» »கண் திருஷ்டி போக்க வழிபட வேண்டிய சக்திவாய்ந்த கோவில் இது தெரியுமா?

கண் திருஷ்டி போக்க வழிபட வேண்டிய சக்திவாய்ந்த கோவில் இது தெரியுமா?

Posted By: Udhaya

கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது. இப்படி நம்ம ஊர்கள்ல பெரியவங்க பலர் பேசிப்பாங்க. திடீரென்று உடல் நிலை சரியில்லாம போறது, வயிற்று வலியால அவதிப்படறது இப்படி வர்ற பிரச்சனைகளெல்லாம் கண் திருஷ்டியால வருதுனு பெரியவங்க சொல்வாங்க. கண் திருஷ்டி அப்படின்னா என்ன?

கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. நம்மை பார்த்து பொறாமை படும் ஒருவர் அதிக வயித்தெறிச்சலுடன் பார்க்கும்போது கண் திருஷ்டி வருவதாக சொல்லப்படுகிறது.

நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.

சரி இதுல இருந்து விடுபட என்ன செய்யலாம் எந்த இறைவனை வழிபடலாம் எந்த கோவிலுக்கு செல்லலாம் னு இந்த பதிவுல பாக்கலாம்.

வெள்ளை விநாயகர் கோவில்

வெள்ளை விநாயகர் கோவில்

ஸ்வேத விநாயகர் கோவில் அல்லது வெள்ளை விநாயகர் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே அமைந்துள்ளது.

PC: Rsmn

வேறு பெயர்

வேறு பெயர்

சோழர்களின் ஆட்சியில், அரசவையில் பணிபுரிந்த அமைச்சர்கள் உட்பட பலர் இந்த கோவிலுக்குச் சென்று வருவதால் இது கோட்டை விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

PC: P.V.Jagadisa Ayyar

சிறப்பு

சிறப்பு


உற்சவர் விநாயகர் மனைவி சகிதமாக காட்சி தரும் தமிழகத்தின் ஒரே கோவில் இதுவாகும்.

PC: Rsmn

தல வரலாறு

தல வரலாறு

வல்லபை எனும் அரக்கி தேவர்களை துன்புறுத்தி வந்ததாகவும், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டதாகவும் கூறுகின்றனர். இதனால் அரக்கியை அழிக்க பிள்ளையார் வந்ததாகவும், அவளை தன் மடியில் ஏற்றி வைத்ததும் அரக்கி உருமாறி அழகிய பெண்ணானதாகவும் கூறுவர். பின்னர் அவளையே விநாயகர் மணம் புரிந்தார் என்கிறது தல வரலாறு.

PC: பா. ஜம்புலிங்கம்

 எவ்வாறு வழிபடலாம்

எவ்வாறு வழிபடலாம்

இங்குள்ள பிள்ளையாருக்கு அருகம்புல் மாலையும், கொழுக்கட்டையும் படைத்து வழிபட நாம் நினைத்ததை அவர் நடத்தி வைப்பார் என்கின்றனர் பக்தர்கள்.


PC: பா. ஜம்புலிங்கம்

திருவிழா

திருவிழா

ஆவணி மாதம் 10 நாள் திருவிழா நடைபெறும். இதில் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் நடைபெறும் விநாயகர் திருமணம் சிறப்பு.


PC: பா. ஜம்புலிங்கம்

செல்லும் வழி

செல்லும் வழி

சென்னையிலிருந்து சுமார் 323 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த வெள்ளை விநாயகர் கோவில்.

தஞ்சாவூரிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்திலும், திருச்சியிலிருந்து இரண்டு மணி நேரத்திலும் செல்லும் வகையில் அமைந்துள்ளது இந்த திருத்தலம்.

பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து செல்லும் வகையில் பேருந்து மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கேரளாவின் இயற்கை அழகை கண்டு ரசியுங்கள்