» »தியான லிங்கம் - இப்படி ஒரு பிரம்மாண்டத்துல இந்த விசயங்கள மறந்துடுறோம்!

தியான லிங்கம் - இப்படி ஒரு பிரம்மாண்டத்துல இந்த விசயங்கள மறந்துடுறோம்!

Posted By: Staff

கோயம்பத்தூர், இந்த பெயரை கேட்ட உடனேயே நம் நினைவுக்கு வருவது கனிவும் மரியாதையும் கொண்ட மக்களும், செவியினிக்கும் கோயம்பத்தூர் தமிழும், வாழ்வதற்கு இதமான சூழலும் தான். இதனால் தான் என்னவோ ஒருமுறை கோயம்பத்தூருக்கு வந்துவிட்டால் திரும்பி செல்ல எவருக்கும் மனது வராது என்பார்கள்.

பரபரப்பான தொழில் நகரமாக கோவை திகழ்ந்தாலும் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் சுற்றுலா சென்றிடவும் இங்கே ஏராளமான இடங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பழமையான கோயில்கள், அருவிகள் போன்றவவை உண்டு. அப்படிப்பட்ட இடங்களில் தியான லிங்கமும் ஒன்றாகும். வெள்ளிங்கிரி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த தியான லிங்கம் தற்போது கோவையின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

யாத்ரா தளத்தில் ஹோட்டல் கட்டணங்களில் 50% + 30% தள்ளுபடிக்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள் 

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

சத்குரு ஜக்கி வாசுதேவ் என்னும் ஆன்மீக குருவினால் முன்னெடுக்கப்பட்டு இந்த தியான லிங்க மையம் கோவை மாநகரில் ஒருந்து 30 கி.மீ தொலைவில் வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் இது அமையப்பெற்றிருக்கிறது.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

இது ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் வழிபாட்டு மையமாகஇன்றி சர்வ மதத்தினரும் ஜாதி, இன பேதங்களை கடந்து அனைவருக்குமான தியான கூடமாகவே இந்த தியான லிங்கம் கட்டப்பட்டிருக்கிறது.

தியான லிங்க மையத்தில் உள்ள சர்வ சமய தூண்.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

இந்த மையத்தில் மையமாக அமைந்திருக்கும் தியான லிங்கமானது அதிக அடர்த்தியுடைய கருப்புநிற பளிங்கு கல்லினால் உருவானதாகும்.

இதற்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

தீர்த்த குண்டம் :

தியான லிங்கம் தவிர இந்த மையத்தில் தீர்த்த குண்டம் என்ற இடம் உள்ளது. இங்கு சிறிய குளம் போன்ற பகுதி உள்ளது. அதனுள் நீருக்கடியில் பாத ரசத்தினால் ஆன மூன்று லிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனுள் பக்தர்கள் இறங்கி நீந்தி சென்று லிங்கத்தை தொட்டு வழிபாடு செய்யலாம்.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

இந்த தீர்த்த குண்டமானது ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் இருக்கிறது. தீர்த்த குண்டத்தினுள் நுழைய இந்த மையத்தினால் வழங்கப்படும் பிரத்தேய உடைகளை கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். இங்குள்ள பெண்களுக்கான தீர்த்த குண்டத்தின் மேற்கூரையில் வெறும் இயற்கை மூலிகைகளை கொண்டு வரையப்பட்ட 'கும்பமேளா' நிகழ்வின் உயிரோவியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo: www.dhyanalinga.org

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

இங்கு தியான லிங்கம் அமைந்திருக்கும் கூடமானது ஒரு கட்டிடக்கலை அதிசயம் என்றே சொல்லலாம். ஆம், அந்த கூடத்தினுள் நாம் எழுப்பும் சிறு ஒளியும் கூட பலமடங்கு சத்தமாக எதிரொலிக்கிறது. இந்த தியான லிங்கம் 1999ஆம் ஆண்டு முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

இந்த மையத்தின் முக்கிய நிகழ்வாக மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்நாளின் போது சத்குரு ஜக்கி வாசுதேவின் சத் சங்கம், இசை நிகழ்ச்சிகள், தியான லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிவராத்திரி கொண்டாட்டங்கள் அடுத்த நாள் காலை வரை தொடர்கின்றன.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

தியான லிங்க மையத்தின்சில புகைப்படங்கள்.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

தியான லிங்க மையத்தின்சில புகைப்படங்கள்.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

தியான லிங்க மையத்தின்சில புகைப்படங்கள்.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

தியான லிங்க மையத்தின்சில புகைப்படங்கள்.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

தியான லிங்க மையத்தின்சில புகைப்படங்கள்.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

தியான லிங்க மையத்தின்சில புகைப்படங்கள்.

தியான லிங்கம் :

தியான லிங்கம் :

தியான லிங்கம் அமைந்திருக்கும் 'கோவை' நாகரை எப்படி அடைவது ? அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்