Search
  • Follow NativePlanet
Share
» »சகுனியும், துரியோதனும், ராவணனும் கெட்டவர்களா? அப்போ இந்த இடங்கள் ஏன் உருவானது?

சகுனியும், துரியோதனும், ராவணனும் கெட்டவர்களா? அப்போ இந்த இடங்கள் ஏன் உருவானது?

By Udhaya

vநாம் குழந்தையாக இருந்தபோதே இது கெட்டது, இது நல்லது என்று புராணக்கதைகள் மூலம் நம் மனதில் சிலவற்றை பதியவைத்துவிடுகிறது இந்த சமுதாயம். மகாபாரதம், ராமாயணம், பைபிள் முதலிய சமய நூல்களில் நல்லவர்கள் என சிலரையும், கெட்டவர்கள் என சிலரையும் குறிப்பிட்டிருக்கும். அது நம்மை அறியாமலே நமக்குள் பதிந்துவிடும். சகுனி, ராவணன், துரியோதனன் எல்லாரும் கெட்டவர்கள் என நம் புராணக்கதைகள் நம் மனதில் பதியவைத்துவிட்டன. அப்படியானால் இந்த இடங்கள் ஏன் உருவானது.. வரலாறு திரிக்கப்பட்டதா.. இல்லை போலியான வரலாறு உருவாக்கப்பட்டதா. இதற்கான விடையை இந்த கோயில்களுக்கு சென்று காண்போம் வாருங்கள்.

காந்தாரி கோயில்

காந்தாரி கோயில்

மைசூரு நகர் அருகே அமைந்துள்ள ஹெப்பயா கிராமத்தில் உள்ளது இந்த காந்தாரி கோயில்.காந்தாரி என்பவர் கௌரவர்களின் தாய். மகாபாரதத்தை அறிந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இவளது முதல் மகன் தான் துரியோதனன். புராணக்கதையில் துரியோதனனும் அவனது சகோதரர்களும் கெட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்காக இந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது அப்படியானால் இவர்கள் இந்தமக்களின் தலைவர்களாக இருந்திருக்கலாம் அல்லவா. காந்தாரி எனும் கதாபாத்திரம் தங்களின் தலைவியாக கொண்டாடப்பட்டதன் விளைவே இங்கு கோயில் கட்டப்பட்டிருக்கவேண்டும். இருந்தாலும் புராணங்களினூடே வளர்ந்த நம் கதைகள் நம் மனதில் காந்தாரி எனும் கவுரவர்களின் தாயை கெட்டவராகவே எண்ணச்செய்கிறது. அவருக்காக அமைக்கப்பட்ட கோயில் விசித்திரமானதே..

மைசூரு அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

மைசூரு அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

மைசூர் மாநகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகிலுள்ள பல முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர். ஷீரங்கப்பட்டிணம், நஞ்சன்கூடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, தலக்காடு, மெல்கோட்டே, சோமநாதபுரா, ஹலேபேட், பேலூர், பண்டிபூர் தேசிய வனவிலங்கு பூங்கா, சிரவணபெளகொலா மற்றும் கூர்க்(குடகு) போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் மைசூர் மாநகருக்கருகில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

சாகசத்தை விரும்பும் மலை ஏறிகளுக்கு ராம் நகருக்கு அருகிலுள்ள மலைகள் அருமையான வாய்ப்பை தருகின்றன. இந்த இடம் மட்டுமில்லாமல் மைசூருக்கு அருகிலேயே சவண்துர்கா, கப்பல்துர்கா, தும்கூர் , துரஹள்ளி மற்றும் கனகபுரா போன்ற இடங்களிலும் மலை ஏற்றம் மேற்கொள்ள பொருத்தமான சூழல் உள்ளது. படாமி மற்றும் ஹம்பி போன்ற இடங்களில் உள்ள மலைப்பாறை அமைப்புகள் மைசூர் நகரத்துக்கு வருகை தரும் மலை ஏற்ற ஆர்வலர்களை பெரிதும் கவர்கின்றன.

