Search
  • Follow NativePlanet
Share
» »வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஊட்டும் "கில்மா" பலகைகள்

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஊட்டும் "கில்மா" பலகைகள்

வார இறுதி நாட்கள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்க விரும்புவோர் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது நீண்ட தூர பயணத்தையே. குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டால் பாதுகாப்புகள் நிறைந்த தலங்களையும், இளைஞர்கள் பைக் அல்லது காரில் பயணம் என்றால் சற்று கரடு முரடான, தங்களது வாகனம் ஓட்டும் திறமையை நிரூபிக்கும் வகையிலான சாலையை தேர்ந்தெடுத்து பயணம் மேற்கொள்வது வாடிக்கை.

அவ்வாறாக, இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற, ஏன் உலகிலேயே மிக உயரமான சாலைப் பயணம் என்றால் அது ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திலுள்ள லடாக் பகுதி சாலைகள் தான். லடாக்கின் சாலை அமைப்புகளாலேயே இது நிலவு பூமி, உடைந்த நிலவு என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் உள்நாட்டுப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பல லட்சக் கணக்கானோர் லடாக் பகுதியில் சுற்றுலா மேற்கொள்கின்றனர். இவற்றில் வாகன ஓட்டிகளைப் பெரிதும் கவர்வது அப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களே.

பொதுவாக, சாலை ஓரங்களில் வாகன விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள், சட்ட முறைகள் உள்ளிட்டவை எழுதப்பட்டிருப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அவ்வாறாகத்தான் நம் ஊரில் பெரும்பாலான பகுதிகளில் கண்டிருப்போம். அதில், வேலை நடைபெறுகிறது, பள்ளி உள்ளது பார்த்து செல்லவும் போன்ற எச்சரிக்கை பலகைகள் இருக்கும். ஆனால், இந்த லடாக் பகுதியில் சாலைப் பயணம் மேற்கொண்டீர்கள் என்றால் அங்கு இருக்கும் எச்சரிக்கை பலகைகள் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை ஏற்படுத்தும். அப்படி என்னதான் கில்மாவா எழுதியிருக்குன்னு பார்க்கலாமா ?

1. LOWER YOUR GEAR CURVE IS NEAR

1. LOWER YOUR GEAR CURVE IS NEAR

வளைவு பக்கத்திலதா இருக்கு, கியரைக் கொறைங்க...

2. DONT GOSSIP LET HIM DRIVE

2. DONT GOSSIP LET HIM DRIVE

கிசு கிசு எல்லாம் வேண்டாம், ஒழுங்கா அவன வண்டி ஓட்ட விடுடி...

3. DARLING I LIKE YOU BUT NOT SO FAST

3. DARLING I LIKE YOU BUT NOT SO FAST

எனக்கு உன்னைய பிடிக்கும்தான், அதுக்காக இவ்வளவு ஸ்பீடா வேண்டாம்டா...

4 FEEL THE CURVES DO NOT TEST THEN

4 FEEL THE CURVES DO NOT TEST THEN

என் வளைவுகளை அனுபவி, சோதிக்காதடா...

5. SORRY FOR

5. SORRY FOR "OOOH" "AHH" "OUCH" INCONVENIENCE REGRETTED

"ஊ" "ஹா" "ச்ச்ச்"... போன்ற சத்தங்களுக்கு மன்னிக்கவும்

6. BE GENTLE ON MY CURVES

6. BE GENTLE ON MY CURVES

என் வளைவுகளில் பொறுமையா போடா...

7. PEEP PEEP DON'T SLEEP

7. PEEP PEEP DON'T SLEEP

பீப்... பீப்... டோன்ட் ஸ்லீப்...

8. DRIVE LIKE HELL YOU WILL BE THERE

8. DRIVE LIKE HELL YOU WILL BE THERE

நரகத்துல ஓட்டுறமாதிரி ஓட்டுனா, கூடிய சீக்கிரம் அங்க போய்டுவ...

9. DRIVE DON'T FLY

9. DRIVE DON'T FLY

சாலையில் வண்டி ஓட்டு, பறக்காத...

10. BE SOFT ON MY CURVES

10. BE SOFT ON MY CURVES

என் வளைவுகள்ல மெதுவாகச் செல்லு...

11. KNOW AIDS NO AIDS

11. KNOW AIDS NO AIDS

முன்னெச்சரிக்கையாக இருந்தா வழியில எந்த பிரச்சனையும் இல்ல.

12. MIND YOUR BRAKES OR BREAK YOUR MIND

12. MIND YOUR BRAKES OR BREAK YOUR MIND

வேகத்தடையை கவனித்து ஓட்டு, இல்லன்னா உயிர் போய்டும்...

13. OVER SPEED IS A KNIFE THAT CUT A LIFE

13. OVER SPEED IS A KNIFE THAT CUT A LIFE

மிக வேகம் கத்தியைப் போன்றது, அது உன் வாழ்வை துண்டித்து விடும்

14. IF YOU ARE MARRIED DIVORCE SPEED

14. IF YOU ARE MARRIED DIVORCE SPEED

நீங்கள் திருமணமானவராக இருந்தால் வேகத்தை விவாகரத்து செய்துடுங்கள்..

15. BE MR LATE THAN LATE MR

15. BE MR LATE THAN LATE MR

வேகமா வண்டி ஓட்டுனா, வேகமா உசுர விட்டுருவிங்க...

16. DON'T BE A GAMA IN THE LAND OF LAMA

16. DON'T BE A GAMA IN THE LAND OF LAMA

லாமா பகுதியில காமா-வா இருக்காதீங்க...

17. PUT FUEL IN THE VEHICLE NOT BOOZE INTO YOU

17. PUT FUEL IN THE VEHICLE NOT BOOZE INTO YOU

வண்டிக்கு மட்டும் ஊத்துங்க, உங்களுக்கு ஊத்த வேண்டாம்...

18. IF YOU LOVE HER PLEASE DIVORCE SPEED

18. IF YOU LOVE HER PLEASE DIVORCE SPEED

உங்கள் துணைவியை காதலித்தால் வேகத்தை வெறுத்திடுங்கள்..

19. ALL WILL WAIT BETTER BE LATE

19. ALL WILL WAIT BETTER BE LATE

மெதுவா போங்க, எல்லாரும் காத்திருப்பாங்க, வேகமா போய் அவங்கள கடைசி வரைக்கும் காத்திருக்க வச்சுடாதீங்க...

20. LIFE IS A LIMITED COMPANY WITH UNLIMITED DREAMS

20. LIFE IS A LIMITED COMPANY WITH UNLIMITED DREAMS

வாழ்க்கை சிறியது, ஆனால் நிறைய கனவுகளை கொண்டது...

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more