Search
  • Follow NativePlanet
Share
» »அயல்நாடுகளின் அழகை உள் நாட்டில் காணுங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா:

அயல்நாடுகளின் அழகை உள் நாட்டில் காணுங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா:

ஓய்வின்றி இயந்திரம் போல உழைக்கும் நகர வாழ்க்கையில், வார இறுதியில் ஒரு நாளாவது சுற்றுலா சென்று, அதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, புத்துணர்வு பெறுவது நல்லது. இதனால் தினம் தோறும் நாம் செய்யும் பணிகள் சிற

By Gowtham Dhavamani

ஓய்வின்றி இயந்திரம் போல உழைக்கும் நகர வாழ்க்கையில், வார இறுதியில் ஒரு நாளாவது சுற்றுலா சென்று, அதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, புத்துணர்வு பெறுவது நல்லது. இதனால் தினம் தோறும் நாம் செய்யும் பணிகள் சிறப்பாக அமைகின்றன. இந்த வகையில் சென்னை நகர வாசிகளும், சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் அனுபவிக்க வேண்டிய இடம் புதுச்சேரி. சென்னைக்கு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அழகிய கடற்கரை நகரமான புதுச்சேரி 18 ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டு கட்டிட கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டதாகும்.

1954 ம் ஆண்டு பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து இந்த நகரம் விடுதலை பெற்றாலும், இன்றும் அதே பிரான்ஸ் நாட்டு வரலாற்றுப் பாரம்பரியம், கலையம்சங்களுடன் கூடிய இந்த நகரத்தை சுற்றுலாப் பயணிகள் அவசியம் காண வேண்டும். இங்குள்ள அமைதியான கடற்கரை மற்றும் அழகிய வடிவமைப்புடன் திகழும் பிரான்ஸ் நாட்டு கட்டிடங்களைக் காண்பதற்காகவே அதிக அளவில் இங்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இந்தியாவில் உள்ள கடற்கரை நகரங்களில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிரான்ஸ் நாட்டு சமையல் வகைகளிலிருந்து உள்ளூர் உணவு வகைகள் வரை இங்கு தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கிறது. சென்னை நகரவாசிகளே! வார இறுதி நாட்களை நீங்கள் இனிமையாக கழிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே இந்த சிறப்புக் கட்டுரை.

 புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல உகந்த காலம்:

புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல உகந்த காலம்:

புதுச்சேரி கடலோர நகரமாக இருப்பதால், வெப்பமண்டல ஈரப்பதம் மற்றும் வறண்ட காலநிலை நிலவுகிறது. எனவே மிதமான மற்றும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில் பயணத்தை அனுபவிக்க நவம்பர் முதல் பிப்ரவரி வரை உகந்த காலங்களாகும். நீங்கள் புதுச்சேரியை முழுமையாக சுற்றிப் பார்க்க விரும்பினால் கோடைகாலத்தை தவிர்ப்பது நல்லது.

PC- Nishanth Jois

 சென்னையிலிருந்து புதுச்சேரியை அடையும் வழிகள்:

சென்னையிலிருந்து புதுச்சேரியை அடையும் வழிகள்:

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்வது எப்படி? என்பது குறித்து விரிவான வரைபடத்தை இங்கே பாருங்கள். நீங்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்திருந்தால், விமான நிலையத்திலிருந்தபடியே வாடகை கார் மூலம் நேரடியாக புதுச்சேரியை அடையலாம். அல்லது விமான நிலையத்திலிருந்து, கார் மூலம் சென்னை நகரத்தை அடைந்து, அங்கிருந்து பஸ் மூலமாகவும் புதுச்சேரிக்கு செல்லலாம். சென்னை விமான நிலையத்திலிருந்து, புதுச்சேரி 149 கி.மீ தூரத்தில் உள்ளது. புதுச்சேரி விமான நிலையம் பெங்களூர் மற்றும் ஐதராபாத் நகரங்களை இணைப்பதாகவே உள்ளது.

ரயில் மூலம்:

சென்னையிலிருந்து, புதுச்சேரிக்கு செல்லவும், அங்கிருந்து மற்ற முக்கிய நகரங்களுக்கு செல்லவும் அதிக அளவில் ரயில் இணைப்பு வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் செல்ல 4 மணி நேரம் 30 நிமிடங்களாகிறது. இரண்டு நகரங்களுக்கிடையே நேரடி ரயில் வசதிகள் உள்ளன.

சாலை வழி:

சாலை வழியாக சென்னையிலிருந்து, புதுச்சேரி 157 கி.மீ தொலைவில் உள்ளது. நீங்கள் பஸ், வாடகை கார் அல்லது சொந்த வாகனத்தின் மூலம் சென்றாலும் கீழ்க்கண்ட வழித்தடங்களின் மூலம் புதுச்சேரியை அடையலாம்.

வழித் தடம்- 1 ; சென்னை - கோவளம் - மகாபலிபுரம் - புதுச்சேரி

வழித் தடம்- 2: சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - புதுச்சேரி

இதில் முதல் வழித்தடமான, கிழக்கு கடற்கரை வழியாகவே செல்வது எளிதாகவும், விரைவாகவும் உள்ளதால் பரிந்துரைக்கப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து, சென்னைக்குத் திரும்பும் வழியில் கீழ்கண்ட மகிழ்ச்சியான இடங்களில் நீங்கள் இளைப்பாறலாம்.

