» »அசர வைக்கும் நார்த் கோவா , அதிர்ச்சியூட்டும் சவுத் கோவா - நீங்க எங்க போகணும்னு தெரியுமா?

அசர வைக்கும் நார்த் கோவா , அதிர்ச்சியூட்டும் சவுத் கோவா - நீங்க எங்க போகணும்னு தெரியுமா?

Written By: Udhaya

கோவா, இளைஞர்களா இருக்குற எல்லாருமே இந்த ஒரு அனுபவத்த மட்டும் மறக்கவே மாட்டோம். கோவா போன கதைனு நினைச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்ல. கடைசி வரைக்கும் கோவா போறோம், கோவா போறோம்னு திட்டம் மட்டும் போடுற அனுபவத்ததா சொல்றோம்.

கோவா இயற்கையிலே மிக அழகான அமைவிடம். அங்க இருக்குற ஒவ்வொரு பகுதிக்கும் நாம சென்று வரணும்னு ஆசை படுறது எல்லா இளைஞர்களோட கனவாவே இருக்கு. வாய்ப்பு கிடைத்து கோவாவை ரசித்தவர்களை விட, கடைசி வரை திட்டமிட்டுக் கொண்டே இருப்பதுதான் நம்ம வேலையே..

சரி எப்பவாச்சும் கோவா போக வாய்ப்பு கிடைச்சா.. அட திருமணம் ஆன பிறகு கோவா பயணத்த விட பேச்சுலர் லைஃப்லயே கோவா போய்ட்டு வரணும், அதான் ஆத்ம திருப்தி. சரி .. எப்படியும் கோவா போய்டுவீங்க.. அதுக்கு முன்னாடி வடக்கு கோவாவுக்கும், தெற்கு கோவாவுக்கும் உள்ள வித்தியாசத்த தெரிஞ்சி வச்சிக்கோங்க..

வடக்கு கோவா

வடக்கு கோவா


இது கோவாவின் வடக்கு மாவட்டம் ஆகும். கடற்கரைகளும், கண்கவர்காட்சிகளும் நிறைந்த இடமாகும்.

தெற்கு கோவா

தெற்கு கோவா


இது கோவாவின் தெற்கு பகுதி மாவட்டமாகும். கொஞ்சம் தனிமையில் அழகை ரசிக்க நீங்கள் தெற்கு கோவாவுக்கு பயணிக்கலாம்

சுற்றுலாவுக்கு நார்த் தான் பெஸ்ட்

சுற்றுலாவுக்கு நார்த் தான் பெஸ்ட்

வடக்கு கோவா என்பது சிறந்த சுற்றுலாவுக்கான பகுதியாக கருதப்படுகிறது. அலைமோதும் கூட்டம், ஆட்டம், பாட்டம்னு களைகட்டும்.

தனிமை விரும்பிகளுக்கு சவுத்

தனிமை விரும்பிகளுக்கு சவுத்

அதே நேரத்தில் தனிமையில் இனிமைகாண , தங்கள் மனம்விரும்பியவர்களுடன் நேரம் செலவிட பெஸ்ட் என்றால் அது தெற்கு கோவாதான்.

மார்கோவ்

மார்கோவ்

தெற்கு மாவட்டத்தின் தலைநகர் பனாஜி. இங்கு பரவலாக உள்ளூர் மொழி பேசுபவர்களே அதிகம் இருக்கின்றனர்.

பனாஜி

பனாஜி


மார்கோவ் வடக்கு கோவா மாவட்டத்தின் தலைநகர்

சவுத் கோவாவில் இருக்கும் பீச்

சவுத் கோவாவில் இருக்கும் பீச்

அகோண்டா, பெனாலியம், போக்மலோ, கேவ்லோசிம், மேஜர்டா, மோபோர், பலோலிம் ஆகிய கடற்கரைகள் தெற்கு கோவாவில் உள்ளன.

நார்த் கோவா கடற்கரைகள்

நார்த் கோவா கடற்கரைகள்


அஞ்சுனா, அரம்பால், பாகா, பாம்பொலிம், கலங்குட்டே, கண்டோலிம், சாபோரா, டோனா பவுலா, மிராமர், மோர்ஜிம், சிங்குரியம் மற்றும் வகாடர் ஆகிய கடற்கரைகள் வடக்கு கோவாவில் உள்ளன.

தெற்கு கோவாவில் பார்ப்பதற்கு

தெற்கு கோவாவில் பார்ப்பதற்கு

இயற்கை அழகுகள், உள்ளூர் கலாச்சாரம், தேவாலயங்கள் மற்றும் அழகான வீடுகளும் இங்குள்ளன. சுற்றுலாவை மெருகேற்றும் பல விதமான இடங்கள் உள்ளன.

வடக்கு கோவாவில்

வடக்கு கோவாவில்


பீச், பீச், பீச் முற்றிலும் பீச்சிலேயே காலம் கழித்துவிடலாம். அந்த அளவுக்கு அழகான கடற்கரைகள் நிறைந்தது வடக்கு கோவா.

என்ஜாய் பண்ண என்ன இருக்கு?

என்ஜாய் பண்ண என்ன இருக்கு?

குறைந்த அளவே இரவு விருந்துகள், பெரும்பாலும் தனிமை இருந்தாலும் வெறுத்துபோகும் அளவுக்கு இல்லை.

நார்த் கோவா பார்ட்டிகள்

நார்த் கோவா பார்ட்டிகள்


வடக்கு கோவாவில் விருந்துகளுக்கும், கேளிக்கைகளுக்கும் சலிக்காமல் கொண்டாடலாம். இரவு நேர கேளிக்கை விருந்துகளும் ஆங்காங்கே நடக்கிறது.

காலநிலை

காலநிலை

வடக்கு கோவாவைப் பொறுத்தவரையில், அதிக ஈரப்பதத்துடன் இருக்கும், அதே நேரத்தில் தெற்கு கோவா ஈரப்பதம் குறைவாக இருக்கும்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

குறைவான மக்கள் கூட்டம், அமைதியான இடங்கள். உண்மையான பொருட்கள், தனித்தன்மையான பொருட்கள் வாங்க தெற்கு கோவா சிறந்த இடமாகும்.

சராசரி பட்ஜெட் ஷாப்பிங் செய்ய வடக்கு கோவா சிறந்தது.


இந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1

கொங்கனுக்கு ஒரு பைக் டூர்... ஜாலியா போகலாம் வாங்க!

ராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!

பொற்கோயிலில் இருக்கும் மர்மங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Read more about: travel, temple