Search
  • Follow NativePlanet
Share
» »கர்நாடக மாநிலத்தில் இருக்குது ஜிலு ஜிலு "கோவா"

கர்நாடக மாநிலத்தில் இருக்குது ஜிலு ஜிலு "கோவா"

By Udhaya

கார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட மாவட்டத்துக்கு தலைநகரமாக இருக்கும் இந்த நகரம் 15ம் நூற்றாண்டு முதற்கொண்டே பரபரப்பாக இயங்கி வரும் ஒரு வியாபார கேந்திரமாக விளங்கி வந்துள்ளது. வாசனைப்பொருட்களை அதிக அளவில் விளைவிக்கும் கேரளாவிற்கு அருகிலுள்ள இது ஒரு இயற்கைத் துறைமுகம் என்பதால், வரலாற்றுக்காலத்தில் போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள், அரேபியர்கள் போன்ற கடலோடிகளுக்கும் தற்சயம் இந்திய அரசாங்கத்தின் கடற்படைக்கும் இந்த துறைமுகம் மிக முக்கிய இடமாக திகழ்கிறது. சரி வாங்க.. ஒரு சூப்பர் டூப்பர் சுற்றுலா போய்ட்டு வரலாம் நம்ம கார்வாருக்கு!

 பொதுத்தகவல்கள்

பொதுத்தகவல்கள்

வானிலை - 27 டிகிரி செல்சியஸ்

செல்ல சிறந்த நேரம் - நவம்பர் முதல் ஏப்ரல் வரை

ஜூன் முதல் செப்டம்பர் வரை

சுற்றித் திரிய - கிட்டத்தட்ட 1 முதல் இரண்டு நாட்கள் நன்றாகச் சுற்றித் திரியலாம்

அருகிலுள்ள விமான நிலையம் - கோவா

காணவேண்டிய இடங்கள்

ஷாப்பிங் தலம், குருங்காடு தீவு, கார்வார் கடற்கரை, தேவ்பக் கடற்கரை, சதாசிவகத் மலைக்கோட்டை, ஓய்ஸ்டர் மலை கலங்கரைவிளக்கம்

Noronha3

அழகியல்கள்

அழகியல்கள்

கார்வாருக்கு மிக அருகில் காளி ஆறு அரபிக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் பாலத்துக்கருகில் பிரசித்தி பெற்ற சதாசிவகுட் கோட்டை அமைந்துள்ளது. இங்குள்ள ஆறும், அதன் பாலமும், அருகில் கோட்டையும் பின்னணியில் அசைந்தாடும் தென்னை மரங்களும் மறக்கவே முடியாத ஒரு அற்புத காட்சியை சுற்றுலாப்பயணிகள் மனதில் ஓவியமாக தீட்டுகின்றன.

Vivo78

மதங்களின் சங்கமம்

மதங்களின் சங்கமம்

கார்வார் பிரதேச கலாச்சாரமும் இதர அம்சங்களும் திப்பு சுல்தானால் ஆளப்பட்ட வரலாற்று பின்னணி மற்றும் பிரிட்டிஷ், போர்த்துகீசிய மதப்பிரச்சாரகர்களால் விஜயம் செய்யப்பட்ட பகுதியாக இருப்பதாலும், கோவாவுக்கு மிக அருகில் இருப்பதாலும் இது கணிசமான முஸ்லிம் மற்றும் கிறித்துவ மக்கள்தொகையை கொண்டுள்ளது.

Rane.abhijeet

உத்தரகன்னட பழங்குடிகள்

உத்தரகன்னட பழங்குடிகள்

கார்வாரின் பூர்வகுடிகளாக அறியப்படும் ‘உத்தரகன்னட பழங்குடிகள்' இந்த பிரதேசத்தின் மக்கள் தொகையில் 55 சதவிகிதம் அடங்கியுள்ளனர். இவர்கள் கன்னட மொழியை பேசுவதில்லை என்பதும் அவர்களின் பிரத்யேக தாய் மொழியான ‘கொங்கணி'யை பேசுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vivo78

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

கொங்கணி மொழியை தாய் மொழியாகக் கொண்டு கோவாவுக்கு அருகில் இருக்கும் கொங்கணப்பிரதேசமான இந்த கார்வார் பகுதி கர்நாடக மாநிலத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது. பார்த்து மகிழவும், அனுபவிக்கவும் ஏராளம் துறைமுகத்துக்கு அடுத்த படியாக இங்கு மீன் பிடிப்பும், சுற்றுலாவும் இரண்டு முக்கியமான பொருளாதாரமாக விளங்குகின்றன.