பிலிகிரிரங்கணா மலை, சிக்மகளூர், ஹாஸன் மற்றும் குடகு போன்ற இடங்கள் நடைப்பயணம் மேற்கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு பொருத்தமான இடங்களாக விளங்குகின்றன.

Koushik

காக்கிநாடா ராவணன் கோயில்

காக்கிநாடா ராவணன் கோயில்

ராவணன் ராமாயணத்தில் மிகப்பெரிய வில்லனாக சித்தரிக்கப்படுபவர். சிலர் இவரை தமிழ் மன்னன் என்றும் கூறுகிறார்கள். பத்துத் தலை கொண்டவராக போற்றப்படும் ராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் வைத்திருந்ததாகவும், அவரிடமிருந்து தன் மனைவியை மீட்க ராமர் இலங்கைக்கு சென்றதாகவும் கதைகள் உண்டு. ஒரு ஆணுக்கு உதாரணமாக சொல்ல ராமனை எடுத்துக்காட்டுவது இன்றும் நமக்கிருக்கும் பழக்கம். ஆனால் ராவணனை எப்போது வில்லனாகவே சித்தரிக்கின்றனர். அப்படிபட்ட ராவணனுக்கு காக்கிநாடாவில் மிகப் பெரிய கோயில் ஒன்று உள்ளது.

கோயிலுக்குள்ளே ராவணனின் மிக அழகிய சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறைய பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

Gane Kumaraswamy

காக்கி நாடா

காக்கி நாடா

காக்கி நாடா அருகிலேயே ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன. இங்கு எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. கௌதமி கிரந்தாலயம், கோடிலிங்கேஸ்வரா கோயில், பால திரிபுர சுந்தரி கோயில் என நிறைய இடங்கள் அமைந்துள்ளன.

கோடி லிங்கேஸ்வரா கோயில்

காகிநாடா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் த்ரக்ஷாராமம் கோயிலுக்கு அருகிலேயே இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் வீற்றுள்ளது. இது ராஜமுந்திரி நகரத்திற்கு அருகிலேயே உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ராஜமுந்திரியின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான பக்தர்கள் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் பாவங்களை கழுவும் சக்தி இந்த திருத்தலத்துக்கு உள்ளதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. புராணிகக்கதைகளின்படி, கௌதமரிஷியால் சபிக்கப்பட்ட இந்திரக்கடவுள் இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் ஸ்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து தன் சாபத்திலிருந்து விடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு லட்சம் ஆறுகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் மூலம் இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வித்து பாபவிமோசனம் பெற்றதாக மேலும் ஐதீகக்கதைகள் கூறப்படுகின்றன.

Adityamadhav83

 கர்ணன் கோயில்

கர்ணன் கோயில்

உத்தரகண்ட்டில் கர்ணனுக்கு கோயில் உள்ளது தெரியுமா. ஆமா கர்ணன் கதாபாத்திரம் மகாபாரதத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. அவரின் செயல்கள் எல்லாருக்கும் தெரியும். கர்ண பரம்பரை என்று இன்றளவும் சொல்லாடல் உண்டு. ஆனால் கர்ணனை எப்போதும் பாண்டவர்களில் ஒருவனாக பார்ப்பதில்லை. அப்படி இருக்க கர்ணனுக்கு அதுவும் வட இந்தியாவில் கோயில் இருப்பது நிச்சயம் ஆச்சர்யத்தை தரும். குந்தி தேவியின் மூத்த மகனே கர்ணன் ஆவார். அவர் கருணை உள்ளம் கொண்டவர்.

