» »சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி 1000 ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் சோழ கோயில்! வெளியில் தெரியாத மர்மங்கள்

சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி 1000 ஆண்டுகள் கம்பீரமாக நிற்கும் சோழ கோயில்! வெளியில் தெரியாத மர்மங்கள்

Written By: Udhaya

சோழ வம்ச ஆட்சியின் பொற்காலம் என்றால் அது அருள்மொழிவர்மனின் அதாவது ராஜ ராஜ சோழனின் ஆட்சிதான் என்று வரலாறு கூறுகிறது. கிபி 985 முதல் கிபி 1012ம் ஆண்டு வரை ஆட்சி செய்த இவனுக்கு வானதி என்னும் மனைவி இருந்தாள். ஆட்சிமுறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம் இலக்கியம் என பல்வேறு துறைகளிலும் இவனது ஆட்சியில் எழுச்சிகளைக் கண்டது. இவன் மனைவியர்களில் ஒருவரான வானதி எனப்படும் திருபுவன மாதேவியின் ஊர் எங்க இருக்கு தெரியுமா? அது தற்போது எப்படி இருக்கு தெரியுமா? வாங்க பாக்கலாம்.

இந்த ஊரில்தான் அமைந்துள்ளது அந்த அதிசய கோயில்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலி மலையை அடுத்து அமைந்துள்ளது இந்த கொடும்பாளூர். இது புதுக்கோட்டையிலிருந்து 36கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 42கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது கொடும்பை நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
R.K.Lakshmi

மூவர் கோயில்

மூவர் கோயில்


சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் இதன் பெயர் சற்றும் மருவாமல் இருக்கும் கொடும்பாளூரில் அமைந்துள்ளது இந்த மூவர் கோயில். இது பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது.

சோழர்களில் இரண்டாம் சுந்தர சோழ பராந்தரன் மற்றும் இரண்டாம் ஆதித்த கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. இதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

Kasiarunachalam

கட்டியது யார்?

கட்டியது யார்?

கட்டிடக் கலையில் சிறந்தவர்களான சோழர்களுடன் நட்பு கொண்டிருந்து கொடும்பாளூரை ஆண்ட வேளிர் குல அரசனான பூதிவிக்கிரமகேசரி என்பவன்தான் இந்த கோயிலைக் கட்டியுள்ளான். இதில் நடுக்கோயில் தன் பெயராலும், மற்ற இரு கோயில்களை தன் மனைவியர் அனுபமா, கற்றளி என்ற இருவரின் பெயராலும் கட்டியுள்ளான். மனைவியர்களின் ஆலோசனைப் படியே இந்த கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

Kasiarunachalam

 லிங்கம்

லிங்கம்

இந்த மூன்று கோயில்களிலும் நடுக்கோயிலில் அழகிய சிவலிங்கம் உள்ளது. மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன இந்த கோயில்கள். இது மிகவும் அரிய சுற்றுலாத் தளமாகவும் பார்க்கப்படுகிறது.

இருகோயில்களின் விமானங்களிலும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

Anil Kumar Mahakur

 அமைப்பு

அமைப்பு

இந்த கோயிலில் மண்டபம், கருவறை, விமானம் மற்றும் சிற்பங்கள் காட்சி தருகின்றன..

மூன்று கோயில்களிலும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கோயில்களுக்கும் பொதுவாக ஒரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது வெகு நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மகா மண்டபத்தை அடுத்து, நந்தி மண்டபம், பலிபீடம் போன்றவை இருந்திருந்திருக்கின்றன. இவை இப்போது சுவடுகளாக காட்சி தருகின்றன.

R.K.Lakshmi

எஞ்சியவை

எஞ்சியவை


பிரகாரச் சுற்றில் அமைக்கப்பட்டுள்ள பதினைந்து சன்னிதிகளின் அஸ்திவாரங்கள் மட்டுமே நம் கண்களால் பார்க்கமுடியும். வடகிழக்கில் வட்ட வடிவில் அமைந்துள்ளது ஒரு படிக்கிணறு. இக்கோயிலைச் சுற்றி பெரிய மதில் இருந்திருக்கிறது. அதுவும் தற்போது மிகவும் பாதிப்படைந்து காணப்படுகிறது.

R.K.Lakshmi

கருவறை

கருவறை


இக்கோயிலின் கருவறை 21க்கு 21 அடி என்ற விகிதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விமானம் 32அடி உயரம் கொண்டது. கோயில் விமானத்துக்கு ஒரு அரும்பெரும் சிறப்பு உள்ளது.

அது என்னவென்றால், இந்த விமானத்துக்கு கட்டுமானக் கற்கள் ஒன்றன்மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு, மிக நேர்த்தியாக காட்சியளிக்கிறது.

சுண்ணாம்பு சாந்து என எந்த கலவையும் இன்றி, கற்கள் ஒன்றன்மீது ஒன்றாக அமைக்கப்பட்டு, விமானத்தின் உட்பகுதி கூம்பு போன்று உள்கூடாக உருவாகப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழரின் நாகரிக வளர்ச்சியை உலகத் தரத்துக்கு மதிக்கத்தக்கவை.

Kasiarunachalam

சிற்பங்கள்

சிற்பங்கள்


தென்னிந்திய கட்டிடக்கலையில் சிற்பக்கலை மிகவும் புகழ்மிக்கதாகும். சிற்பக்கலையில் சோழர்களை மிஞ்ச ஆளில்லை என்பது சிறப்பு. அப்படி சோழர்களின் நண்பரான வேளிர் குல அரசனும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கியிருக்கிறான். அந்த அளவுக்கு இங்குள்ள சிற்பங்கள் பிசிறின்றி காணப்படுகிறது.

Rmuthuprakash

Read more about: travel, temple