wiki

தங்க நிற கடற்கரை

தங்க நிற கடற்கரை

தூய்மையுடன் தங்க நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரைகளும் அதைச் சுற்றிலும் தென்னை மரங்களும், தேக்கு மரங்களும் சூழ்ந்த மாசுமருவில்லாத இயற்கை அழகும் பயணிகளுக்கு கிடைக்கும் ஒரு அரிதான சொர்க்கம் எனலாம். நீர் விளையாட்டுகளான ‘ஸ்நார்கெலிங்', நீச்சல், அலைச்சறுக்கு விளையாட்டு, முக்குளிப்பு போன்றவற்றை இங்குள்ள தேவ் பாக், கூடி, காடி பாக் போன்ற கடற்கரைகளில் சாகசப்பயணிகள் அனுபவிக்கலாம்.

wiki

வரலாற்று பயணம்

வரலாற்று பயணம்

இங்கு வரலாற்று புகழ் பெற்ற கோயில்களும், தேவாலயங்களும், மசூதிகளும், சமாதி மண்டபங்களும் சுற்றுப்பார்க்க ஏராளம் உள்ளன. புராதன கலைப்பொருட்களும் அற்புதமான கட்டிடக்கலை சின்ன ங்களும் இங்கு மிகுந்து காணப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளாக இந்தியக் கடற்படை தன் பிரதான கேந்திரமாக இங்குள்ள துறைமுகத்தை பயன்படுத்துவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த துறைமுகப்பகுதி பொதுமக்கள் விஜயம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

Agnel3

நத்தைப்பாறை கலங்கரை விளக்கம்

நத்தைப்பாறை கலங்கரை விளக்கம்

நேரமும் மனமும் இருந்தால் கார்வாருக்கு அருகில் உள்ள ஒரு தீவில் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த நத்தைப்பாறை கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படும் ஒரு புராதனச்சின்னத்தையும் பார்த்துவரலாம்.இது தேவத் குட்டா (நத்தைப்பாறை) தீவில் 1860 ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் உள்ள மாடத்திலிருந்து பயணிகள் விளக்கு அறையின் வாசலை பார்க்க முடிகிறது.

இந்த விளக்கு வழக்கமான சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டிருக்காமல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இது சரியாய் தெரியவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கலங்கரை விளக்கத்தை பார்ப்பதற்கு முறையான முன் அனுமதி பெற வேண்டும் என்பது பயணிகள் நினைவில் கொள்ளவேண்டிய விஷயமாகும். முக்கியமான தேசப்பாதுக்காப்புத்திட்டமான INS ‘கடம்பா' வின் திட்டத்தளம் இங்கு அருகில் அமைந்துள்ளதே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 கோட் சிவேஷ்வர்

கோட் சிவேஷ்வர்

கார்வாருக்கு நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கோட்டையான இந்த ‘கோட் சிவேஷ்வர்' பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. பிஜாப்பூர் சுல்தான்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை சிவேஷ்வர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி இந்தக் கோட்டை கனரா பிரதேசத்தின் (கர்நாடகத்தின் கடலோர பிரதேசம்) வட எல்லையை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் தற்சயம் இந்தக் கோட்டை இடிபாடடைந்து காணப்படுகிறது. இதன் கிழக்கு வாயிலுக்கருகில் ஒரு சுரங்கப்பாதை, ஒரு கிணறு மற்றும் ஒரு இஸ்லாமிய கல்லறைத்தளம் போன்றவற்றை இந்த கோட்டை வளாகத்தில் பார்க்க முடிகிறது.

Ayan Mukherjee

குட்டலி சிகரம்

குட்டலி சிகரம்

கார்வாருக்கு விஜயம் செய்யும்போது பயணிகள் கார்வாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள குட்டலி சிகரத்தை சென்று பார்க்குமாறு பரிந்துரைக்க்ப்படுகிறார்கள். இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் அமைந்துள்ளது மட்டுமன்றி . இது மேற்கில் பெல்கேரி ஆற்றினாலும் கிழக்கில் காளி ஆற்றினாலும் சூழப்பட்டுள்ளது. பயணிகள் ஹைதர்காட் மலைத்தொடரின் இந்த உயரமான சிகரத்தை வருடத்தின் எப்பருவத்திலும் சென்று பார்க்கலாம். பயணிகள் 500 மீட்டர் தூரத்துக்கு காட்டு வழியாக மலையேற்றம் செய்து இந்த சிகரத்தை அடைய வேண்டியுள்ளதால் ஏறும் வழியில் மலைமீதிருந்து கீழேயுள்ள கடற்கரை மற்றும் நகரம் போன்றவற்றை மேலிருந்து தரிசிக்கும் அற்புத அனுபவத்தை பெறலாம். வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இந்த சிகரம் சுதந்திரத்துக்கு முன்னர் ஆங்கிலேயருக்கு கோடை மலைவாசஸ்தலமாக பயன்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது

Read more about: travel karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more