» »திரில்லான பயணத்தை விரும்புவீங்களா?

திரில்லான பயணத்தை விரும்புவீங்களா?

Written By: Balakarthik Balasubramanian

நீங்கள் மலையைக் கண்டால் கால்கள் விறு விறுக்க ஏறத் தவிக்கும் ஒருவரா! அப்படியென்றால், இந்தப் பத்தியைப் படிப்பதன் மூலம் கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்திலுள்ள, தியோ திப்பா மலைப்பகுதிக்கு செல்லக் கண்டிப்பாக ஆசைப்படுவீர்கள். அப்படி என்ன தான் இங்கு இருக்கிறது. வாங்கப் பார்க்கலாம்!

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா?

என் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தினையும் பார்க்காத நான், அதேக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனேன். அதே நேரத்தில், நான் பார்த்துப் பழகிய முகங்களும் என்னைச் சலிப்பில் ஆழ்த்தத் தொடங்க, ஏன் என்பதனை ஒரு நாள் நான் உணர்ந்தேன், ஆம், நான் ஒரு இயந்திரத்தினைப் போல் ஒரே மாதிரி ஆற்றலுடன் ஒரே வேலைகளைச் செய்துக்கொண்டுச் சுற்றியதால் என்னைப் பற்றி நானே சிந்தித்துப் பார்த்து வெட்கிக் குனிந்தேன்.

கேதர்நாத் கோயிலுக்கு ஒரு புனித யாத்திரை !!

இந்தச் சிறிய வாழ்க்கை மட்டுமே என் உலகம் அல்ல. கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்னும் பழமொழி என் நினைவுக்கு வர, நான் பார்க்காத ஒரு உலகத்தினைப் பார்க்கத் துடித்தது என் கண்கள். ஒருச் சிறிய வட்டத்துக்குள் அடைபட்டுப் பூட்டப்பட்ட என் வாழ்க்கையைத் தேடி மீண்டும் புதியதோர் உலகத்தினில் பிரவேசிக்க ஆசைக் கொண்டேன். இந்தப் புதிய வாழ்க்கையில் நான் காணப்போகும் மனிதர்கள் யார்? அவர்களுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது? நான் எதாவதுப் புதியதாக அவர்களிடமிருந்துக் கற்றுக் கொள்ள முடியுமா? என என் மனதினுள் கேள்விகள் பல எழுந்தாலும், இந்த புது உலகத்தில் இயற்கைக்கு முன்னுரிமை அளிக்க தான் எண்ணியது என் மனம். இழந்தவற்றை மீண்டும் அடையும் ஒருச் சக்தி, இயற்கைக்கு உண்டு என்று என் காதுகளில் ஒரு அசறீரி ஒலித்துக்கொண்டே இருந்தது. என்னை ஊக்குவிக்கும் ஒருவனை நான் இந்த புது உலகத்தில் தேட வேண்டும், என்னை சோர்விலிருந்து மீட்டு உற்சாகமடைய செய்யும் ஒரு உந்தம் எனக்கு வேண்டும். என்னை ஒவ்வொரு நாளின் ஆதியிலும் (தொடக்கத்திலும்), ஒரு புதியத் தேடலை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு புதியப் பாதை எனக்கு வேண்டுமென என் மனம் தவியாய் தவித்தது. அதனால், நான் அப்படி ஒரு இடத்தினைத் தேட ஆரம்பிக்க, கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி மேலேக் காணப்படும் இமயமலையின் ஒருப் பகுதி என்னை அன்னாந்துப் பார்க்க வைத்தது.

தியோத் திப்பா எனப்படும் இந்தப் பகுதி "கடவுளர்களின் அரியணை' எனப் போற்றப்படும் ஒன்றாகும். இங்குள்ள மணலிப்பகுதியின் அடிவாரத்திலிருந்து ஏறும் நாம் அனைவருக்கும், மனதிற்குள் ஒரு இன்ப வெள்ளம் பொங்கி சந்தோஷம் கொண்டு மூழ்கடிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. இங்குக் காணப்படும் ஆல்பைன் காடுகளின் அழகும், புத்துணர்ச்சியுடன் காணப்படும் புல்வெளிகளும் முகடுகளும், 4480 மீட்டர் உயரத்தில் காணப்படும் சந்திரத்தால் ஏரியும் நம்மை வெகுவாகக் கவர்ந்து மனதினைக் குளிர்ந்தக் காற்றினால் வருடுகிறது.

