» »" டர்ட்டி பிக்சர்ஸ் " படக் காட்சிகள் கர்நாடகத்தில் எங்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியுமா?

" டர்ட்டி பிக்சர்ஸ் " படக் காட்சிகள் கர்நாடகத்தில் எங்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியுமா?

Written By: Balakarthik Balasubramanian

கர்நாடக மாநிலத்தின் மகுடம் என்றழைக்கப்படும் பிடார் மாவட்டம், வடகிழக்கு முனைகளில் அமைந்திருக்கும் மிக உயர்ந்த நகரமாகும். இந்த பிடார் என்னும் சொல்லுக்கு கன்னட மொழியில் 'பிடிரு' என பொருளாகும். அப்படி என்றால்...மூங்கில் என அர்த்தமாகும். ஆம், மூங்கில் மரங்களின் அழகிய காட்சியால் அன்று அலங்கரிக்கப்பட்ட இந்த பகுதி இப்பெயர் பெற்றதாகவும் நமக்கு தெரிய வருகிறது.

தொல்பொருளியல் துறை, அருங்காட்சியகங்கள், மற்றும் பாரம்பரியத்தால் "விசித்திரமான நினைவு சின்னங்கள் நிறைந்த நகரம்" என்றழைக்கப்படும் இந்த பிடார், புத்தகத்தின் வாயிலாக "பிடார் பாரம்பரியம்" என்றும் அழைக்கப்பட்டு வந்தது. ஏனெனில், ஏறத்தாழ...பிடார் நகரத்தின் உள் மற்றும் வெளிப்புறங்களில் 30 கல்லறைகள் காணப்பட்டன.

இந்த நகரம், விரைவில் நகர்புறமாக்கப்பட்டு, எல்லைகளை தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு பிரித்து தரப்பட்டது. வரலாறு மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிடார் பகுதி, கன்னட திரைப்படதுறைக்கு படப்பிடிப்பு தளமாகவும் சிறந்து விளங்கியது.

பாரம்பரியத்தை பற்றி அதிகம் பேசப்படும் இந்த பிடார் நகரத்தை...மயூர்யா, சாலுக்கியர், கடம்பர், என பல வம்சத்தினரும் ஆட்சி செய்தனர். பித்ரி கைவினை பொருட்களுக்கும், வீடுகளுக்கும் பெயர்பெற்ற இந்த பிடார் நகரம், இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானப்படை பயிற்சி மையம் என்ற பெருமையுடனும் நிமிர்ந்து நிற்கிறது.

பிடார் கோட்டை:

Amit chattopadhayay

இங்கே காணும் கட்டிடக்கலையின் மூலம் பாமனி வம்சத்தின் கதைகள் பேசப்படுகிறது. அரச வம்சமான சுல்தான் அல்லா உத்தின் பாமன் ஷாஹ், தன்னுடைய தலைநகரை குல்பர்காவிலிருந்து பிடாருக்கு மாற்றிகொண்டதால்...இந்த பிடார் கோட்டையானது கட்டப்பட்டது. 1427ஆம் ஆண்டிற்கு பிறகு பெர்சியன் பாணியில் இதன் கட்டிடக்கலைகள் நிறுவப்பட்டது. மேலும், இந்த கோட்டையில் 30 நினைவுசின்னங்களும் வளாகத்தில் அமைந்திருக்கிறது.

பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய, வித்ய பாலன் மற்றும் இம்ரான் ஹாஷ்மி நடித்த "தி டர்ட்டி பிக்ஸர்" படத்தின் இஷ்க் சுஃபியா பாடல் இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த பாடல் காட்சியை வெளிப்படையாக படக்குழு பதிவு செய்துகொண்டிருக்க, கோட்டையின் வெளிப்புறத்தில் ஒரு பெரும் திரளே கூடி நின்று வேடிக்கை பார்த்ததாம். இந்திய தொல்லியல் ஆய்வு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த கூட்டத்தை கட்டுபடுத்தியதாகவும் நமக்கு தெரிய வருகிறது.

இது அல்லாமல், கன்னட திரைப்படங்களான பாரா மற்றும் சஞ்சு வெட்ஸ் கீதா ஆகிய திரைப்படங்களின் காட்சிகளும் இங்கே தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கோட்டையின் சில பகுதிகள் இடிந்த நிலையிலும், உடைந்த நிலையிலும் காணப்பட, இன்றும் மாபெரும் தோற்றத்துடன் இந்த கோட்டை தனக்கென்ற புகழை தாங்கிகொண்டு நிற்கிறது.

பிடார் கோட்டையின் வரலாறு:

Vamsi Rimmalapudi

இந்த கோட்டை, முன்பு வேறு வெளித்தோற்றத்துடன் காணப்பட, பழங்காலத்து கோட்டையை அஹமத் ஷா வாலி பாமன் என்பவர் கட்டியதாக தெரிய வருகிறது. அதன்பின்னர், 14ஆம் நூற்றாண்டில்., துக்லக் வம்சத்தின் உலுக் கான் என்பவரால் இது கைப்பற்றதாகவும் நமக்கு தெரிய வருகிறது.

