Search
  • Follow NativePlanet
Share
» »மாதவிடாயினால் மாதத்தில் மூன்று நாட்கள் கடவுளே கோயிலுக்கு வெளியில் வைக்கப்படும் இடம் எது தெரியுமா?

மாதவிடாயினால் மாதத்தில் மூன்று நாட்கள் கடவுளே கோயிலுக்கு வெளியில் வைக்கப்படும் இடம் எது தெரியுமா?

By Staff

அந்தக்காலத்தில் இன்றிருப்பது போல நேப்கின்கள் இல்லாத காரணத்தினால் மாதவிடாய் காலத்தின் போது கோயில்களுக்கு வர அனுமதியில்லாமலும், வீட்டிலும் தனியாக ஒதுக்கி வைப்பது, சமைக்க கூடாது என்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டன. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்று மாதவிடாய் நாட்களிலும் சாதாரண நாட்களில் இயங்குவது போலவே இருக்க முடிகிறது.

இருந்தும் இன்றும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் நிலையே பரவலாக உள்ளது. அதை எதிர்த்து பெண்ணிய அமைப்புகள் இப்போது வலுவாக குரலெழுப்ப துவங்கியிருக்கின்றன. குறிப்பாக மாதவிடாய் நாட்களின் போது பெண்களை கோயில்களுக்குள் அனுமதிக்காமல் இருக்கும் மூடநம்பிக்கை வழக்கம் கூடிய விரைவில் தகர்க்கப்படலாம்.

இப்படியெல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க இன்றும் கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் மாதத்தில் மூன்று நாட்கள் அக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கே மாதவிடாய் என்று சொல்லி கோயிலுக்கு வெளியே வைக்கப்படும் வழக்கம் தொடர்கிறது. அந்த கோயிலைப்பற்றி மேலும் அறிந்துகொள்வோம் வாருங்கள்.

செங்கனூர் மகாதேவா கோயில் :

செங்கனூர் மகாதேவா கோயில் :

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயில் தான்செங்கனூர் மகாதேவா கோயில் ஆகும்.

எட்டுமானூர் மகாதேவர் கோயில், வைகொம் கோயில், வடக்குநாதன் கோயில் போன்ற கேரளத்தில் இருக்கும் பிரதான சிவன் கோயில்களுள் இந்தசெங்கனூர் மகாதேவா கோயிலும் ஒன்றாகும்.

கடவுளர்கள்:

கடவுளர்கள்:

இக்கோயிலில் சிவ பெருமான் மகாதேவராக லிங்க வடிவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சிவபெருமானின் சந்நிதிக்கு நேர் பின்புறம் மேற்கு நோக்கியபடி உமையாள் பார்வதி தேவி அருள்பாலிக்கிறார்.

இவர்களோடு சாஸ்தா, நீலக்ரீவன் மற்றும் கணபதி ஆகியோரது சந்நிதிகளும் இக்கோயிலில் இருக்கின்றன.

மாதவிடாய் விழா:

மாதவிடாய் விழா:

உலகில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கே மாதவிடாய் விழா என்ற ஒன்று நடக்கிறது. செங்கனூர் மகாதேவர் கோயிலில் வீற்றிருக்கும் பார்வதி தேவிக்கு பெண்களுக்கு ஏற்ப்படுவது போலவே மாதவிடாய் ஏற்ப்படுவதாகவும், அந்நாட்களில் பார்வதி தேவியின் வஸ்திரத்தில் ரத்தக்கறை தென்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

மாதவிடாய் விழா:

மாதவிடாய் விழா:

ஒவ்வொரு மூன்று-நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பார்வதி தேவிக்கு மாதவிடாய் ஏற்படுவதாகவும், அப்படி பார்வதி தேவியின் வஸ்திரத்தில் மாதவிடாய்க்கான அறிகுறி தெரிந்ததும் 'தாழமண்' மற்றும் 'வங்கிபுழா' ஆகிய குடும்பங்களை சேர்ந்த மூத்த பெண்கள் வந்து அம்மனுக்கு மாதவிடாய் ஏற்பட்டதை உறுதிபடுத்துகின்றனர்.

மாதவிடாய் விழா:

மாதவிடாய் விழா:

அதன் பிறகு மூன்று நாட்களுக்கு அம்மனின் சந்நிதி மூடப்படுகிறது. அப்போது இக்கோயிலில் வேறொரு இடத்தில் பார்வதி தேவியின் படத்தை வைத்து பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாதவிடாய் விழா:

மாதவிடாய் விழா:

பின்னர் மூன்று நாள் மாதவிடாய் காலம் முடிந்ததும் நான்காம் நாள் அருகில் உள்ள பம்பை ஆற்றுக்கு பார்வதிதேவியின் சிலை கொண்டு செல்லப்பட்டு 'ஆராட்டு' என்னும் தூய்மைப்படுத்துதல் நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆராட்டு நிகழ்வு தான் 'திருப்பூதர ஆராட்டு' என்கிற பெயரில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

மாதவிடாய் விழா:

மாதவிடாய் விழா:

ஆற்றில் ஆராட்டு முடிந்தபிறகு பார்வதி தேவியின் சிலை யானை மீது வைக்கப்பட்டு கோயில் வாயிலை அடைகிறது. அங்கே மகாதேவர் சிவபெருமான் யானை மீது வீற்றிருந்து பார்வதி தேவியை கோயிலுக்குள் வரவேற்கிறார்.

பின்னர் மகாதேவரும், பார்வதி தேவியும் ஒன்றாக யானை மீது அமர்ந்தபடி கோயிலை மூன்று முறை வலம் வந்தபின் அவரவர் சந்நிதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன்ர்.

மாதவிடாய் விழா:

மாதவிடாய் விழா:

பொதுவாக இவ்விழா மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் நடக்கும் ஊர்வலத்தில் பெண்கள் பெரும் திரளாக கைகளில் 'தளப்போளி' என்னும் தீபம் ஏந்தி கலந்துகொள்கின்றனர்.

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

செங்கனூர் மகாதேவா கோயில் ஆலப்புழாவிற்கு கிழக்கே 'திருவல்லா-பந்தளம்' சாலையில் அமைந்திருக்கிறது. செங்கனூர் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது.

கேரள மாநிலத்தில் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து 117 கி.மீ தொலைவில் உள்ளது.

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து மகாதேவரையும், பார்வதி தேவியையும் மனதுருகி வேண்டினால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இக்கோயில் அமைந்திருக்கும் ஆலப்புழா மாவட்டத்தை பற்றிய பயண தகவல்களை தமிழ்பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+