இந்தப் பயணத்தின் போது 6001 மீட்டர் உயரத்தில் காணப்படும் தியோத் திப்பா என்னும் பனி மூடிய மலைப்பகுதியின் உச்சம் நம்மை வியப்பில் ஆழ்த்தி இன்ப உணர்வினைத் தருகிறது. அதுமட்டுமல்லாமல், ஜகாத்சுக் மற்றும் தியோத் திப்பாவின் பனி சூழ்ந்த அழகும் நம் மனதினைக் கொள்ளைக் கொள்ளும் அளவிற்குக் காட்சியினைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் சேரிப் பகுதி, பனிகளால் சூழப்பட்ட ஒரு ஏரி, பயணத்தினைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள உதவ, இன்று அதேப் பகுதி அல்பைன் பூத்துக் குலுங்கும் ஒரு இடமாகப் பசுமையான மேய்ச்சலுடன் காணப்படுகிறது. திகட்டப்படாதப் பகுதியாக விளங்கும் இந்த இடத்தினைச் சுற்றுலாப் பயணிகள் எத்தனை முறை வந்தாலும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்ல, முதன் முதலில் இந்தப் பகுதியின் அழகினை ரசிக்கும் ஒருவருக்கும் அதே உணர்வு ஏற்பட, எப்பொழுது மீண்டும் இங்கு வருவோம் என்னும் எண்ணம் கொண்டு தான் மனம் ஏங்குகிறதாம். ரோஹ்தங்க் பாதை, இந்த மலையின் உச்சியில் காணப்படுவதுடன் நம் மனதினையும் அந்தப் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கிறதாம். இவற்றை எல்லாம் தெரிந்துக்கொண்ட என் மனம், உடனடியாக இணையத்தின் உதவியுடன் பயணத்தினை உறுதிச் செய்து அந்த முகம் தெரியா நபர்களுடன் சேர்ந்துப் பயணம் கொள்ள ஆசைப்பட்டது.
தியோத் திப்பாவை பார்ப்பதற்கு ஏதுவானக் கால நிலைகள்: மே முதல் அக்டோபர் வரை ஆகும்.

இந்தப் பகுதியினைப் பார்க்க செல்லும்பொழுது நமக்குத் தேவைப்படும் அத்தியவாசியப் பொருள்கள்:

கைத்தடி எனப்படும் வாக்கிங்க் செல்லப் பயன்படும் குச்சி, ஃபிளாஷ் ஒளி, முதலுதவி மருந்துகள், திசைக்காட்டி, மலை ஏறப் பயன்படும் காலணிகள், தூங்குவதற்கு ஏதுவான கூடாரம் போன்ற அமைப்புக்கொண்டப் பைகள், துரத்தில் உள்ளவற்றை அருகில் காட்ட உதவும் தொலைநோக்கிகள், புகைப்படக்கருவி, கம்பளி ஆடைகள், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், சாக்லேட்டுகள் ஆகியவை நாம் கொண்டுச் செல்லத் தேவைப்படும் அத்தியவாசியப் பொருட்களாகும்.

நான் பெங்களூரிலிருந்துப் புறப்பட்டு விமானத்தின் மூலம் குல்லூவுக்குப் பறந்துச் சென்றேன். அங்கிருந்துப் பேருந்தின் உதவியுடன் மணலியினை அடைந்தேன். ஆனால், இந்த மலை ஏற்றப் பயணத்தின் ஆரம்ப நிலை கனோலில் இருந்துத் தொடங்கியது.