அதன்பின்னர், மீண்டும் ஒரு காலத்தில் பாமனி வம்சத்தவரான, சுல்தான் அல்லா-உத்-தின் பாமன் ஷா என்பவரால் கைப்பற்றப்பட்டு, தன் பேரரசின் தலை நகரமாக பிடாரை அறிவித்ததாகவும் நாம் அறிகிறோம். அதன்பிறகு, இந்த கோட்டையை மீண்டும் கட்டிய அவர்... மசூதிகளையும், தோட்டங்களையும், அரண்மனைகளையும் கோட்டையோடு சேர்த்ததாகவும் வரலாற்றின் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.

1627ஆம் ஆண்டு, பிடார் கோட்டையானது முகலாய அரசரான அவுரங்கஷிப்பின் கைகளில் கிடைத்தது. அவரின் ஆட்சிக்கு பிறகு, மற்ற சில முகலாய அரசர்களின் கைகளுக்கும் இந்த பிடார் கோட்டை செல்ல, அவர்களும் அதனை ஆண்டு வந்துள்ளனர்.

பிடார் கோட்டையின் கட்டிடக்கலை:

இந்த கோட்டை மீண்டும், சிவப்பு பின்புற கல் மற்றும் நாற்கரம் வடிவ அமைப்பு கொண்டு தனித்தன்மையுடன் கட்டப்பட...இந்த பிடார் கோட்டையை மூன்று அகழிகள் சூழ்ந்திருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மேலும், விண்ணை முட்டும் பார்வையாளர் மண்டபம் (திவான்-ஐ-ஆம்), பெரும் நீரூற்று, வாசனை குளியல் இடம், அரச வாயில்கள் என நாம் பெருமூச்செறிந்து வாயை பிளந்து தான் காட்சிகளை கண்டு நிற்கிறோம். இங்கே ஏழு கதவுகள், வெவ்வேறு பெயர்களுடன் காணப்பட...அவை, மன்டு டர்வாஷா (முக்கிய வாயில்), கல்மத்கி டர்வாஷா, கும்பட் டர்வாஷா என்னும் பெயர்களால் பட்டியல் நீண்டபடி செல்கிறது.

கோட்டையில் காணும் நினைவு சின்னங்கள்:

Alosh Bennett

"ரங்கீன் மஹால்" எனப்படும் சாபமிடாத அரண்மனை, இதனை 'வர்ணஜால அரண்மனை' என்றும் அழைப்பர். ஆம், வண்ணங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பளிங்கு வடிவமைப்பு, முகலாயர்களின் ராஜ வாழிடத்தை உணர்த்துவதாகும். இந்த நினைவு சின்னம்., ஸ்டுக்கோ கலை, மர சிற்பங்கள், நேர்த்தியான எழுத்துக்கள் என அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ரங்கீன் மஹாலின் மேற்கூரையானது...ஒட்டுமொத்த பிடார் கோட்டையின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

சோலா கம்பா மஸ்ஜித் எனப்படும் மசூதிக்கு இப்பெயர் வரக் காரணமாக மசூதி முன்புறம் காணப்படும் 16 தூண்கள் இருக்கிறது. இந்தியாவில் காணப்படும் பெரிய மஸ்ஜித்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.

ககன் மஹால், தாக் மஹால் (திவான்-ஐ-காஸ்), டர்காஷ் மஹால், ஜாமி மஸ்ஜித் என நிறைய நினைவு சின்னங்கள் இந்த பிடார் கோட்டையில் காணப்படுகிறது.

நுழைவு விபரங்கள்:

இந்த பிடார் கோட்டையானது காலை 8 மணி முதல் மாலை 6.30 வரை, வாரத்தில் அனைத்து நாட்களும் திறந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு சும்மாவே செல்ல அனுமதி வழங்க, புகைப்படம் மற்றும் காணொளிகளும் எந்த வித கட்டணமுமின்றி நம்மால் எடுத்துகொள்ள முடிகிறது.

பிடார் கோட்டைக்கு செல்வது எப்படி:

Abhinaba Basu

ஆகாய மார்க்கமாக:

பிடாரிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹைதராபாத்தில் காணப்படும் ராஜிவ் காந்தி விமான நிலையம் தான் அருகில் காணப்படும் ஒன்றாகும். இந்த விமான நிலையத்திலிருந்து முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை என பல இடங்களுக்கு சேவை இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நிறைய கார்கள் சுற்ற, அது நம்மை பிடாருக்கும் அழைத்து செல்கிறது.

தண்டவாள மார்க்கமாக:

பிடாரில் இரயில் நிலையம் அமைந்திருக்க, முக்கிய நகரங்களான பூனே, அவுரங்காபாத், ஹைதராபாத் என பல இடங்களுக்கு இரயில் சேவை இங்கிருந்து இயக்கப்படுகிறது. பிடார் கோட்டையிலிருந்து 2.4 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த இரயில் நிலையம அமைந்திருக்கிறது.

சாலை மார்க்கமாக:

கர்நாடக மாநிலத்தின் அனைத்து நகரங்களின் வழிகளும் மிகவும் அருமையாக இருக்க, தேசிய நெடுஞ்சாலை 9 இன் வழியாக பக்கத்து மாநிலங்களிலிருந்து நாம் எளிதில் பிடாரை அடைய முடிகிறது. அதேபோல், பக்கத்து நகரங்களுக்கு நாம் செல்வதற்கு ஏதுவாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

Read more about: travel fort