Search
  • Follow NativePlanet
Share
» »ஹாப்பி பர்த்டே தனுஷ்!!

ஹாப்பி பர்த்டே தனுஷ்!!

14 வருடம் முன்பு, ஒடிசலான தேகம் கொண்ட, பத்தொன்பதே வயது நிரம்பிய ஒரு இளைஞனின் முதல் படம் வெளியானது. படம் இளசுகளிடம் பயங்கர ஹிட். அப்படியும் அந்த இளைஞனை யாரும் பெரிதாக சட்டை செய்யவில்லை. அதற்கடுத்த வருடம் காதல் கொண்டேன் வெளியானபோதுதான் ஊடகங்கள் முதல் சினிமா ரசிகர்கள் வரை, அட, என வியந்து போனார்கள். தொடர்ந்து திருடா திருடி மிகப்பெரிய ஹிட். ரசிகர்கள் நெரிசலில், தன் கையில் எலும்பு முறிவே ஏற்பட்டு சிகிச்சை எடுக்கும் அளவிற்கு புகழின் உச்சத்திற்குப் போனார்.

அதன்பின் ஒரு சின்ன சறுக்கல், பின் மீண்டும், வெற்றிமாறனோடு கைகோர்க்க பொல்லாதவன், ஆடுகளம் என்று அட்டகாசமான படங்கள். போதாதற்கு ஆடுகளத்திற்கு தேசிய விருது, கொலவெறி பாடல் மூலம் உலகப் புகழ், பாலிவுட்டில் வெற்றி என்று தனுஷின் க்ராஃப் எகிறி விட்டது

இன்று தனுஷ் 33'ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தினத்தில், இவரது படங்களில் வந்த சிறந்த லொகேஷன்களைப் பார்க்கலாம்:

மரியான்

மரியான்

அந்தமான் தீவில் படம்பிடிக்கப்பட்டது இந்த சோனாப்பரியா சோனாப்பரியா நீ... பாடல். நீச்சல் தெரியாத தனுஷ், இந்தப் பாடலுக்காக நீச்சல் கற்று டூப் போடாமல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரியான்

மரியான்

படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் ஆப்பிரிக்க காட்சிகள், தனுஷ், சிறுத்தைகளோடு வரும் காட்சி எல்லாம் நமீபியா பாலைவனப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டது

காதல் கொண்டேன்

காதல் கொண்டேன்

இது எந்த இடம் என்று தெரிகிறதா ? விசாகப்பட்டினம் கடற்கரை, அதையொட்டி இருக்கும் பிரதான சாலை.

காதல் கொண்டேன் படத்தின் பெரும்பாலான காட்சிகள், காதல் காதல் காதலில் நெஞ்சம் பாடல் இங்குதான் படம்பிடிக்கப்பட்டது.

தனுஷ், சோனியா அகர்வால், ஸ்ரீ கன்யா என்ற தியேட்டரில் படம் பார்க்கச் செல்வார்கள். அதுவும் விசாகப்பட்டினத்தில் படம்பிடிக்கப்பட்டது.

Photo Courtesy :Sankara Subramanian

ஆடுகளம்

ஆடுகளம்

இதை எளிதாக சொல்லிவிடலாம். திருமலை நாயக்கர் மகால் - மதுரை; ஆடுகளத்தில் தனுஷ், டாப்ஸியை சந்தித்து காதல் சொல்லும் காட்சி இங்கு படம்பிடிக்கப்பட்டது.

Photo Courtesy : Suresh

ஆடுகளம்

ஆடுகளம்

இது மதுரையில் இருக்கும் தென்னக ரயில்வே குடியிருப்பு. தனுஷ், டாப்ஸியை கவர்வதற்கு க்ரிக்கெட் விளையாடும் காட்சி, யாத்தே யாத்தே பாடல் இங்கு படம்பிடிக்கப்பட்டது.

Photo Courtesy : Railway Colony, Madurai

திருவிளையாடல் ஆரம்பம்

திருவிளையாடல் ஆரம்பம்

ஆலம்பரை கோட்டை, கடப்பாக்கம் அருகில், மாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் விழிகளில் விழிகளில் விழுந்து விட்டால் இங்கு படமாக்கப்பட்டது.

Photo Courtesy : Djoemanoj

திருவிளையாடல் ஆரம்பம்

திருவிளையாடல் ஆரம்பம்

இதுவும் ஆலம்பரை கோட்டை பகுதிதான்.அதிகம் பேர் வராத அற்புதமான இடம்.

Photo Courtesy :SUPindia

More News

    Read more about: dhanush locations actor mariyaan
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+