நாள் 1: கனோல் – சிக்கா:

நாள் 1: கனோல் – சிக்கா:

மணலியில் காலை உணவினை முடித்துக்கொண்டுப் புறப்பட்ட நான், ஒரு டாக்சியின் உதவியுடன் ஜகாத்சுக் வழியாகக் கனோலை அடைந்தேன். ஜகாத்சுக் என்பதற்கு உலகத்திலேயேச் சந்தோஷமான ஒருவன் என்று அர்த்தமாகும். "எதற்கு இப்படி ஒருப் பெயர், இந்த இடத்திற்கு வந்தது?" எனச் சிந்தனை ஓட்டங்களுடன் சென்ற நான், அந்த ஊர் மக்களின் சந்தோஷத்தினைப் பார்த்துப் புரிந்துக்கொண்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

ஒரு வரைபடத்திற்கு அழகே அதன் வளைவுகள் தான் என்பதுபோல, கனோலில் உள்ள ஜகாத்சுக் பகுதியில் அமைந்துள்ள ஒரு அணையின் ஓட்டத்தின் வளைவு சுளிவுகள் நம்மை நெகிழவைக்கிறது. அங்குக் காணப்படும் அந்த அழகிய வளைவுகள், அதன் கண்ணோட்டத்தினை ஒரு ஓவியமாய் மாற்றி நோக்க வைக்க, இயற்கை அன்னையின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவள் மடியில் தலைசாய்ந்து, அந்த ஓட்டத்தின் அழகினை ரசித்தவாறுத் தூங்க ஆசைக்கொள்கிறது நம் மனம்.
நாம் 1 மணி நேரப் பயணத்தின் வாயிலாக இந்த 12 கிலோமீட்டர்களைக் கடந்துக் கனோலினை அடைகிறோம். சிக்காவின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்தப் பயணக் குழுவுடன் நானும் இணைந்துக்கொண்டு அழகானப் பயணத்திற்காகத் தயாராகினேன். எங்களுடையக் கால்கள், முதல் 15 நிமிடத்தில் செங்குத்தானப் பகுதிகளைக் கடக்க, அதன் பிறகு ஒரு மணி நேரம், படிப்படியாக நடந்துச் சாதாரணமாகச் சென்றுக்கொண்டிருந்தோம். நாங்கள் செல்லும் வழியில் கண்ட அந்த ஆல்பைன் காடுகள் எங்கள் மனதினுள் ஒருப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு அழகான ஓடையின் அருகில் அமர்ந்து மதிய உணவினை முடித்துவிட்டு மீண்டும் நாங்கள் வனத்தின் வழியே உலாவத் தொடங்கினோம். நாங்கள் 20 நிமிடப் பயணத்தினைக் கடந்துச் செல்ல, மலைப்பகுதியில் ஒரு சிறிய ஓடையையும், மற்றுமொருப் பெரிய நீரோடையையும் கண்டு அதிசயித்தோம். மீண்டும் ஒரு 5 கிலோமீட்டர்கள் நாங்கள் செல்ல, அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அந்த அழகியப் பகுதியில் எங்கள் முதல் நாள் ஓய்வுக் கூடாரத்தினை அமைத்து அமர்ந்தோம். சிக்காப் பகுதியில் நாங்கள் கூடாரம் அமைக்க, அந்தப் பகுதிப் புற்களாலும், வண்ணம் தீட்டப்பட்ட மலர்களாலும் அலங்கரித்து நம் மனதினை ஆட்சிச் செய்ய ஆரம்பிக்கிறது.

PC : wikimedia.org

நாள் 2: சிக்கா – சேரி

நாள் 2: சிக்கா – சேரி

நாங்கள் தூங்கிக்கொண்டிருக்க, கதிரவனின் கதிர்கள் எங்கள் மேல்பட்டு இயற்கைப் பக்கம் திரும்ப, அந்தப் பள பளவென மின்னிய இடம் எங்களை இரண்டாம் நாள் பயணத்திற்கு அழைத்தது. சிக்காவிலிருந்துப் புறப்பட்ட நாங்கள் மீண்டும் ஏறத் தொடங்க, நிலப்பரப்பின் நிலைகளிலும் மாற்றம் தந்து எங்களை முதல் 2 மணி நேரம் சதுப்பு நிலங்களில் கண்ட புள்கள் நிறைந்த வெற்று வெளியில் பயணம் செய்ய வைக்க, எங்களை ஒரு நதிக்கரை நெருங்கியது. நாங்கள் சென்ற வழியில் அவ்வளவுச் சிரமங்கள் ஏதும் எங்களுக்கு ஏற்படாததால், அந்தப் பனிகள் படர்ந்த மலைகளையும் சின்ன சின்ன நீரோடைகளையும் பார்த்துக்கொண்டே முன்னோக்கி சென்றோம். அந்த நீரோடைகளைக் கடக்கும் நம் மனம் குழந்தையாக மாறி மீண்டும் தாவ அடுத்த நீரோடையினைத் தேடி அலைந்து, நமக்கு ஏற்பட்ட களைப்பை எல்லாம் நொடிப் பொழுதில் மறக்கிறோம்.

