» »இந்துக்களால் கட்டப்பட்ட இஸ்லாமிய மசூதி!! ராஜஸ்தானின் பொக்கிஷம்

இந்துக்களால் கட்டப்பட்ட இஸ்லாமிய மசூதி!! ராஜஸ்தானின் பொக்கிஷம்

Posted By: Udhaya

அதை தின் கா ஜான்ப்ரா பொதுவாக ஷெட் ஆஃப் 2 1/2 டேய்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மசூதி அஜ்மீரில் அமைந்துள்ளது. கிபி 1192ம் ஆண்டு கட்டப்பட்ட இது கிபி 1199ம் ஆண்டு நிறைவுபெற்றது.

இந்த மசூதி ராஜஸ்தானின் சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்குகிறது. இதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்திய ஆப்கன் கூட்டு

இந்திய ஆப்கன் கூட்டு

இந்தோ- இஸ்லாமிக் ஆர்க்கிட்டெக்சர் என்பது இந்திய கொத்தனார்கள் ஆப்கன் மேற்பார்வையாளர்களின் கீழ் கட்டப்பட்ட ஒரு அமைப்பாகும். அதை தின் கா ஜான்ப்ராவும் இதுமாதிரியாகத்தான் கட்டப்பட்டுள்ளது. தற்போது இது இந்திய தொல்லியல் துறை வசம் உள்ளது.

Varun Shiv Kapur

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்


இதன் பெயருக்கு இரண்டரை நாள்களின் கட்டிமுடிக்கப்பட்ட என்று பொருளாம். அதாவது, இந்த மசூதியின் முக்கிய பகுதிகள் வெறும் இரண்டரை நாட்களில் கட்டப்பட்டதாகவும், இதன் கட்டுமான நுணுக்கங்கள் இப்போதுள்ள எந்த பொறியாளருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Varun Shiv Kapur

 இந்துக்களால் கட்டப்பட்டது

இந்துக்களால் கட்டப்பட்டது

இந்த மசூதி அந்த காலத்தில் வாழ்ந்த இந்து கொத்தனார்களால் கட்டப்பட்டுள்ளது என்பது வரலாற்று குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. அவர்களுக்கு மேற்பார்வையாளர்களாக ஆப்கனைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் அந்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Arefin.86

 டெல்லி மசூதியைவிட பெரியது

டெல்லி மசூதியைவிட பெரியது

இந்த மசூதி டெல்லியில் உள்ள குவட் உல் இஸ்லாம் மசூதியை விட பெரியதாகும். இது கட்டமாக இருக்கும் இதன் அமைப்பு, அனைத்து பக்கமும் 259அடி என்ற சமமான அமைப்பு கொண்டது.

Varun Shiv Kapur

நுழைவு

நுழைவு


இரண்டு நுழைவு வாயில்கள் கொண்ட இந்த மசூதி, மேற்கு திசையில் அமைந்துள்ளது. ஒரு வாயில் தெற்கு பக்கமாகவும், மற்றொரு வாயில் கிழக்கு பக்கமாகவும் உள்ளது. வடக்கு திசையில் மலை அமைந்துள்ளது.

Varun Shiv Kapur

குவிமாடங்களும் தூண்களும்

குவிமாடங்களும் தூண்களும்

இந்த மேற்கு புறமானது 10 குவிமாடங்களையும், 124 தூண்களையும் கொண்டது. 92 தூண்கள் கிழக்கு பக்கத்திலும், மீதி இரண்டு பக்கங்களில் முறையே 64 தூண்களும் அமையப் பெற்றுள்ளன.

Varun Shiv Kapur

 அழிந்து வரும் தொன்மை

அழிந்து வரும் தொன்மை


இந்த தொன்மைவாய்ந்த மசூதி தற்போது மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. மொத்தம் 344 தூண்கள் கொண்ட இந்த இடத்தில் தற்போது, வெறும் 70தூண்களே நிற்கின்றன.

Varun Shiv Kapur

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அனாசாகர் ஏரி, அஜ்மீர் ஜெய்ன் கோயில், நரேலி ஜெய்ன் கோயில்,அக்பர் மாளிகை மற்றும் அருங்காட்சியகம், தௌலத் பாக் பூங்கா, ஷா ஜகான் மசூதி, பிர்லா சிட்டி நீர்ப் பூங்கா உள்ளிட்ட எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் அருகில் உள்ளன.

Debabrata Ghosh

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

ராஜஸ்தானின் அஜ்மீர் நகரத்திலிருந்து 2.4கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். 12நிமிடத்தொலைவில் உள்ள அதை தின் கா ஜான்ப்ராவுக்கு தயானந்த் சந்தை, கெய்சர் - கஞ்ச் சாலை வழியாக எளிதில் சென்றடையலாம்.

காலநிலை

காலநிலை

பொதுவாகவே ராஜஸ்தானில் பகல் நேரத்தில் அதிக வெப்பமாகவும், இரவு நேரத்தில் அதிக குளிராகவும் இருக்கும். மழையும் வெய்யிலும் அல்லாத நேரங்களில் செல்வது சிறப்பு. எனினும் தகுந்த பாதுகாப்பு உடைகளோடு செல்வதால், காலநிலை குறித்த கவலைப்பட தேவையில்லை.

Read more about: rajasthan, ajmer, india