாம் என நினைத்தாலும்... மனமற்று மற்ற பொருட்களை தேடியும் கண்களானது மெல்ல செல்கிறது. இந்த சந்தை, பகா நதியின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது.

மாப்புஷா சந்தை:

மாப்புஷா சந்தை:

வண்ணங்களின் நிதர்சனத்தையும், பல வகைகளையும் பிரதிபலித்து கொண்டிருக்கும் ஒரு சந்தையாக கோவாவில் இந்த மாப்புஷா சந்தை காணப்படுகிறது. இங்கே அனைத்து விதமான பொருட்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக, பெரிய அளவில் வாசனை பொருட்களானது இங்கே காணப்படுவது நம்மை வியப்பில் ஆழ்த்தி சந்தையில் வாங்கவும் தூண்டுகிறது. இந்த நறுமண பொருட்களை தவிர்த்து, கைவினை பொருட்கள், மட்பாண்டங்கள், ஊறுகாய்கள் ஆகியவற்றையும் நம்மால் வாங்க முடிகிறது. இங்கே காணும் பொருட்களை கண்டுபிடித்து வாங்க முதலில் நாம் இந்த இடத்தை தேட வேண்டும். அதன்பின் இங்கே கிடைக்கும் சிறந்த தயாரிப்புகளை கைகளில் வாங்கி கொண்டு மன நிம்மதியுடன் திரும்பலாம்.

Extempore

கலன்குட்டே சந்தை:

கலன்குட்டே சந்தை:


இந்த பெயரில் கடற்கரை மட்டும் காணாமல் இங்கே சந்தையும் காணப்படுகிறது. பொருட்கள் மீது அளவற்ற பிரியம் கொண்டு அதனை வாங்க ஆசை கொள்வோருக்கு இந்த சந்தையானது நிதர்சன சொர்க்கமாக காணப்படுகிறது. இந்த சந்தையில் ஆடை என தொடங்கி, அணிகலன், நினைவு பரிசு என சகல பொருட்களையும் நம்மால் இங்கே வாங்க முடிகிறது. அதேபோல் தோல், உலோகம், களிமண் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் என அனைத்து விதமான பொருளையும் நம்மால் இங்கே வாங்க முடிகிறது. கோவாவில் காணப்படும் கூட்டம் மிகுந்த கடற்கரைகளுள் ஒன்று தான் இந்த கலன்குட்டே கடற்கரையாகும். அதனால், இச்சந்தையில் ப்ரெஷ்ஷான, புதிய பொருட்களை நாம்மால் இங்கே வாங்க முடிகிறது.

Pixelmattic WordPress Agency

Read more about: travel, goa