என்ன தான் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், ஐயர்ன்மேன் என சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இந்தியாவின் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் வாயு புத்திரனான பகவான் ஆஞ்சநேயர் தான். சூரியனையே கனி என்று நினைத்து பறிக்கத்துடித்த அனுமன் இந்த பேரண்டம் இருக்கும் வரை வாழும் சிரஞ்சீவி ஆவார்.
நட்பிற்கு இலக்கணமும், இலக்கியமுமாக திகழ்ந்த அனுமன் எங்கே பிறந்தார் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் மற்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. அப்படி அனுமன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆஞ்சநேரி மலையில் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த இடத்தைப்பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஆஞ்சநேரி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரில் இருந்து 20கி.மீ தொலைவில் திரிம்பகேஸ்வரர் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது ஆஞ்சநேரி மலை.
இங்கு தான் அனுமன் பிறந்த இடம் இருப்பதாக பல புராண குறிப்புகளில் சொல்லப்படிருக்கின்றன.
Nagraj Salian

ஆஞ்சநேரி:
அனுமனின் தாயாரான அஞ்சனா இந்த மலையில் வாழ்ந்துவந்தாராம். அவருக்கென்று இங்கே ஒரு கோயில் இருக்கிறது.
அனுமன் தனது பால்யகாலத்தை இந்த ஆஞ்சநேரி மலையில் தான் கழித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
Nagraj Salian

ஆஞ்சநேரி:
அனுமான் ஜெயந்தி பண்டிகையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலைக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் அனுமனுக்கு உகந்ததாக சொல்லப்படும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் அதிகளவில் இங்கே வருகின்றனர்.
Nagraj Salian

திரியம்பகேஸ்வரர் கோயில்:
ஆஞ்சநேரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கிருந்து வெகு அருகில் அமைந்திருக்கும் ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றான திரியம்பகேஸ்வரர் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இங்கே சிவபெருமான் மும்மூர்த்திகளின் ரூபமாக காட்சி தருகிறார்.
Niraj Suryawanshi

ஆஞ்சநேரி:
நாசிக் நகருக்கு என்றாவது செல்லும் வாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் ஆஞ்சநேரி மலைக்கும், திரியம்பகேஸ்வரர் கோயிலுக்கும் சென்று வாருங்கள்.
ஆஞ்சநேரி மலையைப்பற்றி மிகக்குறைந்த அளவிலான தகவல்களே இருக்கின்றன.
Nagraj Salian

பிற ஸ்தலங்கள்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் இருக்கும் ஆஞ்சநேயா மலையில் பிறந்தார் என்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா மாவட்டத்தில் இருக்கும் அஞ்சன் என்ற ஊரில் தான் அனுமன் பிறந்ததாகவும், கோகர்நாவில் உள்ள ஹனுமான் ஜன்மபூமி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுஜங்கர்க் என்ற இடத்திற்கு பக்கத்தில் உள்ள அஞ்சன் தாம் என அனுமன் பிறந்த இடத்தைப்பற்றி பல்வேறு மாறுபட்ட கருத்துகள் சொல்லப்படுகின்றன.
Thomas Alexander