Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை - கபாலிகளின் நகரத்திற்கு ஒரு காலப்பயணம் !!

சென்னை - கபாலிகளின் நகரத்திற்கு ஒரு காலப்பயணம் !!

By Naveen

சென்னையின் இன்றைய மக்கள் தொகை தோராயமாக ஒரு கோடி. படிப்புக்காக, வேலைக்காக என தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் கடந்த 30ஆண்டுகளில் வந்து குடியேறிவர்கள் தான் இன்று சென்னையில் இருக்கும் முக்கால்வாசி பேர். இப்படி பலரும் வந்து குடியேற சென்னையின் மண்ணின் மைந்தர்கள் சென்னைக்கு வெளியே தூக்கி வீசப்பட்டது தான் காலக்கொடுமை.

உண்மையில் சென்னை கபாலிகளின் நகரம். தமிழ் சினிமாவின் உபயத்தால் கபாலி என்ற சித்திரமே கொலைகாரன், பொறுக்கி, கருப்பாக பயங்கரமான உடலுடன் இருப்பவன் என்ற பிம்பமாகவே படிந்துவிட்டது. மெட்ராஸ் படத்தில் சென்னையின் ஆன்மாவை அத்தனை அழகோடு படம்பிடித்த இயக்குனர் ரஞ்சித் ரஜினி நடிக்கும் தன்னுடைய அடுத்த படத்திற்கு 'கபாலி' என்று பெயர் வைத்ததே பெரிய விஷயம் தான்.

இந்த கபாலிகள் தான் இன்றிருக்கும் சென்னைக்கு அஸ்திவாரமிட்டவர்கள். அவர்கள் வாழ்ந்த சென்னைக்கு புகைப்படங்கள் வழியே ஒரு காலப்பயணம் போகலாம் வாருங்கள்.

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

1639ஆம் ஆண்டு இன்றைய சென்னையின் சில பகுதிகளை ஆண்டுவந்த சென்னப்ப நாயுடு என்பவரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக பிரான்ஸ்சிஸ் டே என்பவர்கொஞ்சம் கடற்கரையோர நிலங்களை வாங்கினார்.

இதிலிருந்து தான் சென்னையின் நவீன வரலாறு துவங்குகிறது எனலாம்.

1880ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகைப்படம்.

Nicholas and Company

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

உண்மையில் சென்னைக்கு தமிழகத்தின் மற்ற பல நகரங்களை போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட வரலாறு இருக்கிறது. சென்னையில் இன்று பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மயிலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோயில் சென்னையின் பூர்வ குடிகளின் குல தெய்வமாக இருந்திருக்கிறது.

படம்: மதராஸ் மாகாணத்தின் பழைய வரைபடம்

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

பல்லவ மன்னர்களால் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கபாலீஸ்வரர் கோயில் இன்று மேல்தட்டு மக்கள் சென்று வழிபாடும் கோயிலாகவே கருதப்படுகிறது. போர்த்துகீசியர்கள் காலம் தொடங்கி இன்றுவரை கபாலிகள் சென்னைக்கு வெளியே விரட்டப்பட்டு கொண்டே இருக்கின்றனர் என்பது தான் கசப்பான உண்மை.

படம்: மெரீனா கடற்கரை

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

கிழக்கிந்திய கம்பெனியால் 1644ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை இன்று சென்னையில் இருக்கும் மிகப்பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும்.

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

புனித ஜார்ஜ் கோட்டையில் கூடியிருக்கும் பழைய சென்னை மாகாண சபை கூட்டம். அன்றைய சட்டசபைக்கும் இன்றைய சட்டசபைக்கும் எத்தனை மாற்றங்கள்.

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

சென்னை பாரிஸ் கார்னரில் ராஜாஜி சாலையில் அமைந்திருக்கும் பொதுத்தபால் நிலையத்தின் பழைய புகைப்படம்.

இந்த கட்டிடம் 1884ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது.

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திருவல்லிக்கேணி பைகிராப்ட் சாலையின் புகைப்படம்.

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

1891ஆம் ஆண்டு கட்டப்பட்ட சென்னை சட்டக்கல்லூரி.

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

சென்னை கிரிக்கெட் கிளப் 1846ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இது இந்தியாவில் இருக்கும் இரண்டாவது மிகப்பழமையான கிரிக்கெட் கிளப் ஆகும்.

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

எக்மோர் ரயில் நிலையம் !!

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

ஆற்காடு நவாப்பின் வசிப்பிடமாக திகழ்ந்த சேப்பாக்கம் மாளிகை!!

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

1851ஆம் துவங்கப்பட்ட மெட்ராஸ் அருங்காட்சியகம் தான் இந்தியாவில் இருக்கும் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் ஆகும்.

இது எக்மோரில் அமைந்திருக்கிறது.

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகளால் கட்டப்பட்ட சாந்தோம் சர்ச் !!

மதராசப்பட்டினம்:

மதராசப்பட்டினம்:

சென்னை நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

நம்ம சென்னை எவ்வளவு அழகானது தெரியுமா?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+