நாங்கள் அனைவரும் 4 கிலோமீட்டர் முன்னோக்கிப் பயணம் செய்ய, எங்களுடைய அடுத்த 1 மணி நேரப் பயணத்தில் பெரிய அளவினைக் கொண்ட கற்பாறைகளை நாங்கள் கடக்க, மனம் புதியதொரு அனுபவத்தினைக் கொண்டுத் துள்ளிக் குதித்தது. தொட்டு பத்தர் பகுதியில் மதிய உணவினை முடித்துவிட்டு நாங்கள் செல்ல, பனிகள் சூழ்ந்த நிலப்பரப்பில் காலடிப் பதித்து மனதினைக் குளிரடையச் செய்தோம். நாங்கள் ஏறிய மண்டலப்பகுதி உயரத்தை நோக்கிச் செல்ல, எங்கள் நாசியிலிருந்து வெளிப்பட்ட மூச்சுக் காற்றும் அதிகமானது. இறுதியாகச் செரியினை அடைந்த நாங்கள், அங்கு ஒரு கூடாரத்தினை அமைத்து எங்களுடைய இதர நேரத்தினைச் செலவிட்டோம். இந்த இரண்டாம் நாள் முடிவில் நாங்கள் சுமார் 6 கிலோமீட்டர் பகுதியில் உள்ள அழகியக் காட்சிகளைக் கண்டிருக்கிறோம் என மனம் உற்சாக வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்தது.

Abies_pindrow

நாள் 3: செரி – டைன்டா

நாள் 3: செரி – டைன்டா

மூன்றாம் நாளின் முதல் புள்ளியினைப் பயணத்தின் வாயிலாக நாங்கள் எந்த ஒருச் சிரமமுன்றி வைத்து நடந்து செல்ல, நாங்கள் கண்ட புல்வெளிகளும், கடந்துச் செல்லும் நீரோடைகளும் இயற்கையின் பெருமையைப் பற்றி ஆயிரம் கதைகள் எங்களிடம் பேசியது.
இந்த மூன்றாம் நாளின் அதிகாலையில் சீக்கிரமே எழுந்து நாங்கள் உற்சாகத்துடன் புறப்பட, எங்களால் செங்குத்தானப் பகுதிகளில் சிரமமின்றி ஏறவும், நீண்டத் துரத்தினைக் கடக்கவும் மிகவும் பயனுள்ளதாக அது அமைந்தது. நாங்கள் முன்னோக்கிச் செல்ல, அதன் பிறகு மலைமுகட்டின் மீது அமைந்திருந்தக் கற்பாறைகள் மீது ஏறினோம். மலைமுகட்டின் இடதுப் புறத்தில் திரும்பி நாங்கள் செல்ல, இடைவெளியில் காணப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான தியோத் திப்பாவின் அழகு எங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றது.
நாம் அந்தப் பகுதிகளில் சூழ்ந்திருக்கும் பனிகளைக் கடக்க, பெருவிரலின் துடிப்பு (சத்தம்) உதவுகிறது எனவும் கூறுகின்றனர். அங்கு வீசும் காற்று மிகவும் லேசானத் தன்மைக் கொண்டதாய் இருக்க, அது நம் உடலைச் சீராக வைத்துக்கொள்ளப் பெரிதும் உதவுகிறது. நாங்கள் மேலே ஏறிச் செல்ல, டைன்டாவின் அழகு எங்களை அன்புடன் வரவேற்றது. அங்கு ஒரு கூடாரம் அமைத்து, பின் நாங்கள் கொண்டு வந்த எங்களுடைய மூட்டை முடிச்சுகளை ஓரம் கட்டிவிட்டு மெல்ல நடக்க, சந்திரத்தால் ஏரியினை அடைந்தோம். எல்லாப் பக்கங்களிலும் மலைகளைப் பனி சூழ்ந்திருக்க, அந்த உறைப்பனிப் படர்ந்த ஏரியினைக் கண்டு வியந்துப் போனோம்.

