Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை நிறுவனம் தனது 1,000 ஊழியர்களை இலவசமாக வெளிநாட்டு சுற்றுலா அனுப்பி அழகு பார்த்துள்ளது!

சென்னை நிறுவனம் தனது 1,000 ஊழியர்களை இலவசமாக வெளிநாட்டு சுற்றுலா அனுப்பி அழகு பார்த்துள்ளது!

ஆமாங்க! சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தனது அலுவலத்தில் வேலை பார்க்கும் 1,000 ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து, இலவசமாக ஐரோப்பா சுற்றுலா அனுப்பி அழகு பார்த்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? சென்னையை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிரான்ட் தனது 1,000 ஊழியர்களுக்கு அனைத்து செலவையும் செலுத்தி ஸ்பெயினுக்கு பயணம் செய்ய வாய்ப்பளித்துள்ளது. ஊழியர்களின் கடின உழைப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமான இந்த பரிசை அளித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது!

Spain

செய்யும் தொழிலே தெய்வம் என கருதி வேலை செய்யும் ஊழியர்கள்

நாம் அனைவருமே நாம் செய்யும் வேலையில் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தான் தினமும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் நாம் நமது தனிப்பட்ட வேலைகளையும் கூட ஒதுக்கி வைத்து விட்ட, செய்யும் தொழிலே தெய்வம் என கருதி ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப வெகுமதி கிடைக்கும் போது நமக்கு வரும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆம், இங்கு அப்படித்தான் தங்கள் ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கவும், அவர்களின் சாதனைகளுக்கு வெகுமதி அளிக்கவும், மேலும் கடினமாக உழைக்க அவர்களை ஊக்குவிக்கவும் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு ஒரு பரிசு அளித்துள்ளது.

Spain Tour

இன்ப அதிர்ச்சி கொடுத்த காசாகிரான்ட்

சென்னையை தளமாகக் கொண்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், கடந்த ஆண்டு நிதி விற்பனை இலக்குகளை எட்டுவதற்கு அதன் ஊழியர்களின் பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. 1,000 ஊழியர்களுக்கு பார்சிலோனாவிற்கு சுற்றுலா அனுப்பியுள்ளது அத்துடன் அனைத்து செலவினங்களுடனும் விடுமுறையை பரிசளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பிராபிட்-ஷேர் பொனான்சா' ஊழியர் பாராட்டுத் திட்டம்

ரியல் எஸ்டேட் பிராண்டின் 'பிராபிட்-ஷேர் பொனான்சா' ஊழியர் பாராட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வார காலப் பயணம் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அணுகுமுறையானது, காசாகிராண்டின் இலக்குகளை அடைவதற்கான அவர்களின் மகத்தான முயற்சிகளுக்காக தனிநபர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Spain Tour

அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் குழுப்பணி உணர்வுக்கு பாராட்டு

இந்த நிறுவனத்தின் 'பிராபிட்-ஷேர் பொனான்சா' திட்டம், ஊழியர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் குழுப்பணி உணர்வை பாராட்டி முந்தைய ஆண்டிற்கான நிதி இலக்குகளை அடைவதற்கான ஒரு அற்புதமான முயற்சியாகும். அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பைப் பகிர்ந்துகொண்டு, நிறுவனம் அனைத்து துறைகளிலும் உள்ள ஊழியர்களை மதிப்பதில் ஆழமான வேரூன்றிய உறுதிப்பாட்டின் முக்கியத்துவத்தைக் கூறியது.

கடின உழைப்புக்கு கிடைக்கும் வெகுமதி

2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னையை தளமாகக் கொண்ட நிறுவனம் ஊழியர்களின் முயற்சிகள் மற்றும் முக்கிய பங்களிப்புகளை தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. இது 'பிராபிட்-ஷேர் பொனான்சா' பணியாளர் பாராட்டுத் திட்டத்துடன் பணியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து செலவினங்களும் செலுத்தப்படும், ஸ்பெயினுக்கு ஒரு வார காலப் பயணம் சிறந்த ஊழியர்களுக்கான ஒரு சிறந்த பரிசாக இருக்கும் என்று கருதி அவர்களை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளது.

பலமுறை தந்து ஊழியர்களுக்கு சர்வதேச சுற்றுலா அனுப்பியுள்ள காசாகிரான்ட்

காசாகிரான்ட் 2013 இல் செயல்படத் தொடங்கியது மற்றும் நிறுவனம் தனது முதல் வருடத்தில் பணியாளர்களுக்கான அதன் பெரும் வெகுமதி திட்டத்தைத் தொடங்கியது. இந்த முயற்சி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. கடந்த ஆண்டு இலக்குகளை அடைவதற்காக ஸ்பெயினுக்கு பயணங்களை அறிவிப்பதற்கு முன்பு, சென்னை நிறுவனம் பல சர்வதேச விடுமுறை நாட்களை அதன் ஊழியர்களுக்கு பரிசளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1,000 ஊழியர்களை ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பி வைத்த நிறுவனம்

ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, லண்டன், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற பிரமிக்கவைக்ககூடிய இடங்களுக்கு காசாகிரான்ட் ஊழியர்கள் இதுவரை பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆஸ்திரேலியாவை ஆய்வு செய்தனர். 2022 இல், அவர்கள் சுவிட்சர்லாந்திற்குச் சென்றனர். 2021 இல் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, குழு அபுதாபி மற்றும் துபாய்க்கு பறந்தது. 2024 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 ஊழியர்கள் தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன? நீங்கள் உங்கள் நிறுவனத்திடம் இருந்து பெற்ற மிகப்பெரிய பரிசு என்ன என்று கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+