 1. கோவளம் பீச்:

1. கோவளம் பீச்:

சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள கோவளம் ஒரு துறைமுக நகரமாக கர்நாடக நவாப்புகளால் உருவாக்கப்பட்டது. தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு ஜில்லென்ற காற்று வாங்கும் சொகுசுக் கடற்கரையாகவும், சுற்றுலாத் தளமாகவும் மாறிவிட்டது. நீங்கள் சுத்தமான சுற்றுச் சூழலையும், சுத்தமான காற்றையும் அனுபவிக்க விரும்பினால் கோவளம் கடற்கரைக்கு வரலாம்.

PC- Ronald Tagra

 2) மகாபலிபுரம்:

2) மகாபலிபுரம்:

உலக அளவில் பாரம்பரிய சுற்றுலாத்தலம் என UNESCO வால் அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் பல்லவர் காலத்தில் மிகப்பெரிய துறைமுகமாக இருந்துள்ளது. தற்போது தொன்மை வாய்ந்த கடலோரக் கோவில்களும், கல்லில் குடையப்பட்ட கோவில்களும், சிற்பங்களும் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருவதால் சிறந்த ஆன்மீகநகரமாகவும்,, அதிக அளவில் பயணிகளை ஈர்க்கும் நாட்டின் சிறந்த சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ரதக் கோவில், குகைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

புதுச்சேரி :

புதுச்சேரியில் உள்ள அழகான, அமைதியான கடற்கரை மற்றும் நாக்கில் எச்சில் சுரக்க வைக்கும் பிரன்ச் மற்றும் உள்ளூர் உணவுகள் சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் அம்சங்களாகும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல இடங்கள் புதுச்சேரியில் இருந்தாலும், கீழ் கண்ட இடங்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களாகும்.

PC- Raj

1) ப்ரோம்னடே பீச் :

1) ப்ரோம்னடே பீச் :

இந்த அழகிய, அமைதியான கடற்கரையில் அதிகாலையிலும், பகல் நேரங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியாக குளிப்பதைக் காணலாம். இந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு இந்த கடற்கரை ஒரு இரண்டாவது வீடாகும். கடற்கரை ஓரமாக எப்போதும் பலர் ஜாகிங் மற்றும் வாக்கிங் சென்று கொண்டிருப்பார்கள். பலர் குடும்பத்துடன் வந்து கடற்கரை மணலில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு வந்துள்ள சிற்றுண்டியை நடுவில் வைத்து கும்பல், கும்பலாக சாப்பிட்டுக் கொண்டு, சுற்றுச்சூழலை ரசித்துக் கொண்டிருப்பார்கள். பாதுகாப்பான கடற்கரையாகவும் இது உள்ளது.

PC- Sarath Kuchi

 2) பாரடைஸ் பீச்:

2) பாரடைஸ் பீச்:

கடற்கரை விரும்பிகளுக்கு ஒரு சொர்க்கம் போல திகழும் பீச் பாரடைஸ் பீச் ஆகும். இந்த பீச் மிகவும் சுத்தமாகவும், அற்புதமான காட்சிகளை காணும் இடமாகவும் திகழ்கிறது. இங்கு மனிதர்களின் நடமாட்டம் குறைவு என்றாலும், சில்லென்ற காற்றின் மத்தியில் தனிமையையும், அமைதியையையும் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும்.

PC- Ashwin Kumar

3) ஆரோவில் :

3) ஆரோவில் :

உலக அமைதியை வலியுறுத்தும் ஆரோவில் நகரத்தில், பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைந்த மனித கலாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது. தனிமனித அமைதியை விரும்பும் ஓய்வு பெற்ற பல வெளி நாட்டவர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அழகிய இயற்க்கை சூழலும், அமைதியும் நிலவும் இந்த நகரத்தில் புத்துணர்வு பெற்ற முதியோர் தம்பதிகள் பலரைக் காணலாம். இங்குள்ள மாத்ரி மந்திர் எனப்படும் மிகப்பெரிய தியான மண்டபம் சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு ஆன்மீக இடமாகும்.

PC- okramesh

4) பிரெஞ்சு வடிவமைப்பு

4) பிரெஞ்சு வடிவமைப்பு

புதுச்சேரி நகரத்தில் உள்ள பல்வேறு பிரெஞ்சு வடிவமைப்பு மற்றும் கலையம்சங்களுடன் காணப்படும் அழகிய கட்டிடங்களை புகைப்படம் எடுக்காவிட்டால் அங்கு சுற்றுலா சென்று வந்ததற்கான எந்த அர்த்தமும் இருக்காது. சில இடங்களில் தமிழ் - பிரான்ஸ் வடிவமைப்புகள் இணைந்த ஸ்டைலுடன் கட்டப்பட்ட கட்டிடங்களும் கண்களை கவரும் அம்சங்களாகும். பிரன்ச் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட நகர வீதிகளும், டூம்களும், நகரின் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள வரவேற்பு வளைவுகளும் கவரும் வகையில் உள்ளது. மேலும் இங்குள்ள தாவரயியல் பூங்கா, ராஜ் நிவாஸ், பாண்டிச்சேரி மியூசியம், அரவிந்தர் ஆசிரமம் ஆகியவை சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் இடங்களாகும்..

PC- Richard Mortel

Read more about: travel trip chennai puducherry
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X