Suryabeeldje

உத்தரகண்ட்டின் மற்ற சுற்றுலாத் தளங்கள்

உத்தரகண்ட்டின் மற்ற சுற்றுலாத் தளங்கள்

இயற்கை எழில் மிளிரும் 13 மாவட்டங்களை கொண்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலா அம்சங்களுக்கு குறைவேயில்லை. புதிய புதிய இடங்களும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சியடைவதால் இங்குள்ள சுற்றுலாத்தலங்களின் பட்டியலானது நீண்டு கொண்டே தான் செல்கிறது. ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் முதல் இயற்கைக்காட்சிகள் மற்றும் சாகச மலையேற்ற பயணங்கள் வரை எல்லா அம்சங்களையும் இங்குள்ள சுற்றுலாத்தலங்கள் பயணிகளுக்கு வழங்குகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தின் ஏரி மாவட்டம் என்ற சிறப்பை கொண்டுள்ள நைனிடால் பகுதி கடல் மட்டத்திலிருந்து1938 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் 1841ம் ஆண்டில் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக ஒரு விடுமுறை ஸ்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.

Sumod K Mohan

துரியோதனன் கோயில்

துரியோதனன் கோயில்

துரியோதனனுக்கு இருக்கும் ஒரே கோயில் இதுதான். இந்து மத புராணங்களின் படி துரியோதனன் தவறானவன். அவனை எதிரியாகத்தான் சித்தரிக்கிறது. இதனால் மற்றவர்களைப் போல் அல்லாமல் துரியோதனுக்கு கோயில் இருப்பது நிச்சயம் ஆச்சர்யப்படவேண்டியதுதான்.

துரியோதனன் தென்னிந்தியாவுக்கு சென்று அங்கு மலநாட்டில் இருந்ததாக புராணம் கூறுகிறது. அங்கு இருந்த மக்கள் அவரை தெய்வமாக கருதி கோயில் கட்டியதாகவும் சில வாய்வழி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் வரலாற்று திரிபாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் புராணக்கதையில் வில்லனாக சித்தரிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தென்னகத்தை சார்ந்தவர்களே. இதுகுறித்து போதிய தெளிவு இல்லாவிட்டாலும், இந்த கோயில் கேரளாவில் அமைந்திருப்பது ஆச்சர்யம்தான்.

Ramanarayanadatta astri

கொல்லம் சுற்றுலாத் தளங்கள்

கொல்லம் சுற்றுலாத் தளங்கள்

எண்ணற்ற எழில் அம்சங்களையும், சுற்றுலா ஸ்தலங்களையும் தன்னுள் கொண்டுள்ள கொல்லம் நகரம் வருடம் முழுதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க தவறுவதில்லை. கொல்லம் பீச், தங்கசேரி பீச், அட்வெஞ்சர் பார்க் மற்றும் திருமுல்லாவரம் பீச் போன்றவை பயணிகளுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களாகும். இவை தவிர, அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம், மன்ரோ தீவு, நீண்டகரா துறைமுகம், அலங்கடவு படகுக்கட்டுமான தளம் மற்றும் சாஸ்தாம்கொட்டா ஏரி ஆகியவை ரம்மியமான இயற்கை எழில் நிரம்பிய சுற்றுலாஸ்தலங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. ராமேஷ்வரா கோயில், அச்சன்கோயில் மற்றும் மயநாட் போன்றவையும் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களாகும். மாதா அமிருதானந்தா மாயி'யின் அமிருதபுரி ஆசிரமமும் ஒரு முக்கியமான ஆன்மிக யாத்திரை ஸ்தலமாக கொல்லத்தில் புகழ் பெற்றுள்ளது. ஆரியங்காவு, சவரா, கொட்டாரக்கரா, ஓச்சிரா மற்றும் கருநாகப்பள்ளி போன்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.

Arunvrparavur

சகுனி கோயில்

சகுனி கோயில்

கேரளத்தில் பவித்ரேஸ்வரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். சகுனி மகாபாரதத்தில் எதிரியாக சித்தரிக்கப்படுபவர். அவருக்கு கேரள மாநிலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனின் அருள் பெற்ற சகுனி கடவுளாக போற்றப்படுவதாக இங்குள்ள புராணக் கதை கூறுகிறது.

Girishchavare

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more