Search
  • Follow NativePlanet
Share
» »பழவேற்காடு சரணாலயத்துக்கு போயிருக்கீங்களா?

பழவேற்காடு சரணாலயத்துக்கு போயிருக்கீங்களா?

By Udhaya

புலிகாட் எனப்படும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் , பழவேற்காட்டின் முதன்மையான பார்வையிடமாகும். இது சர்வதேச அளவில் பழவேற்காடு வனவிலங்குகள் சரணாலயம் என்று அறியப்படுகிறது. சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இது மிகவும் சிறப்பான சுற்றுலாத் தளமாகும். இந்த வாரஇறுதிக்கு பழவேற்காடு சரணாலயம் போலாமா?

பரந்து விரிந்த சரணாலயம்

பரந்து விரிந்த சரணாலயம்

481 கிமீ அளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த பாதுகாக்கப்பட்ட சரணாலயம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பரவி உள்ளது. ஒடிசா மாநிலத்திலுள்ள நாட்டிலேயே மிகப்பெரிய உப்பு நீர்நிலையான சில்கா ஏரிக்குப் பிறகு, இரண்டாவது பெரிய உப்பு நீர்நிலையாக இருக்கும் பழவேற்காடு ஏரி மற்றும் சரணாலயம் ஆகியவை தேசிய அளவில் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளன.

McKay Savage

பன்முகதன்மை

பன்முகதன்மை

இந்த சரணாலயத்தின் மனம் மயங்க வைக்கும் உயிர்பன்முகதன்மை எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களை பழவேற்காட்டை நோக்கி ஈர்க்கும் முக்கிய அம்சமாக உள்ளது. பெரிய பிளமிங்கோஸ், பெலிகன்ஸ், சீ கல்ஸ், ஈக்ரட்ஸ், ஹெரான், பல்வேறு வகையிலான வாத்துகள் மற்றும் கைட் ஆகியவை இந்த சரணாலயத்தில் பரவலாக காணப்படும் பறவைகளாகும்.

McKay Savage

சுற்றுலா

சுற்றுலா

இந்த சரணாலயம் அமைந்திருக்கும் இடம் தமிழ் நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பல்வேறு இடம் பெயரும் பறவையினங்களுக்கு தற்காலிக இருப்பிடமாக திகழும் இந்த சரணாலயத்திற்கு நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் வந்து செல்வது நல்ல அனுபவத்தைத் தரும். டிசம்பர்-ஜனவரி மாதங்களில் சுற்றுலாத் துறையினரால் நடத்தப்படும் பிளமிங்கோ திருவிழா பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது.

Srisez -

எங்கு அமைந்துள்ளது

எங்கு அமைந்துள்ளது

தமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் அமைவிடமாக இருந்த பழவேற்காடு என்ற இந்த சிறு நகரம் அதிர்வுகள் மற்றும் மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது. டச்சுக்காரர்களால் பெருமளவில் ஆளப்பட்ட இந்த நகரத்தின் வரலாறு அவர்களோடு மட்டும் நின்று விடவில்லை; போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் கூட பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய வலிமையான எல்லைகளை இந்நகரத்தை சுற்றி அமைத்துக் கொண்டு இதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பங்களித்தருக்கின்றனர்.

Jyothirmayi V

 பெருமைகள்

பெருமைகள்

கடல் துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் இருக்கும் இந்த இடம், முந்தைய நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது. பழவேற்காட்டிலுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலை ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. இந்த நீர்நிலையின் தண்ணீர் நன்னீரை விட அதிகமான உப்புத் தன்மையுடன் இருந்தாலும், இது கடல் நீர் கிடையாது. இந்த புவியியலமைப்பில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம் பறவைகள் சீசனில் பல்வேறு இடம் பெயரும் பறவைகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது. இந்த ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளை கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது.

Pranayraj1985

 மற்ற சுற்றுலாத் தளங்கள்

மற்ற சுற்றுலாத் தளங்கள்

பழவேற்காட்டில் டச்சு சர்ச், டச்சு கல்லறை, கலங்கரை விலக்கம், சிந்தாமணீஸ்வரர் கோவில் மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய எண்ணற்ற கண்கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இங்கிருக்கும் கட்டிடங்கள் மற்றும் வடிவமைப்புகளான தேவாலயங்கள், பழமையான கட்டிடங்கள் மற்றும் கல்லறைகள் டச்சுக் கலையின் தாக்கத்திற்குட்பட்டு, டச்சு நாட்டுப் பாணியிலேயே இருப்பதை இன்றும் காணலாம்.

McKay Savage

எப்படி அடையலாம்

எப்படி அடையலாம்

சென்னை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை சாலை வழியாக எளிதில் அடைய முடியும். மிதவெப்ப மண்டல பருவநிலையை எதிர் கொண்டுள்ள பழவேற்காட்டிற்கு வருடம் முழுவதும் செல்ல முடியுமென்றாலும், சுட்டெறிக்கும் கோடைகாலங்களிலும் மற்றும் அதீதமான மழைப்பொழிவு காலநிலைகளிலும் வராமலிருப்பது நன்று. இயற்கையான அழகு, மனம் மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் வளமையான கலாச்சார வரலாறு ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் விருப்பமான இடமாக பழவேற்காடு விளங்குகிறது.

Manvendra Bhangui

Read more about: travel lake
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more