Satyamrai7777

நாள் 4: டைன்டா – சிக்கா

நாள் 4: டைன்டா – சிக்கா

நாங்கள் அனைவரும் வந்த வழியினை மீண்டும் புதிப்பித்து ஏக்கத்துடன் திரும்ப, மூன்று நாட்கள் கண்டக் காட்சிகள் ஒரே நாளில் மிக வேகமாக எங்களைவிட்டுத் தூரத்திற்கு சென்று நினைவுகளாய் மனதில் மட்டும் தேங்கியது. சிக்காவை அடைந்த நாங்கள் கூடாரமிட்டு, வானில் மின்னும் நட்சத்திரங்களின் அழகினை ரசித்துக்கொண்டு ஏக்கத்துடன் கனவுகளை மனதில் படர விட, நாங்கள் கண்ட இயற்கைக் காட்சிகளே எங்கள் கனவு உலகத்திலும் தோன்றியது. நகர வாழ்க்கை என்ன தான் நவீனத்தின் பிரதிபொளி என்றாலும், இயற்கை முன்பு அதுவும் ஒருச் சுற்றுலாப் பயணி என்பது தான் உரக்கக் கூறவேண்டிய உண்மை. இந்த இயற்கை நம் மனதினை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல் நல்லொழுக்கமடைய செய்யவும் உதவுகிறது.

Bharatkaistha

நாள் 5: சிக்கா – மணலி

நாள் 5: சிக்கா – மணலி

நாங்கள் பயணத்தின் பின் நோக்கிப் பயணிக்கக் கனோலை அந்த 5ஆம் நாளில் அடைந்தோம். இறுதியாக நாங்கள் சவாரி செய்த 3 நாள் இனிமையானதொருப் பயணம் சிறியக் கவலைகளுடன் 4ஆம் நாளில் நினைவில் செல்ல, ஏக்கத்துடன் 5ஆம் நாளில் அடியெடுத்து வைத்து இயற்கைத் தந்தப் பரிசுக்காக, அதற்கு வணக்கம் கூறி விடைபெறத் தயாராகினோம். இந்த அடிவாரப்பகுதியில் நம் கடைசி நிமிடங்களைச் செலவிட்டு மீண்டும் கார் மூலமாக மணலிக்குப் புறப்பட்டோம்.

இந்த உலகத்தில் இதுபோல் மனதினை அமைதிக்கொள்ளச் செய்யும் இடம் நிறையவே இருக்கிறது என்பதனை இந்த 5 நாட்கள் எனக்கு தெள்ளத் தெளிவாய் புரிய வைத்ததுடன், நான் யார் என்பதனையும் என் மனதிற்கு புரிய வைக்க, நம் மனதில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம் மனம் முழுவதும் நிரம்பி வார்த்தைகளாய், நாம் பார்ப்பவர்களிடம் வழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். 12,000 அடி உயரத்தில் நின்ற நான் இந்த உலகத்தினைப் பார்க்க, சுய நலம் என்ற ஒன்று சுத்தமாக என் கண்களுக்குத் தெரியவில்லை. மனிதச் சக்தியினை விட இயற்கை அன்னைக்கு எவ்வளவுச் சக்தி. இருப்பினும், என்னை விட நீ எப்படிச் சக்தி உள்ளவளாக இருக்கக்கூடும் என்னும் பொறாமைக் குணத்தினால் தான், மனிதன் இயற்கையை அழிக்க ஆசைக்கொள்கிறானோ! காற்றுப் பேசும் பாசையும், நதிகள் பேசும் பாசையென ஒட்டுமொத்த இயற்கை பேசும் பாசைப் புரிந்தால் தான் நமக்கு தெரியும் இயற்கை அழிவின் கண்ணீர் ஓலம். செயற்கை நம்மைப் பிற்காலத்தில் செயலிழக்க செய்யலாம். ஆனால், இயற்கை என்பது இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட ஒருக் காவல் தெய்வம் என்பதனை நாம் புரிந்துக்கொண்டு இயற்கையினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

Sarikaathavale

Read more about: travel