Search
  • Follow NativePlanet
Share
» » அழகிய சென்னையின் ஐந்து அற்புதமான கோயில்கள்

அழகிய சென்னையின் ஐந்து அற்புதமான கோயில்கள்

சென்னை, இதை ஒரு நகரம் என்று சொல்வதை விட ஒரு கூட்டு ஆன்மாக்களின் பெருமையான அடையாளம் எனலாம். சோழமண்டல கடற்கரையில் அமைந்திருக்கும் இந்நகரம் தமிழ் நாட்டின் கலாசார மற்றும் வர்த்தகத்துறையின் முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. இந்தியாவின் நான்கு பெரும் நகரங்களில் ஒன்றான இது, நிகழ் காலத்தின் நவீனத்தன்மையினையும், பழம்பெருமை வாய்ந்த தன் கலாச்சார அடையாளத்தினையும் தன்னுள் கொண்டுள்ளதால் சென்னை தென் இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தனை பெருமை வாய்ந்த சென்னையில் கலைநயம் வாய்ந்த கோயில்களும் ஏராளமாக உள்ளன. வாருங்கள் சென்னையின் ஐந்து அழகிய கோயில்களுக்கு சென்று வருவோம்.

இருவழி உள்நாட்டு விமானங்களில் 1000 ரூபாய் தள்ளுபடி பெற கிளிக்கவும்.


பார்த்தசாரதி கோயில்:

புகைப்படம்: Roberta Romero

8ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு பின்னர் சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களால் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது இக்கோயில். கிருஷ்ண பெருமானை மூலவராக கொண்டுள்ள இக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பட்ட வைணவ திவ்ய ஸ்தலங்களுள் ஒன்றாகும். மகாபாரத யுத்தத்தில் பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டியாக (சாரதி) இருந்த கிருஷ்ண பகவானின் கோயிலான இதனுள் மகா விஷ்ணுவின் அவதாரங்களான ராமர், நரசிம்மர் ஆகிய கடவுள்களின் சந்நிதிகளும் உள்ளன. சித்திரை மாதம் நடக்கும் பிரம்மோத்சவம் இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகும். இக்கோயில் குளத்தின் பெயர் 'திரு அல்லி கேணி' என்று இருந்ததாகவும் அதுவே மறுவி இன்று திருவல்லிக்கேணி அல்லது 'Tripilicane' என பயன்படுத்தப்படுகிறது. சென்னையின் மிகப்பழமையான கோயில்களில் ஒன்றான இது நிச்சயம் சென்று வர வேண்டிய ஓரிடமாகும்.

கபாலீஸ்வரர் கோயில் :

புகைப்படம்: Nagesh Jayaraman

மயிலாப்பூரில் அமைந்திருக்கும் கபாலீஸ்வரர் கோயில் பற்றிய குறிப்புகள் 7ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட தேவாரத்தில் கிடைக்கப்பெறுகின்றன. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், பார்வதி தேவி கற்பகாம்பாளாக வீற்றிருகின்றனர். இக்கோயில் பல்லவர்களால் 7ஆம் நூற்றாண்டில் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டதாகவும் ஆனால் போர்த்துகிசியர்களால் அக்கோயில் அழிக்கப்பட்டதால் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இக்கோயில் திராவிட கட்டிடக்கலையின் சிறப்பான அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

அஷ்டலட்சுமி கோயில் :

புகைப்படம்: Sudharsun.j

செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியின் எட்டு(அஷ்ட) வடிவங்களை கொண்டுள்ள இக்கோயில் சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது. மஹாலஷ்மிக்கு என்று தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே கோயிலான இதன் நுழைவு வாயில் மஹாலக்ஷ்மி கடலில் இருந்து அவதரித்ததாக நம்பப்படுவதால் கடலினை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ள இக்கோயிலில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் இந்த லட்சுமி அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமான ஐதீகமாக பக்தர்களால கருதப்படுகிறது.

காளிகாம்பாள் கோயில் :

 அழகிய சென்னையின் ஐந்து அற்புதமான கோயில்கள்

புகைப்படம்: Rasnaboy

சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான பாரிஸ் கார்னரில் உள்ள தம்பு செட்டி தெருவில் அமைந்திருக்கும் இக்கோயிலில் காளிகாம்பாள் அம்மன் முதற்கடவுளாக வீற்றிருக்கிறார். இக்கோயில் ஸ்தல புராணப்படி இங்கு அம்மனை முதலில் மிகவும் உக்கிரமான காமாட்சி ரூபத்தில் வழிபடபட்டதாகவும் ஆனால் அந்த ரூபத்தின் உக்கிரம் மிக அதிகமாக இருந்ததால் சாந்த ஸ்வரூபிணியான காளிகாம்பாள் ரூபத்தை வழிபட துவங்கியிருக்கின்றனர் . தற்போதிருக்கும் கோயிலுக்கு முன்னர் ஒரு கோயில் இருந்ததாகவும் அது போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்டதால் 1640ஆம் ஆண்டு தற்போதிருக்கும் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.


நவகிரஹ கோயில்கள்:

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் இக்கோயில்கள் சென்னையின் புற நகர் பகுதியில் அமைந்திருக்கின்றன. நவகிரஹங்கலயும் வழிபட கும்பகோணம் வரை செல்ல வேண்டி இருந்ததால் இக்கோயில்கள் சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியை சுற்றி கட்டப்பட்டுள்ளன. சோழர் கட்டிடக்கலையின் அற்புதங்களை இக்கோயில்கள் தாங்கி நின்றலும் சில கோயில்கள் முறையான பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகின்றன.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+