Search
  • Follow NativePlanet
Share
» »கட்டாக்கில் காணவேண்டிய இடங்கள்

கட்டாக்கில் காணவேண்டிய இடங்கள்

கட்டாக்கில் காணவேண்டிய இடங்கள்

By Udhaya

ஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின் கலாச்சார மற்றும் வியாபார தலைநகராக கருதப்படுகிறது. மகாநதி மற்றும் கத்ஜோரி நதிகளின் கரைகளில் அமைந்துள்ளபடியால் அழகுமிக்கதாக தோன்றும் இந்த சமவெளி நகரம் சுற்றுலாவிற்கு ஏற்றவாறு திகழ்கிறது. பழங்கால வரலாற்றை இங்கிருக்கும் நினைவுச்சின்னங்கள் மூலம் தெரிந்துகொள்ளமுடிந்த அதே சமயத்தில் நவீன வாழ்க்கை முறையையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

சண்டி

கட்டாக்கில் காணவேண்டிய இடங்கள்

Sidsahu

கட்டாக் சுற்றுவட்டாரத்தில் உள்ள இக்கோவில் சண்டி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மகாநதி கரையில் உள்ள இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

அஸ்சின கிரிஷ்ணா அஸ்டமி துவங்கி விஜயதசமி வரை 16 நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படும் துர்கா பூஜையின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள். 300ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்தக் கோவிலின் கட்டிட அமைப்பும் பிரம்மிக்க வைப்பதாக இருக்கிறது.

ரத்னகிரி

கட்டாக்கில் காணவேண்டிய இடங்கள்

Apoo8338

ரத்னகிரி வருகை தரும் பயணிகளை ஜய்காட் கோட்டை தன் பிரம்மாண்டத்தால் அசர வைக்கிறது. ரத்னகிரியின் வளைகுடாப்பகுதியில் உள்ள இந்த கடற்கரைக் கோட்டை பார்ப்பதற்கு பரவசமூட்டும் ஒரு வரலாற்றுச்சின்னம் ஆகும். இந்த ஸ்தலத்திலேயே பிரசித்தமான ஜய்காட் கலங்கரை விளக்கமும் உள்ளது. 600 ஆண்டுகள் பழமையை உடைய மற்றொரு முக்கிய கோட்டையான ரத்னாதுர்க் கோட்டையும் இங்கு அருகில் அமைந்துள்ளது. நீங்கள் ஒரு கடற்கரை ரசிகராக இருக்கும் பட்சத்தில் இங்குள்ள விதவிதமான கடற்கரைகளை பார்த்து மகிழலாம். கறுப்பு நிற மணலுடன் காட்சியளிக்கும் மாண்டவி பீச், கணபதிபுலே பீச் மற்றும் கணேஷ்குலே பீச் போன்றவை இங்குள்ள அற்புதமான கடற்கரைகளாகும்.

லலித்கிரி

கட்டாக்கில் காணவேண்டிய இடங்கள்

MMohanty

கட்டாக்கில் இருந்து 62 கிமீ தொலைவில் உள்ள இவ்விடம் புத்தமதத்தினரின் யாத்ரீக தளமாக திகழ்கிறது. அருமையான புத்தக் கோவில் ஒருகாலத்தில் இங்கு இருந்ததாக நம்பப்படுகிறது. அக்கோவிலின் மிச்சங்களை இன்றும் காணலாம். ரத்னகிரி மற்றும் உதய்கிரி, லலித்கிரி ஆகிய மலைகள் முக்கோண்ட வடிவத்தை உருவாக்கும் வண்ணம் அமைந்துள்ளன. பச்சைப் பசேலென்ற சூழ்ந்திருக்கும் இவ்விடத்தில் உள்ள ஏராளமான தூண்களும், புடைப்புச்சிற்பங்களும் நம்மை புராண காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன. மகாவீரரின் சிலை ஒன்றும் புஷ்பகிரி மலை மீது அமைந்துள்ளது. புத்த கட்டிடக்கலையின் சிறப்பம்சமாக இந்த தூண் கருதப்படுகிறது. லலித்கிரியில் உள்ள அருங்காட்சியகம் ஏராளமான பழங்கால மிச்சங்களை பார்வைக்கு வைத்துள்ளது.

Read more about: odisha india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X